தேநீர் புரட்சி…!
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகப்படும் பானம் தேநீர். ஒரு மிடரு அருந்தினாலும் நம் உடலின் மொத்த இயக்கமும் புத்தணர்வு பெறுகிறது. உலகில் தேயிலை உற்பத்தியில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.
இந்த சிறப்பு வாய்ந்த தேநீரில் புரட்சி செய்து வருகிறது டீ டைம் நிறுவனம். 2016 ல் தொடங்கிய இவர்கள் தேநீர் குறித்து ஆராய்ச்சி (Research and Development) செய்வதற்கே இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டனர். இன்று ஃபிரான்சைஸ் (Franchise) முறையில் நாடு முழுதும் 700 கிளைகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. 35% நகர்புறங்களிலும், 65% கிராமங்களிலும் பரவி இருக்கிறது.
கல் உடைக்கும் தொழிலாளி முதல் கணிப்பொறியாளர் வரை ஒவ்வொரு வாடிக்கையாளரின் புத்துணர்ச்சிக்கும் புகுந்த வீடாய் இருக்கிறது இந்த டீ டைம் தேநீர் கடை. தேநீர் கடையில் தேநீர் மட்டுமல்ல, இவர்களது மெனுவில் 33 வகை பானங்கள் இருக்கின்றன. தம் டீ, கிரீன் டீ, காஷ்மீர் டீ, இஞ்சி டீ, லெமன் டீ என பத்து புது சுவை நிறைந்த டீ உட்பட குளிர் பானங்கள், மில்க் ஷேக்குகள் இப்படி பல.
மற்ற டீ கடைக்காரர்கள் ஒரு கிலோ தேயிலை 190 ரூபாய் கொடுத்து வாங்குவார்கள். ஆனால் இவர்கள் 300 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். காரணம் இவர்கள் பத்து ரூபாய்க்கு டீ விற்றாலும் தரத்தில் சமரசம் செய்து கொள்வதே இல்லை. மற்ற தேநீர் கடையை விட இவர்களை வேறுபடுத்தி காட்டுவது டீக்கான உண்மையான சுவையும் அதற்காக இவர்கள் பயன்படுத்தும் ஸ்பெஷலான டீ கலவையும்தான்.
இவர்களின் தேநீரை ஒரு முறை பருகி ருசி கண்டவர்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதோடு தனது நண்பர்கள் வட்டத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ருசித்த வாய் விளம்பரம் செய்கிறது. டீ குடிக்க வந்தவர்கள் பலரும் டீ டைம் ஃபிரான்சைஸ்க்கு முதலாளிகளாக மாறியுள்ளனர்.
இந்த ஃபிரான்சைஸ் ஆரம்பிக்க டீ மாஸ்டர் தேடி அலைய வேண்டாம். எவ்வித அனுபவமும் இல்லாதவர்களும் மூன்று நாள் பயிற்ச்சியில் டீ போடும் மெஷின் இயக்குவதில் கை தேர்ந்தவர் ஆகிவிடுவார். இந்த மெஷின் மூலம் யார் டீ போட்டாலும் ஒரே ருசியே இருக்கும் என்பது ஒரு சிறப்பு.
மற்ற டீக்கடைகள் தொடங்குவதில் உள்ள பிரச்சனைகள் என்னவென்றால், சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் உட்பட்டு கடை ஆரம்பித்த பின்னர் அவர்களின் பிராண்டை விளம்பரப்படுத்தி அதை நிலை நிறுத்துவது தான். ஆனால் டீ டைம் ஃபிரான்சைஸ் எடுப்பவர்களுக்கு இந்த தொல்லைகள் இல்லை. நீங்கள் ரூபாய் 4,25,000 செலுத்திய பின்னர், டீ போடும் இயந்திரம், கடை பெயர் பலகை, ஸ்டிக்கர் மற்றும் குப்பை கூடை வரை அனைத்து பொருள்களும் இவர்களின் பிராண்டு பெயருடன் வழங்கப்படும். அதுபோக ரூபாய் ஒரு லட்சத்துக்கு உங்களுக்கு தேவையான டீ பாக்கெட்டுகள், டம்ளர்கள் போன்ற தொடக்க தளவாடப் பொருள்களும் சப்ளை செய்து விடுகிறார்கள்.
கடைக்கான இடம் மட்டும் நீங்கள் பார்த்து விடவேண்டும். அதே சமயத்தில் நீங்கள் நினைத்த இடத்தில் கடையை தொடங்கி விட முடியாது. அவர்களுடைய டீம் வந்து பார்த்து சரியான இடம் என அவர்கள் முடிவு செய்தால்தான் நீங்கள் அங்கே தொடங்க முடியும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடமாக இருக்க வேண்டும். டீ டைம் நிறுவனத்தார் ஃபிரான்சைஸ் கொடுத்து விட்டு நகர்ந்து விட மாட்டார்கள். எந்த விதத்திலும் நீங்கள் நஷ்டம் ஆகி விடாமல் இருக்க உங்களை கவனித்துக் கொள்வார்கள். ஃபிரான்சைஸ் கொடுப்பதற்க்கு முன் இவர்களின் கிளை ஒன்றுக்கு உங்களை அனுப்பி ஓரிரு நாட்கள் உடன் இருந்து அனுபவ ரீதியாக பார்க்க சொல்வார்கள்.
மற்ற ஃபிரான்சைஸ் கொடுப்பவர்கள் ராயல்டி என்றும் லாபத்தில் பங்கு தொகை என்றும் பல பிக்கல் பிடுங்கல் இருக்கும். ஆனால் இவர்கள் நீங்கள் எவ்வளவு லட்சத்திற்கு வியாபாரம் செய்தாலும் இவர்கள் ராயல்டியாக மாதம் ரூபாய் 2000 மட்டும் வசூலிப்பார்கள். இந்தியாவிலேயே மிக மிக குறைவான ராயல்டி வசூல் செய்யும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்றால் அது டீ டைம் தான்.
இவர்களின் தேநீருக்கு இணையான தரம், விலை, சுவை எவரேனும் தர முடியுமா? என்ற சவாலையும் முன் வைக்கிறார்கள். இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் ரூபாய் 10 இல் தொடங்கி ரூபாய் 99 க்குள்தான்
365 நாளும் லாபம் தரும் தொழில் இது என்றால் மிகையாகாது. இவர்களின் ஃபிரான்சைஸ்களில் தினம் 40,000 ரூபாய் வரை வியாபாரம் செய்பவர்களும் உள்ளனர். 100 முதல் 530 சதவிகிதம் வரை லாபம் எடுப்பவர்களும் இதில் உள்ளனர்.
நாலு டீ போடுப்பா..
ரெண்டு ஸ்ட்ராங், ஒரு லைட்…
ஒன்னு அரை சர்க்கரை நுரையோட..
காதில் ஒலிக்கிறது.
வியாபார தொடர்புக்கு : 95776 62211 / 94896 62489