திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்கு NSR ஃபார்ம் ஃபிரெஷ் (NSR Farm Fresh). தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த குளிர்பதன கிடங்கு நிறுவனர் திரு. N.S.ரத்தினம் சந்திரசேகரன் அவர்கள் தனது மகன்களோடு சேர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார். இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய காய்கறி மொத்த வியாபார சந்தைக்கு பெயர்போன ஒட்டன்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், கம்பம், தேனி, கொடைக்கானல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எளிதில் சென்று அணுக முடிகிறது. சுற்றுவட்டார விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் பெருக வேண்டும். அப்போதுதான் நாடு செழிப்படையும். இதை கருத்தில் கொண்டு பல விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இப்போது உருவாகியுள்ளன
கண்ணன், சேலம்: ஒரு வணிக நிறுவனத்தின் முகப்பில் அல்லது வாசலில் கண்டிப்பாக பெயர் பலகை (Display of Name Board) வைக்க வேண்டுமா?
இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் உள்ளே நுழையும்போதே சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. சானிடைசரை டிஸ்பென்ஸ் செய்வதற்காக காலால் பெடல் மூலம் இயக்கப்படும் சானிடைசர் டிஸ்பென்சர் என்ற ஒரு இயந்திரம் கிட்டத்தட்ட கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இப்போது சந்தையில் விற்றுக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக கார்ட்போர்டு என்ற காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஸ்டாண்டுகளை பொறியியல் பட்டதாரி இளைஞர் திரு. கார்த்திக் ரத்தினம் ஒரு ஸ்டார்ட்அப்தொழிலாக ஆரம்பித்து இந்த தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
டீ கடைக்கு நாம் சென்றால் “நாலு டீயில் ரெண்டு அரை சக்கரை, ஒண்ணு சக்கரை இல்லாமல், ஒண்ணு நார்மல் சக்கரை” என சொல்லக் கேட்பது சகஜம். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களை சர்க்கரை நோய் பாடாய்ப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பது இனிப்புத் துளசி எனப்படும் சீனித்துளசி.
தரம் உங்கள் பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்டார்ட் அப் கம்பெனிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதை உங்களுக்கு இந்த தொடர் கட்டுரை மூலமாக எடுத்துரைக்கிறார் மதுரையை சேர்ந்த செல்வ சுந்தர் ராஜன். இவர் தர நிர்ணயம் பற்றி பல இடங்களில் வகுப்புகள் எடுத்து வருபவர்.
தனிநபர் வசிப்பிடமாக கருதப்படும் வீடுகளுக்கு செலுத்தப்படும் வாடகைக்கு சரக்கு மற்றும் சேவை வரிவிதிக்கப்படுகிறதா ?
தமிழகத்தின் பின்னலாடை நகரம் திருப்பூரில் இயற்கை சாயங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்து வருகிறார் இளைஞர் திவாகர். இவர் இயற்கை சாயங்கள் கொண்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்.
2800 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே முதன் முதலில் ஆந்திரா-கோல்கொண்டாவில்தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள்தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இன்றைக்கு உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம்
Covid19 Team) அமைக்கப்பட்டு அதன் மூலம், கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு 100 கோடி ரூபாய் உதவியாக வழங்க முடிவு செய்திருக்கிறது