நாம் தெருவில் நடந்து செல்லும் போது அல்லது சில பொது இடங்களில் பெரிய அளவு குப்பைகள் கொட்டி இருக்கும் போது, கழிவுகள் தங்கியிருக்கும் போது, குழாயடி சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் போது, நம் இந்தியா இன்னும் சிறப்பாக இருக்கலாமே என்று பலருக்கு தோன்றும் . ஆனால் அந்த சிறப்பான இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து, அதை செய்வதற்கு நேரம் பலருக்கு இருப்பதில்லை. இதனால் எந்த முன்னேற்றமும் பெரிதாக இருப்பதில்லை.
பெட்டர் இந்தியா என்ற இணையதள கம்பெனி 2015 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த இணையதளம் மூலமாக நாட்டின் சுற்றுப் புற சூழ்நிலையை கெடுக்காமல் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அது சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் பொருட்களாகவும் இருக்கிறது, ஆர்கானிக் பொருட்களாகவும் இருக்கிறது, கிராமப்புற கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களாவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில கைவினைஞர்களும் இந்த இணையதளத்தின் மூலம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். உதாரணம் மூங்கில் இழைகள் மூலம் தயாரிக்கப்பட்ட கால் சட்டை, கையால் நெய்யப்பட்ட துணிகள் போன்றவைகளை குறிப்பிடலாம்.
இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.
மேலும், நாட்டை முன்னேற்றுவதற்கு மக்கள் செய்யும் சிறப்பான சேவைகளையும் பதிவிடுகிறார்கள். அந்த கட்டுரைகள் பல லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது. அதன் மூலம் விழுப்புணர்வை மக்களிடையே தூண்டுகிறது.
நீங்கள் தயாரிக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகள் மாசு அடையாத பொருட்களையும் இவர்கள் மூலமாக விற்பனை செய்யலாம்.
இவர்கள் மூலம் நாம் பொருட்கள் வாங்கும் போது ஒரு கைவினை கலைஞரை ஊக்குவிக்கிறோம், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தவில்லை என்ற மனநிறைவும் நமக்கு ஏற்படுகிறது.www.thebetterindia.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள் வாங்குங்கள் பரவசமடையுங்கள்,.