சாமான்களை பத்திரமாக கொண்டு செல்ல ஸ்டார்ட் அப்-கள்

நாம் வீடு மாறும் போது  ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு சாமான்களை  கொண்டு செல்லும்போது முக்கியமாக கவலைப்படுவது,  லாரிக்காரர் சாமான்களை ஒழுங்காக கொண்டு செல்வாரா? சாமான்கள் பத்திரமாக பேக் செய்யப்பட்டு, உடையாமல் புதிய இடத்திற்கு சென்று அடையுமா என்பது தான்.  இது போன்ற கவலைகளால் கணவன்-மனைவி இருவருக்கும் சண்டைகள் வருவது சகஜம்தான். நாம் பயந்தது போலவே  சாமான்கள் சரிவர கொண்டு செல்லபடவில்லை என்றால்  அவை   உடைந்து நமக்கு பெரிய நஷ்டத்தை தருவது தொடர்ந்து நடக்கும் ஒரு செயல் தான். 

இந்தத் துறை இன்று வரை அன்-ஆர்கனைஸ்ட் துறையாக இருந்து வருகிறது. இதனால் சிறிய லாரி ஆபரேட்டர்கள் இந்த துறையை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்தத் துறையில் ஆர்கனைஸ்ட் பிளேயர், அதாவது இந்த வேலைகளை தொழில் ரீதியாக  செய்யும் கம்பெனிகள் மிகவும் குறைவு. அப்படி செய்யப்படும் போது அதற்கான கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கும், ஆதலால் மக்களும் அதை விரும்புவதில்லை. 

இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் துறையில் 1987ஆம் ஆண்டு கையில்  எவ்வித பணமும்  இல்லாமல், மனதில் ஒரு உறுதியுடன் ஒரு மனிதர் நுழைகிறார். அதாவது சாமான்களை கையாளும் போது அதை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும், கம்பெனி மீது நம்பிக்கை  வரும் அளவுக்கு  நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். 

ஆர்மியில் வேலை பார்க்கும் போது கிடைத்த 40 ஆயிரம் ரூபாயும் ஆர்மி வெல்பேர் ஃபண்ட்க்கு டொனேஷன் செய்து விட்டு, கையில்  எவ்வித  பணமும் இல்லாமல் தனது நண்பரின் தாயாரிடம் 4000 ரூபாய் கடன் வாங்கி ஆரம்பிக்கப்பட்டது தான் அகர்வால் ஹவுஸ்ஹோல்டு கொரியர் என்ற கம்பெனி. அதன் பிறகு இவர்களது சிறப்பான சேவையால் கம்பெனி பல உச்சங்களை எட்டியது. 

அன்று “சக்கரங்கள்” மூலமாக சுழலத்  தொடங்கிய அவரது கம்பெனியின் வாழ்க்கைச் சக்கரம் இன்று ஒரு மிகப் பிரமாண்டபமான கம்பெனியாக உருவாகியிருக்கிறது.  அதுதான் இன்று அகர்வால் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு இந்த கம்பெனியின் டேர்ன் ஓவர் 650 கோடி ரூபாய். 72 நாடுகளில் இயங்குகிறது. இதுவரை கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்களுக்கு சாமான்களை இடம் மாற்றுவதற்கு உதவியிருக்கிறது. 

இன்றைய தினத்தில் சாமான்களை பத்திரமாக இந்தியாவிற்குள்ளும் அல்லது வெளிநாட்டுக்கும்அனுப்புவதற்கு  கூப்பிடு “அகர்வால் பேக்கர்ஸை” என்ற அளவிற்கு மிகவும் பிரபலமான கம்பெனி. அவர்களுக்கு வாடிக்கையாளர்கள்தான் கடவுள் என்ற குறிக்கோளை வைத்திருக்கிறார்கள். 

இன்று இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் கூட தங்களுடைய பொருட்களை ஒரு இடத்திலிருந்து  இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த கம்பெனியை தான் நம்பியிருக்கிறது. 

இதிலிருந்து என்ன தெரிகிறது ஒரு கம்பெனி ஆரம்பித்து சிறப்பாக நடத்துவதற்கு “மூளைதனம்” தான் அதிகம் தேவை, “மூலதனம்” குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த “மூளைதனத்தை”  சிறப்பாக பயன்படுத்தி இந்த கம்பெனியை இவ்வளவு பெரிய கம்பெனியாக கொண்டு வந்து இருக்கிறார் ரமேஷ் அகர்வால். 

இது போன்று இன்றைய தினத்தில் பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இத்துறையில் வந்திருக்கின்றன. அவைகளில் குறிப்பிட்டு சொல்லும் விதமான கம்பெனிகள்.

LetsTransport

The Porter

BlackBuck

Blowhorn

Spread the lovely business news