- தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி பதிவு செய்திட என்ன தகுதிகள் தேவை?
தீபா – சேலம்
உங்கள் நிறுவனம் தனியாக ஒரு நிதியாண்டில் 40 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்தால் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தனியாக சர்வீஸ் மட்டும் செய்வதாக இருந்தால் ஒரு நிதியாண்டில் இருபது லட்சத்திற்கு அதிகமாக சேவை அளித்திருந்தால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
சரக்கு விற்பனையும் மற்றும் சேவையும் கலந்து தொழில் புரிபவர்களாக இருந்தால் நிதியாண்டில் ரூபாய் இருபது லட்சத்திற்கு அதிகமாக செய்தால் பதிவு செய்வது அவசியமாகுகிறது.
- தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திற்காவது விற்பனை செய்வதாக இருந்தால் குறைந்தபட்ச விற்பனை தொகை பொருந்துமா?
- கார்திக், கன்னியாகுமரி
இல்லை. வணிகர் தொழில்புரியும் மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு விற்பனை செய்வதாக இருந்தால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
- வணிகர் ஒருவர் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கான மூலபொருட்கள், சேவைகள் மற்றும் மூலதன பொருட்களின் மீதான உள்ளீட்டு வரியினை எடுக்க இயலுமா?
- பூர்ணிமா, புதுச்சேரி
ஏற்றுமதி செய்பவர்களுக்கு மூலதன பொருட்களுக்கான உள்ளீட்டு வரி மட்டுமே எடுக்க இயலும். அதே வேளை சர்வீஸ் மற்றும் மூலதன பொருட்கள் மீதான உள்ளீட்டு வரி திரும்ப பெற இயலாது.
- வணிகர் ஒருவர் தமிழ்நாட்டிற்குள்ளே விற்பனை செய்வதற்கும், வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்வதற்கும் எத்தகைய வரியெல்லாம் விதிக்கப்பட வேண்டும்?
- தேவராஜ், கோவை
தமிழ்நாட்டிற்குள்ளே விற்பனை செய்தால் மாநில வரியும் மற்றும் மத்திய வரியும் விதிக்கப்படும். அதாவது சி.ஜி.எஸ்.டி, எஸ்ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட வேண்டும். அதே வேளை, வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தால் ஐ.ஜி.எஸ்.டி விதிக்கப்பட வேண்டும்.
- ஒரு நிதியாண்டில் உள்மாநிலத்திற்குள் அல்லது வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தால் ஈ வே பில் தயாரிப்பதன் மதிப்பீடு அளவு என்ன?
- கஸ்தூரி, சென்னை
தமிழகத்திற்குள் என்றால் கண்டிப்பாக ரூபாய் 1 லட்சத்திற்கு அதிகமான சரக்கு மதிப்பு இருக்கும் இன்வாய்ஸ் தொகைக்கும், வெளி மாநிலத்திற்கு செல்வதாக இருந்தால் ரூபாய் 50,000 த்திற்கு அதிகமான சரக்கு மதிப்பு இருக்கும் இன்வாய்ஸ்களுக்கு மட்டும் ஈ வே பில் தயாரிக்க வேண்டும்.
**************
உங்களின் GST தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள: sethu_dhavarajan@yahoo.com
மொபைல் : 94437 09102