கார்மெண்ட் இண்டஸ்டிரியின் முக்கியமான தேவை பேப்ரிக்ஸ் தான். பலருக்கு எங்கு என்ன மாதிரி பேப்ரிக்ஸ் கிடைக்கின்றன, எங்கு வாங்குவது என்ற குழப்பங்கள் ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்கவும், உங்கள் கம்பெனியில் நீங்கள் கார்மெண்ட் உற்பத்தி செய்தது போக மீதமுள்ள துணிகளை (பேப்ரிக்ஸ்) விற்கவும் ஒரு மார்க்கெட் இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் இந்தியா முழுவதும் உள்ள விற்கும் கம்பெனிகளும், வாங்கும் கம்பெனிகளும் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தான் “டெக்ஸ்டைல்ஸ் பாஸ்கட்” எனப்படும். இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள சுமார் 100 சப்ளையர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இங்கே ப்ரெஷ் மற்றும் டிஸ்கவுண்ட் பேப்ரிக்ஸ் கிடைக்கிறது. நிட்ஸ், ஹோம் பர்னிஷிங் என்ற வகைகள் இருக்கின்றன.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களுக்கு தேவையான டெக்ஸ்டைல்ஸ்கள் கிடைக்கின்றன. இதில் சர்ட்கள், டி ஷர்ட்கள், போலோ, ஜீன்ஸ், பேண்ட், ஜாக்கெட், ஷார்ட்ஸ், குர்தா, ஷெர்வானி, சூட்டிங், நைட்வியர் போன்ற இருபது வகையான ஆடைகளுக்கு பேப்ரிக்ஸ் கிடைக்கிறது.
எப்படி வாங்குவது?
முதலில் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு உள்ள தேடுதல் ஆப்ஷனை உபயோகித்து உங்களுக்கு தேவையான பேப்ரிக்ஸை தேர்ந்தெடுங்கள். இரண்டாவது உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை முடிவெடுங்கள். மூன்றாவது ஒரு “சுவாட்ச்” (swatch) அல்லது 1 முதல் 25 மீட்டர் வரை அல்லது 26 முதல் 200 மீட்டர் வரை அல்லது 201 முதல் 500 மீட்டர் வரை அல்லது 501 மீட்டருக்கு அதிகமாக என்று உங்கள் தேவையை முடிவெடுங்கள். சாம்பிள் பீஸ் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதைப் பார்த்ததும் உங்களுக்கு தேவை எவ்வளவோ அதை ஆர்டர் செய்யலாம்.
இது தவிர உங்களுக்கு சில குறிப்பிட்ட பேப்ரிக்ஸ் தேவைகள் இருக்கின்றன. அவை இந்த இணையதளத்தில் இல்லையென்றாலும் உங்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்து தர ஏற்பாடு செய்கிறார்கள்.
உங்களின் பயன்பாடு போக பாக்கி மீதமுள்ள துணி என்ன செய்வது, எப்படி விற்பது என்று தெரியாமல் ஒரு மூலையில் கிடக்கும். இவைகளையும் இந்த இணையதளம் மூலம் விற்க ஏற்பாடு செய்யலாம்.
கிரியேட்டிவ் டிஸைனர்கள் இந்த கம்பெனியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புகளும் இருக்கின்றன.
இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி ரவி மான்சிங்கா, ஆயுசி மான்சிங்கா ஆகிய இருவரால் தொடங்கப்பட்டது. இவர்களுடைய குடும்பம் சுமார் 45 வருடங்களாக டெக்ஸ்டைல்ஸ் துறையில் இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்பட முடிகிறது.இவர்களின் இணையதளம் www.textilebasket.com