கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நிறுவனம், ஆண்டுதோறும் 70 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் ஹீரோ சைக்கிள் ஓம் பிரகாஷ் முஞ்சல் குறித்து பிரியா குமார் சுவைபட தந்திருக்கிறார்.
ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் பெரிய பிரச்சனையே அவர்களின் ஆபீஸ் இடத்திற்கு வாடகை கொடுப்பதுதான். அதாவது அவர்களே தங்களது நிறுவனத்தை நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மனதில் வாடகை மலையாக வந்து பயமுறுத்தும். இதை தவிர்க்கும் விதமாக இந்தியாவின் பல இடங்களிலும் கோ வொர்கிங் ஸ்பேஸ் வந்தது. அவற்றில் எல்லா வசதிகளும் கிடைத்தாலும் வாடகை என்பது சிறிது கூடுதலாகவே இருந்தது தான் ஒரு குறை. இதை போக்கும் விதமாக புதிதாக ஒரு மாடலை, ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி கண்டுபிடித்திருக்கிறது. அதாவது ஹோட்டல் அல்லது ரெஸ்டாரெண்ட், விடுதிகள் ஆகியவற்றில் அதிகம் கூட்டம் வராத சமயத்தில் அவர்களின் நாற்காலி, மேசை காலியாகத்தானே இருக்கும். அவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 25 ரூபாய் என்ற வகையில் வாடகைக்கு கோ வொர்கிங் ஸ்பேஸாக கொடுக்க பல இடங்களில் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். மேலும் காலியாக இருக்கும் ஆபீஸ் ஸ்பேஸ் போன்றவற்றுடனும் இவர்கள் அரேஞ்ச்மெண்ட் வைத்துள்ளனர்.
நாட்டில் புதுமை மற்றும் தொடக்கத் திறன்களை வளர்ப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பதை இலக்காகக் கொண்டது ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம். தொழில் வளம்தான் இந்தியாவை நிமிர்த்தும், வேலை வாய்ப்புக்களை உருவாக்கும், அதுவும் புதிய எண்ணங்களுடன் வரும் ஸ்டார்ட் அப்-கள் நாட்டை வளப்படுத்தும் என்பது தான் இந்த திட்டத்தின் எண்ணம். இதை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படும் கம்பெனிகள் தான் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் எனப்படும்.
ஸ்டார்ட்அப் கம்பெனிகள் என்றாலே புதுமையான ஐடியாக்களுடன் வருபவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாடியை சிறப்பாக வளர்ப்பது எப்படி என்று ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி தொடங்கி அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பெட்ரோல் விலை விர்ரென ஏறிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் ஆபத்பாந்தவனாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். அதுவும் குறிப்பாக பொருட்களை வீடுகளில் டெலிவரி செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் இரு சக்கர வாகனங்களை தாங்களே சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. இவர்களில் பெரும்பாலும் பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்களுக்கு தினசரி எரிபொருள் செலவு அதிகரித்து அவர்களுடைய வருமானம் குறைய நேரிடுகிறது. இவர்கள் எரிபொருள் சிக்கனம் மூலம் மாதம் 7000 ரூபாய் வரை சேமிக்க வழி வகை செய்யும் விதத்தில் ஒரு ஈ-பைக் கம்பெனி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
கொரோனா நம் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்திருக்கிறது. காண்டாக்ட் லெஸ் (contact less) என்பது பெரிய அளவில் நடைமுறைக்கு வரலாம்.
காலம் காலமாக விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளை தரகர்கள் மூலமாகத் தான் விற்று வந்திருக்கின்றனர். நேரடியாக உபயோகிப்பாளர்களுக்கு விற்று பழக்கமில்லை. இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கான பணம் மிகவும் குறைவாகவும், தாமதமாகவும் கிடைத்தது.
உலக சுகாதார மையம் (WHO), ஆயுஷ் (AYUSH), மற்றும் ஐஎஸ்ஓ (ISO) போன்ற அங்கீகாரங்களைப் பெற்ற, திருச்சியில் உள்ள ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனர் திருமதி. வீரஜோதி அவர்களை அலைபேசியில் பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனராக இருந்து நிறுவனத்தை திறம்பட இயக்கும் இவரது கணவர் திரு. மாரிமுத்து அவர்களும் பேட்டியில் இணைந்து கொண்டார்.
இன்று சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான். விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.
பூமியில் வசிக்கும் மானிடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!’ என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.