பேட்டி, கட்டுரையாளர் : அ. ஹுமாயூன், சிதம்பரம்.
சமீப காலமாக ஸ்பைருலினா என்ற நீல பச்சை நிற சுருள் பாசி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் அதில் உள்ள பல வித மருத்துவப் பலன்களும், சக்தியும் தான்.
கோபிசெட்டிப்பாளையம், ஈரோடில் “எக்கோலைவ் ஸ்பைருலினா” (Ecolive Spirulina) என்ற நிறுவனத்தார் இந்த ஸ்பைருலினா வியாபாரத்தை ஸ்டார்ட் அப் நிறுவனமாக மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதன் நிறுவனர் திரு. பொன்னுசாமி அவர்கள்.
நவீன இயந்திரங்களின் துணைக் கொண்டு ஸ்பைருலினா பயிரடப்பட்டு அதை மாத்திரை, கேப்ஸுல், செதில்கள், பவுடர்கள் மற்றும் நூடுல்ஸ் என பலவித வடிவில் வெளி வந்து மொத்த, சில்லறை விற்பனை ஆவதோடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கும் சரக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தினர் அமேசானில் தங்களின் உற்பத்திகளை பதிவு செய்து அதன் மூலமும் விற்பனை செய்கின்றனர்.
இந்த ஸ்பைருலினா உலகளவில் அனைத்து பருவ காலத்திலும் பயிரடப்படும் ஒரு தாவரம். இந்த நிறுவனம் சிறந்த அனுபவம் கொண்ட வல்லுனர்கள், மருந்தாளுனர்கள் மேற்பார்வையில் ஸ்பைருலினாவின் மருத்துவ குணம் சிறிதும் மாறாமல் துல்லியமாக மருந்தாக இங்கு தயாரிக்கப்படுகிறது.
பொன்னுசாமி அவர்கள் தனது பேட்டியில் ஸ்பைருலினாவின் பெருமைகளை எடுதுரைத்தார். இந்த ஸ்பைருலினாவில் மற்ற உணவுப் பொருள்களை விட அதிக புரதசத்து நிறைந்துள்ளது. அதனால்தான் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் இதை உணவாக எடுத்து செல்கின்றனர். மீன் உணவில் புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு காரணமே மீன்கள் அத்தகைய பாசிகளை உணவாக உட்கொள்வதுதான்.
இந்த ஸ்பைருலினா கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்டப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் மட்டும் தண்ணீரை மட்டும் குடித்தே உயிர் வாழ்ந்து வந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவர்கள் குடிக்கும் தண்ணீரில் ஸ்பைருலினா இருப்பதை கண்டறிந்தனர், என்று சொல்லி பொன்னுசாமி நம்மை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த ஸ்பைருலினாவின் முழுமையான பயன்களையும் அதிலுள்ள சக்தியையும் முன்பே நாம் தெரிந்திருந்தால் இன்று நம்மை தாக்கும் பல நோயிலிருந்து நாம் தப்பியிருக்கலாம் என வருந்தினார்.
ஸ்பைருலினாவில் 60 முதல் 70 சதவீதம் புரோட்டீன் இருக்கிறது. அதாவது பால், முட்டை மற்றும் பருப்பு வகைகளில் இருப்பதை விட இதில் அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை அடையச் செய்யும் என்றார். தற்போது பெரும்பாலான மக்கள் பச்சை மூலிகைகளை தேடிச் செல்லும் நேரம் இது. இந்த சிறப்பு வாய்ந்த ஸ்பைருலினாவின் பெருமை குறித்தும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வெப்சைட் www.ecolivespirulina.com சென்று பார்த்து பயனடையலாம்.