பேட்டி, கட்டுரையாளர் : அ. ஹுமாயூன், சிதம்பரம்.
“பணம் முக்கியமானது, பணம் சுதந்திரம் தருகிறது, பணம் வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. அந்த பணத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்பது போலவே, எங்கள் பணமும் எங்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்….” என எண்ணி ஏங்குபவர்களுக்காக பெங்களூரில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டதுதான் “பர்ப்புள்பாத் வெல்த் மானேஜ்மென்ட் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (PurplePath Wealth Management Solutions Private Limited). இதன் நிர்வாக இயக்குனர் திரு. அருண் ராமசாமி அவர்கள்.
“தனிப்பட்ட நபர்கள் தங்கள் நிதி நிர்வாகத்தை சரிவர கவனிப்பதில்லை. நிதி நிர்வாகம் செய்வதிலும், செல்வத்தை வளர்ப்பதிலும் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் தந்து உதவ வேண்டும்” என்பது தான் எங்களின் முக்கிய நோக்கம் என்று கூறுகிறார் அருண் ராமசாமி.
இதன் அடிப்படையில் தங்களது வாடிக்கையாளர்கள் நிதி நிர்வாகத்தை தாங்களே கையாளும் விதத்தில் “பினோபோட்” (Finobot) என்ற ஒரு சாப்ட்வேரை இந்த நிறுவனத்தார் உருவாக்கியுள்ளனர். அது தனி நபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிதி நிர்வாகம் செய்ய தேவையான தீர்வுகளை வழங்குகிறது.
அருண் அவர்களிடம் கலந்துரையாடல் சமயத்தில், “மக்கள் போதுமான அளவுக்கு பணம் சம்பாதிக்கிறார்கள் மற்றும் குடும்பத்திற்க்கு தேவையான செலவும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய செல்வத்தை திறம்பட நிர்வகிக்க அதிகமான பேர்களுக்கு தெரிவதில்லை. தவறான எண்ணம், தவறான ஆலோசனை பெறுதல் அல்லது தவறாக செயல்படுவது, இது போன்ற காரணங்களால் பெரும்பாலோரின் நிதி திட்டமிடுதல் சரிவர செய்யப்படுவதில்லை” என குறைபட்டுக்கொண்டார்.
அவர்களது வாடிக்கையாளர்களின் வருங்காலத்திற்காக புத்திசாலித்தனமாக எப்படி முதலீடு செய்வது என்பதை வழிகாட்டுகின்றனர்.
சிறிய, பெரிய கம்பெனிகளில் வேலை பார்க்கிற ஊழியர்களின் எதிர்கால சேமிப்பு குறித்தும் சிறப்பான ஆலோசனை தருகிறார்கள், இதனால் உங்கள் வேலையாட்கள் கவலை மறந்து மகிழ்ந்து தங்கள் பணியில் மேலும் அதிக கவனம் செலுத்தக்கூடும்.
இவர்களின் இந்த நிதி திட்டமிடலுக்கு குறைந்த கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வருமான வரி ஈபைலிங் செய்தல், ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் அதிக வருவாய் தரும் சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை அளிப்பதோடு வாடிக்கையாளர்களின் பிள்ளைகள் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் மற்றும் ஓய்வுகால சேமிப்பு என கனவுகள் நனவு ஆகுவதற்க்கும் நல்ல வழிகாட்டியாக உள்ளது இந்த நிறுவனம்.
உங்களிடம் உள்ள எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டு வைக்காமல், பல கூடைகளில் போட்டு வைக்க வேண்டும் என்ற பழமொழி போல் உங்களுக்கான சேமிப்பை முன் எச்சரிக்கையுடன் பல திட்டங்களில் பிரித்து போட்டு எதிர்காலத்தில் நல்ல பலன் தர செய்கின்றனர் “பர்ப்புள்பாத் வெல்த் மானேஜ்மென்ட் சொல்லூசன்ஸ் பிரைவேட் லிமிடெட்”.
மேலும் விபரங்களுக்கு அவர்களின் கீழ்க் கண்ட இணையதளத்தை சென்று பாருங்கள்.