“ஒரு வயதான பாட்டி கிழிந்த புடவை தைக்க ஊசி இல்லாமல்  பாறை மீது உட்கார்ந்து  கடப்பாரையை பாறையில் தேய்த்து ஊசியாக்க முயற்சி செய்தாராம்” இதை எனது சீன நண்பர், ‘முயற்சி’ குறித்து அடிக்கடி என்னிடம் சொல்லுவார். 

அதுபோலவே இழுத்து மூடவேண்டிய நிலையிலேயே 10 ஆண்டுக்கு மேலாக ஜவுளிக்கடையை இழுத்து வந்து, இப்போது காரைக்குடியில்  முதன்மையான ஜவுளிக் கடைகளில் ஒன்றாக விளங்கும் ‘சூரியா சில்க்ஸ்’ நிறுவனர் திரு.  சரவணன் அவர்களை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. 

“தரம் எங்களது வளர்ச்சியின் அடையாளம்” என்ற எங்களது தாரக மந்திரம்தான் எங்களை இந்த உயர்வுக்கு கொண்டுவந்தது.  

சூரியா சில்க்ஸ் – பெண்களுக்கான ஜவுளி என ஆரம்பித்து இன்று லக்ஷணா  மற்றும் குடும்ப உறுப்பினர்  அனைவருக்கும் ஒரே இடத்தில் ஜவுளி என்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.  

ஜவுளி கடைகளில் விசேஷ காலங்கள் போக மற்ற நாட்களில் சாதாரணமான வியாபாரமே நடக்கும்.  அந்த நேரத்தில் அதிக நேரம் பணியாளர்கள் வெறுமனே கடையில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை. இதை மாற்ற எண்ணி,  வெளியில் சென்று மார்க்கெட்டிங் செய்யலாம் என பணியாளர்களுக்கு புரிய வைத்து ஊக்குவித்தோம். காரைக்குடி சுற்றி உள்ள பள்ளிகள்,  மருத்துவமனைகள்,  மகளிர் தங்கும் விடுதிகள்,  அரசு அலுவலகங்கள் என இப்படியாக அலைந்து திரிந்து முயற்சித்த எங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது.  கடையில் விற்பதை விட ‘டோர் டூ டோர் விற்பனை ‘நன்றாக  இருந்தது.

கடையை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நகராட்சி மற்றும் காவல்துறை அனுமதியுடன் ஆங்காங்கே விளம்பர போர்டுகளை வைத்தோம்.  லோக்கல் டிவி சேனல் மற்றும் திரையரங்குகளில் விளம்பரங்களை தொடர்ந்தோம்.  புத்தாண்டு,  பொங்கலுக்கு ரூ. 1000 க்கு  ஆடை வாங்கினால் ரூ. 100 க்கு பெட்ரோல் கூப்பன் கொடுத்தது மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. 

“சிறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ஒரு நற்செய்தி” என்ற தலைப்பில் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தோம்.  வீட்டிலிருந்து சேலை வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் என்ற எங்களின் விளம்பரத்துக்கு மக்களிடம் ஆஹா ஓஹோ. 

இதில் எந்த மொத்த வியாபாரிகளும் செய்யாத ஒரு ஐடியாவை பயன்படுத்தினோம்.  வீட்டிலிருந்து வியாபாரம் செய்பவர்களுக்கு அனைத்து  டிசைனிலும்,  ஒவ்வொரு கலரிலும் ஒரு சேலை என பல எண்ணிக்கைகளில் கொடுத்ததோடு விற்பனை ஆகாத டிசைன்களை 15 நாளில் திரும்ப பெற்றுக் கொள்வோம்.  இதனால் “மகிழ்ச்சியான  விற்பனையாளர்கள்” எண்ணிக்கை கூடியது.  

இப்படியாக வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்து அவர்களை தக்க வைத்துக் கொண்டோம்.  தரத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்பதால்  நாங்களே நேரடியாக மும்பை,  சூரத்,  ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு சென்று தரமான ஆடைகளை கொள்முதல் செய்து வருகிறோம் .

‘ஜிஎஸ்டி பில் கேட்டு வாங்கவும்’ என கடையில் போர்டு வைத்து கலக்குகிறோம்.   இதனால் வாடிக்கையாளர்களால் நாங்கள் பெரிதும் கவரப்பட்டோம்.  இதனால் ஜிஎஸ்டி குறித்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம்.  ஜி‌எஸ்‌டி  வரியை வாடிக்கையாளர்களுக்காக நாங்களே செலுத்தி வருகிறோம். 

தற்காலத்து டிரெண்டாக  ஃபேஸ்புக்,  இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலமாகவும் கிடைத்த வாடிக்கையாளர்கள் அதிகம்.  

கோவையில் விரைவில் சூரியா  சில்க்ஸ் துவங்க இருப்பதாக கூறினார்.  மற்றும் ஆன்லைன் வியாபாரமும் தொடங்க இருக்கிறார்.  

“எங்களின்  வளர்ச்சி வண்டி சிறப்பாக ஓட இரண்டு தண்டவாளங்களாக இருப்பவர்கள்,  எப்போதும் எதிலும் துணையாக இருக்கும் எனது துணைவி  அழகம்மை மற்றும் எப்போதும் எதிலும் தோள் கொடுக்கும்  பணியாளர்களும்தான்!” என அவர் நன்றி பாராட்ட  விடை பெற்றோம்.

தொடர்பு கொள்ள: 97866 74001 / 99437 45002

www.suryaasilks.com

Spread the lovely business news