உலகத்தில் சுற்றுப்புற சூழல் மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் இருபது இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இது உங்களில் பலருக்கு கவலையும் அதிர்ச்சியுமாக இருக்கும்.
தமிழகத்தின் பின்னலாடை நகரம் திருப்பூரில் இயற்கை சாயங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்து வருகிறார் இளைஞர் திவாகர். இவர் இயற்கை சாயங்கள் கொண்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்.
கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியின் மாணவர் விகாஷ் தனது ஆசிரியர் திரு. சதீஷ்குமார் அவர்களின் உதவியோடு டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பயன்படுத்தப்படும் பில் போடும் ட்ராலிகளை உருவாக்கியுள்ளார்.
சில்லறை விற்பனையில் சாதனை படைத்த ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனரான கிஷோர் பியானி எழுதியுள்ள புத்தகம், IT HAPPENED IN INDIA. ராஜஸ்தானில் உள்ள நடுத்தர வியாபார பனியா கூட்டு குடும்பத்திலிருந்து மும்பைக்கு குடியேறிய கிஷோரின் குடும்பத்தினர் டெக்ஸ்டைல் வியாபாரத்தை நடத்தி வந்தனர். பாரம்பரிய வணிகத்தில் இருந்து விலகி இருந்த கிஷோர், இந்தியாவின் சில்லறை விற்பனை முறையை ஆழ்ந்து கவனித்தார் . இந்தியா ஒரு மாறுபட்ட நாடு என்பதையும் பிராந்திய அளவில் நுகர்வோர்களின் நடத்தைகளிலும் விருப்பங்களிலும் பல்வேறு மாறுபாடுகளைகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கிஷோர் ஆரம்பகாலங்களில் சந்தைகளிலும், கடை வீதிகளிலும் தனது நேரத்தை செலவிட்டார்.
கோயம்புத்தூர் – பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
பெரும்பாலான தொழில்முனைவோர் தங்களின் ஸ்டார்ட் அப் கனவுகளை நனவாக்க பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
“ஐ வோன்ட் மிஸ்” என்பது செயலி போல் செயல்படும். இந்த அதிவேக பயனர்கள் செயல்முறைக்கு (APProach) எந்தவித தரவிறக்கமோ, உங்கள் மொபைலில் நிறுவும் வேலையோ, அனுமதி தருவிக்கும் பிரச்னைகளோ கிடையாது.
நம் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். ஆட்டிஸம், பெருமூளை வாதம் (செரிபரல் பாலஸி), பேச்சுத் திறன் குறைவு போன்ற குறைபாடு உள்ள குழந்தைகள் பேசும்போது, என்ன சொல்ல வருகிறது என பல நேரங்களில் நமக்குப் புரியாது.