இந்தியாவில் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதில்பெரும்பாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு  செல்லுகிறார்கள். இதனால் வீட்டில் சமைப்பது, வீட்டை கிளீன் செய்வது,  துணிகளை துவைப்பது போன்றவைகள் எல்லாம் வெளியே கொடுக்கப்படுகின்றன. 

இதனால் இந்த வேலைகளைச் செய்ய தற்போது பல ஸ்டார்ட் அப்கள்  முளைத்துள்ளன.  உதாரணமாக  அவர்களுக்கு  எல்லா வகையான சாப்பாடும் கொண்டு வந்து தர சுவிக்கி, ஜோமோட்டோ, உபர் ஈட்ஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இது தவிர வீடு, சோபா, கட்டில், மெத்தை, குளியலறை       போன்றவற்றை சுத்தம் செய்து தரவும் பல செயலிகள் (APP)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது லாண்டரி பிசினஸ் பெரிய அளவில், பல பெரிய நகரங்களில் பல பெரிய மனிதர்களால்  ஆரம்பிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  காரணம் இது ஒரு நல்ல லாபகரமான தொழில் என்பதால்தான். 

ஹோட்டல்கள் மற்றும்  நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை  செய்து வந்த பல லாண்டரி கம்பெனிகள் தற்போது வருமானம் கூடுதலாகும்  என்ற எண்ணத்தில் வீடுகளுக்கும் அதே சேவையை விரிவு படுத்தியுள்ளனர்.   உங்கள் வீட்டுக்கே  வந்து உங்களின் பழைய அழுக்கு துணிகள்,   அழுக்கு பொம்மைகள், அழுக்கு ஷூக்கள்          வாங்கி சென்று   அதை சுத்தம் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து   தந்து விடுவார்கள். இந்த சேவைதான்   லாண்ட்ரோமேட் என்றும் அழைக்கப்படுகிறது.

நீங்கள் சின்ன அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தொடங்க ஒரு வாய்ப்புள்ள தொழில் இது. ஒன்றிரண்டு லாண்ட்ரோமேட், உங்கள் கம்பெனிக்கென ஒரு செயலி (APP) இருந்தால் போதும். உங்களால் மிகச் சிறப்பான  முறையில் வாடிக்கையாளர்களுக்கு  சேவை செய்ய முடியும் என்றால், உங்கள் ஊர் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அங்கு கூட குறைந்த மூலதனத்தில்  சிறிய அளவில்  இந்த தொழிலைத் தொடங்கி நீங்கள் வெற்றிகரமாக நடத்தலாம். 

சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம்.   எங்கெங்கே துணிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் 

வாய்ப்புகள் இருக்கிறது  என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு துணிக்கு என கட்டணம் வாங்குவதைவிட ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு இத்தனை  துணிகள், அதற்கு இவ்வளவு கட்டணம் என்று நீங்கள் வாங்க ஆரம்பித்தால் அதை விரும்புவார்கள். உங்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்து விடுவார்கள். சில கம்பெனிகள் ஒரு கிலோ துணிக்கு சுத்தம் செய்ய இவ்வளவு என்றும் கட்டணம் வாங்குகிறார்கள்.

இந்திய லாண்டரி சந்தையின் மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி ஆகும், சுமார் 1 கோடி துணி வெளுப்பவர்கள் (UNORGANISED) நாடு முழுவதும் இருக்கின்றனர். மிக அதிக அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர்களைக் கொண்ட தொழில் இது. இந்த அமைப்பு சாரா, ஒரு கோடி மக்களிடையே இது ஒரு நல்ல தொழிலாக கருதப்படுவதில்லை.  முறையாக செய்யும் போது ஒரு சிறந்த தொழிலாக இது இருக்கும் என்பதை இந்த துறையில் வந்துள்ள பல ஸ்டார்ட் அப்-கள் நிருப்பித்துள்ளன. 

இந்தியாவில் இருக்கும் பெரிய கம்பெனிகளுக்கு நீங்கள் உங்கள் ஊரில் பிரான்சைஸி எடுத்தும் இந்த தொழிலை செய்யலாம்.

இந்தியாவில் தற்போது இருக்கும் பல பிரபலமான லாண்டரி ஸ்டார்ட் அப்-கள்:

www.wassupondemand.com 

www.pickmylaundry.in 

www.thelaundrybasket.in 

www.laundryanna.com 

www.laundrokart.com 

www.theleatherlaundry.com 

www.bclean.in 

www.bro4u.com 

இது போன்ற இன்னும் பல ஸ்டார்ட் அப்-கள் இருக்கின்றன இந்த துறையில் என்பது குறிப்பிடதக்கது.

Spread the lovely business news