ISO
நிச்சயமாக இந்த மூன்றெழுத்தை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இது தரத்துக்கான (Quality) தாரக மந்திரம்.
ISO என்றால் என்ன? அது உருவானது எப்படி?
கடந்த ஆண்டுகளில், உற்பத்தியாளருக்கும், உபயோகிப்பாளருக்கும் மட்டுமே, சில குறிப்பிட்ட, தர சம்பந்தப்பட்ட முறைகள் பேசப்பட்டு, செயல்படும் நிலைமை நிலவியது. இந்த தர முறைகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொதுவாக அமையாமல் அவரவர் தேவைக்கேற்ப இருந்து வந்தது. இதனால் உற்பத்தி செலவு அதிகமானது. மிக முக்கியமாக, ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலைகளில் உற்பத்தி செலவு பன்மடங்காக அதிகரித்து வந்தது. இதை தவிர்க்க 1987ம் ஆண்டு “ஜெனிவா” நகரில் உலகிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே “ISO” ஆகும். “ISO” என்பது “International Organization for Standardization” ஆகும்.
ISO பெறுவதால் உண்டாகும் பலன்கள்.
- உங்கள் பொருளின் தரத்தை அது உணர்த்தும்.
- அகில உலக ரீதியில், தரத்துக்கான தனித்திறமையால், நம் நிறுவனத்தின் பெயர், Buyer’s Guide-ல் பதிவாகும். இதனால் சர்வதேச அளவில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வாய்ப்பு ஏற்படும்.
- விளம்பரப்படுத்தும் செலவு மிச்சமாகும்.
ISO தகுதி பெறுவதில் நமது பங்கு
- உற்பத்தியும், பொருளின் தரமும் தொழிலாளர்களின் இரு கண்களாக கருதப்பட வேண்டும்.
- செய்வதை, உற்பத்திக்கான செயல்முறைகளுடன் கவனத்துடன் கடைபிடித்து, செய்ததை திரும்பச் செய்யாமல், திருந்தச் செய்ய வேண்டும். ( Do it right first time, every time and any time)
- பொருளின் தரத்தை அறிந்து, உணர்ந்து தக்க முறையில் சரிசெய்து, உற்பத்தியை தொடர வேண்டும்.
- இயந்திர பகுதியில் பணிபுரிவோர் உற்பத்தி முறைக்கென வரையறுக்கப்பட்ட Speed, Feed ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
- அடுத்த கட்டம் என்பது நமது வாடிக்கையாளர் என்ற எண்ணத்துடன் அடுத்த ஆபரேஷன் பாதிக்கக் கூடிய எந்த தவறும் (பிசிறு, அளவு, சேதம்) இல்லாதவாறு கவனத்துடன் சரிசெய்து கொடுக்க வேண்டும்.
- தரக்கட்டுப்பாடு பகுதியை சேர்ந்தவர்கள், உற்பத்தி செய்பவருக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து, நல்ல முறையில் எடுத்துரைத்து தர உற்பத்திக்கு உதவ வேண்டுமே தவிர உற்பத்திக்கு தடையாக இருத்தல் கூடாது.
- உற்பத்தி, தரத்துக்கான பதிவேடுகளை முறைப்படி உருவாக்கி, உற்பத்தி செய்பவர்கள் அதை வழிகாட்டியாக கொண்டு தரத்தை எந்த நேரத்திலும் கண்காணித்து வரவேண்டும்.
- தேவை உள்ள இடங்களில் தரக்கட்டுப்பாடு வரைபடத்தை பயன்படுத்த வேண்டும்.
- தர நிர்ணயத்துக்கு உறுதுணையாக உள்ள கருவிகளை அவ்வப்போது , பாதுகாத்து வருவது மிக அவசியம்.
- உற்பத்தியின் தரத்தை, எல்லா பகுதிகளிலும் தவறாமல் கண்காணித்து Sampling, Patrol, Final Inspection வழிமுறைகளை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
- பழுதான பொருளை, தனியிடத்தில் வைத்து, முடிவு எடுக்கத் தகுந்தவரிடம் கலந்து பேசி அவற்றுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
- எல்லா இடங்களிலும் பொருட்களின் தன்மைக்கேற்ப, கையாள வேண்டிய வழிமுறைகளை வகுக்கப்பட்ட முறையில் தொடர்ந்து கடைபிடிக்க வேன்டும்.
- தவிர்க்கப்பட வேண்டியவை – கால விரயம், பொருள் விரயம்.
- பொருளின் தரம் உயர வேண்டுமாயின் அதனை தயாரிக்கும் இடங்களில், சுற்றுப்புறத் தூய்மையும், ஒழுங்குமுறையும் பரிபாலனம் செய்யப்பட வேண்டும் . இது சம்பந்தமாக, நாம் கடைபிடிக்க வேண்டியவை – பொருட்கள், கருவிகள் அதற்குரிய இடங்களில் மிக சுத்தமாக இருத்தல் வேண்டும்.
- நாம் நமது தொழிற்சாலையில் மேற்கூறிய செயல்முறைகளை பின்பற்றி உற்பத்தி செய்வோமாயின், நமது பொருள் தரத்தில் தலைசிறந்து விளங்கும் என்பதில் சிறிதளவும் ஐயப்பாடில்லை.
ISO என்பது ஒரு தாரக மந்திரம்
எல்லாவித தொழில் முறைக்கும் ஏற்ற தரத்தை நிர்ணயிக்கக்கூடிய செயல்முறைக்கு சாத்தியமான ஒரு தராக மந்திரம்.
தொடர்புக்கு : 98422 84311
(இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது).