ஆன்லைன் விற்பனைகள் கூடி வரும் நேரத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், ஜனநெருக்கடி மிகுந்த நகரங்களில், போட்டிகள் நிறைந்த ஆன்லைன் கம்பெனிகளுக்கு இருக்கும் பெரிய தலைவலி சரியான நேரத்தில் தங்களுடைய ஆர்டர்களை டெலிவரி செய்வதுதான்
ஒரு முறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கும் புவிக்கும் மனிதனுக்கும் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட்டு, அவ்வகை பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க வேண்டாம் என்று அரசாங்கம் கூறியதும், பெரும்பாலான வணிக நிறுவனங்களும் கடைகளும் துணிப்பைகள் மற்றும் காகிதப் பைகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டன. இதிலிருந்துதான் தனது ‘ஸ்டார்ட் அப்’ தொழில் ஐடியாவைப் பிடித்துள்ளார்
இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கிற உலகத்தில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது என்பது ஒரு பெரிய வேலை. அதற்கு யாரிடமும் நேரம் இருப்பதில்லை. இதை மனதில் வைத்து பல இடங்களில் சிறிய அளவில் மாவு அரைத்து, பாக்கெட்டில் போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு பெரிய வியாபாரம் இருப்பதை மனதில் கொண்டு ஐ.ஐ.எம். படித்த முஸ்தபா அதிகமாக மக்கள் வேலைக்குப் போகும் பெங்களூர் நகரில் ஐ.டி. (I.D.) என்ற பெயரில் (I.D. என்றால் இட்லி, தோசை என்று பொருள்) இட்லி, தோசை மாவுகளை வியாபாரத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அது ஊர் ஊராக விரிவடைந்து வியாபாரம் பல ஊர்களுக்கு இன்று பரவியுள்ளது. வியாபாரமும் சக்கைப் போடு போடுகிறது. இட்லி, தோசை மாவு தவிர பல வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பதிலும் இறங்கியுள்ள இவர்கள், தற்போது புதிதாக கொண்டு வந்திருப்பது, ஐ.டி. டிகாஷன் ஆகும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு கடன்கள் அத்தியாவசிய தேவை என்ற பட்சத்திலும் அவர்களைச் சரியாக புரிந்து கொண்டு கடன் கொடுப்பவர்கள் அதிகம் இல்லை. வங்கியென்றால் அது நிச்சயமாக ஒரு நீண்ட புராசஸ்க்கு போய் விடும். தக்க சமயத்தில் உதவிகள்
நீங்கள் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். வாய்மொழி (word of mouth) மிகவும் சக்தி வாய்ந்தது” என்கிறார்
பெரிய அளவிலான சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்க உதவுகிற தனிப்பட்ட யோசனைகள் மற்றும் பிசினஸ் ஐடியாஸ் இருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற விதிகளுடன் சுகாதாரப் பாதுகாப்பு, நிதி மற்றும் டிஜிட்டல் சேர்க்கை, கல்வி, கிராமப்புற பொருளாதாரம், குடிமகன் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் முதல் ஐந்து வெற்றியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
உடலுக்குத் தீங்கு தராத, கெமிக்கல் ஏதும் கலக்காத வகையில் கொசுக்களைக் கொல்லும் ஒரு சிறிய கருவியையும், அதில் உபயோகப்படுத்துவதற்கான கொசுவிரட்டி திரவத்தையும் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள்
முன்பு பாக்குமட்டை என்பது அழுகி அழியக்கூடியது என்பதாகக் கருதி அதை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் இவர் இதற்குப் பலவித உருவங்கள் கொடுத்து உண்ணும்போது பரிமாறப் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கப், காபி கப், கிளாஸ் இப்படியாகப் பல பொருட்களாக மாறி, இவை விருந்தோம்பலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது என்றால் மிகையாகாது.
அமேசான் மூலமாக இந்தியாவில் இருந்துகொண்டே வெளிநாடுகளில் பொருட்களை விற்கலாம் என்று முன்பே பார்த்திருக்கிறோம். இந்த வகையில் இந்தியாவில் இருந்து கொண்டே பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனைச் செய்வது 2015ம் ஆண்டு அமேசான் கம்பெனியால் தொடங்கப்பட்டது. இதுவரையில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை (சுமார் 7000 கோடி ரூபாய்) இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலமாக விற்றுள்ளன.
நாம் குழந்தையாக இருந்த போது கிடைக்காதது, நம் குழந்தைகளுக்காவது கிடைக்கட்டுமே என்ற எண்ணம்தான். இதனால் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உலகம் முழுதும் பெருகி விட்டன, ஏன் இந்தியாவிலும் தான். உலகளவில் மக்கள் தொகையில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயம் அதிகம் உள்ள நாடுகளில் நமது இந்தியாவும் அடங்கும் . இதனால் குழந்தைகளின் பொருட்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகம்.