சுய தொழில் தொடங்க வேண்டும் என்பவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது சென்னை கோன் பீட்சா” (CHENNAI CONE PIZZA). இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரும் பயிற்சியாளருமான நிர்மல், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.
அன்றாட தேவைகளுக்கு நவீன முறையில் தீர்வுகளை சுலபமாக வழங்குவதே இவர்களது நோக்கம். ஆமாம் ரொம்ப சிம்பிளாக உங்கள் சட்டை பாக்கெட்டில் சூப்பர் மார்க்கெட்டை செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அடுத்த வருடம் நுகர்வோர்களின் தேவைகளில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் சென்று அடுத்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், அப்படி தெரிந்து வைத்துக் கொண்டால்தான் உபயோகிப்பாளர்களின் மனங்களை புரிந்து கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய தயாரிப்புகளை நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல முடியும் எனக் கூறினால்
சமீப காலமாக ஸ்பைருலினா என்ற நீல பச்சை நிற சுருள் பாசி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் அதில் உள்ள பல வித மருத்துவப் பலன்களும், சக்தியும் தான்.
ரசாயனப் பொருட்கள் அடங்கிய குளிர்பானத்துக்கு மாற்றாக, தமிழர்களின் பாரம்பரிய பானங்களை ரசாயனக் கலப்பில்லாமல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் சென்னையை சேர்ந்த
இந்திய நாகரீகத்தை முன்னேற்றுவதிலும் , இந்தியாவை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கும் மார்வாரி நிறுவனங்களால் ஆற்றப்பட்ட தெளிவான ஆற்றல் மிக்க சிறப்பான பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூகோள ரீதியாக வட மாநிலமான கிழக்கு ராஜஸ்தானில் “மார்வார்” என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் மார்வாரிகள். 19ம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாப் ,உத்தரப் பிரதேசம், வங்காளம் ,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா என இவர்கள் இல்லாத மாநிலமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். நம்மூரில் செல்லமாக
பல உணவகங்கள் மேலே உள்ள கம்பெனிகளின் செயலிகளில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களது விற்பனைகளை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோன்றிய ஒரு புதிய முயற்சிதான் “கிளவுட் கிச்சன்” (Cloud Kitchen). இதில் நீங்கள் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஆர்டர் மட்டுமே பண்ண முடியும்.
பணம் முக்கியமானது, பணம் சுதந்திரம் தருகிறது, பணம் வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. அந்த பணத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்பது போலவே, எங்கள் பணமும் எங்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்….” என எண்ணி ஏங்குபவர்களுக்காக பெங்களூரில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டதுதான் “பர்ப்புள்பாத் வெல்த் மானேஜ்மென்ட் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (PurplePath Wealth Management Solutions Private Limited).
இந்தியாவில் இருக்கும் நடுத்தர, சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையே நிதி ஆதாரம் தான். பல சமயங்களில் வங்கிகள் கடன் கொடுக்க முன் வந்தாலும் நடைமுறை தாமதங்களால் அவை சரியான சமயத்தில் கிடைக்காமல் போய் விடுகிறது. வங்கிகளுடைய தாமதத்தால் கிடைத்த ஆர்டரை சரியான சமயத்தில் செயல்படுத்தி கொடுக்க முடியாத நிலை பல கம்பெனிகளுக்கு இருக்கிறது. சில சமயங்களில் ஆர்டர்களை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால்
2000 வருஷத்தில் இந்தியாவில் நுழைந்த ஈ-காமர்ஸ் துறை இன்றைய தினத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் மொபைல் உபயோகம், இந்தியாவின் மக்கள் தொகை. 2000 ம் வருஷத்தில் பாசி.காம் (baazee.com) என்ற வாங்குபவர், விற்பவர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட போது பலர் இணையம் மூலமாக யாராவது பொருட்கள் வாங்குவார்களா? என்ற பெரிய கேள்வியை எழுப்பினார்கள். பின்னர் 2004ம் ஆண்டு இந்த இணையதளத்தை ஈபே நிறுவனம் 55 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் ரூபாய் 385 கோடி) கொடுத்து வாங்கி தன்னகப்படுத்திக் கொண்டது.
2007ம் வருடம் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்த இரண்டு இளைஞர்கள் சச்சின் பன்சால், சஞ்சய் பன்சால் அவர்களுடைய அமேசான் அனுபவத்தை வைத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தார்கள். அன்றைய தினத்தில் புத்தகங்களை மட்டும் ஆன்லைனில் விற்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியாகும். ஆனால் இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் மூலம் விற்காத பொருட்களே இல்லை என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. கடந்த வருடம் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனத்திற்கு 16 பில்லியன் டாலருக்கு (இன்றைய மதிப்பில் 102,000 கோடி ரூபாய்களுக்கு) விற்று இருக்கிறது.
2007க்கு பிறகு பல வெற்றிகரமான டிராவல்ஸ், கல்யாண புரோகர், வாங்குபவர் விற்பவர் இணையதளங்கள் ஆகியவை வந்து இன்றைய தினமும் அவை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஐஆர்சிடிசி, மேக்மை டிரிப், யாத்ரா, கிளியர்டிரிப், ஓயோ, பாலிசி பஜார், பாங்க் பஜார், ரெண்ட்மோஜோ போன்ற நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான இணையதளங்கள் வந்தன.
இந்த ஈ காமர்ஸ் துறை 2021ம் வருடம் 5.88 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகும் துறையாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ரீடெய்ல் துறையில் வர்த்தகம் 84 லட்சம் கோடிகளுக்கு நடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த துறையின் அபரிதமான வளர்ச்சியை மனதில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனமும், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
கோடிக்கணக்கானவர்களின் கையில் மொபைல் இருப்பதால், உங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தால் பல லட்சங்களுக்கு ஏன் கோடிகளுக்கு நீங்களும் அதிபராகலாம்.