கோவையில் 40 ஆண்டு காலமாக 2400 சதுர அடியில் அமைந்துள்ள பிரமாண்டபமான நகைக் கடை “மீனா ஜூவல்லரி”. கோவையில் பிரபலமான நகைக் கடைகளில் முன்னணி வகிக்கிறது இது. இதன் நிறுவனர் திரு. சந்திரசேகரன் அவர்களை தொலைபேசியில் பேட்டி எடுத்தபோது, அறியாத பல அதிசய தகவல்களை அறிய முடிந்தது.
இவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் நகைகள் விற்பனை செய்கின்றனர். கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர் என இரண்டு இடங்களில் கடைகள் உள்ளன. சாதாரண அளவில் நடந்து வந்த தனது நகை வியாபாரம் பிரபலமடைய முதன்மைக் காரணம் தனது மகன் ஜெயம் கண்ணன்தான் என மகன் பெருமை பற்றி கூறத் தவறவில்லை. ஜெயம் கண்ணனும் பேட்டியில் கலந்து கொண்டது தங்கத்தில் வைரம் என இருந்தது. ஜெயம் கண்ணன் இப்போது பெங்களூருவில் உள்ள கடையை கவனித்து வருகிறார்.
இவர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (Charted Accountant – Singapore) சிங்கப்பூரில் படித்து முதல் முறையிலேயே வெற்றி கண்டவர்.
2800 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே முதன் முதலில் ஆந்திரா-கோல்கொண்டாவில்தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள்தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இன்றைக்கு உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் எனப் பார்த்தாலும் அவை 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தயாரானதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றனவாம். இது 150 முதல் 200 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகிறது.
வைரம் மட்டுமே தன்னுள் பாயும் ஒளியில் 85 சதவீதத்தை பல கோணங்களில் பிரதிபலித்து வெளியே திருப்பி அனுப்புகிறது. இத்தகைய சிறப்பு, வைரத்தை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. 1870 இல் தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு எடை அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ‘காரட்’ என்ற ஒருவித விதைகளையே எடைகளாக பயன்படுத்தினர். காரணம் இந்த விதைகள் அனைத்தும் ஏறத்தாழ ஒரே அளவு எடை கொண்டவை. 200 மில்லி கிராம் ஒரு காரட் ஆகும். ஐந்து காரட் என்பது ஒரு கிராம்.
மீனா ஜூவெல்லரியில் விற்கப்படும் வைரங்கள் அனைத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனமான இன்டர்நேஷனல் ஜெம்மாலாஜிஸ்ட் இன்ஸ்டிடியூஷன் (International Gemmologist Institution) மூலம் சான்றிதழ் பெற்றவை. பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் வைரங்களுக்கு கடைக்காரர்களே ஒரு சான்றிதழ் கொடுத்துவிடுகிறார்கள். தன் பிள்ளைக்கு தானே சான்றிதழ் கொடுப்பது போல என்றார். இதில் தனக்கு ஒப்புதல் இல்லை என்றார்.
செட்டிநாட்டு திருமணங்களுக்கு தேவையான நகைகள் செய்வதில் புகழ்
பெற்றவர்கள் இவர்கள். திருமண வீட்டாரின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வெள்ளி
பாத்திரம், வைர நகைகள், தங்க நகைகள் மற்றும் செட்டிநாட்டு கருத்துரு தாலி
செய்வதிலும் சிறந்து விளங்குவதோடு “ராசியான நகைக்கடை” என்ற பெயரும்
பெற்றுள்ளனர்.
“எல்லோருக்கும் வைரம்” என்கிறீர்களே சாத்தியமா என்றேன்! வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் ஒருவர் கூட சுலபமாக வாங்கும் விலையில் ஆயிரம் ரூபாயில் வைர மூக்குத்தி எங்களிடம் உள்ளது என்றார். அப்படியெனில் எல்லோருக்கும் வைரம் என்ற இவர்களது கோஷம் எளிதில் வெற்றி காணும் என்றேன்.
உங்கள் கனவில் இருக்கும் நகை டிசைன்கள் நனவாகி உங்கள் கைக்கு வரும் என்ற அளவில் நினைத்ததை நினைத்தபடியே செய்து தருகின்றனர். உங்களின் பழைய நகைகளின் வைரத்தை பயன்படுத்தி புது டிசைன்களை செய்து கொடுத்து உங்களை நவீன உலகிற்கு கொண்டு செல்கின்றனர்.
ஓபன் செட்டிங் பிரபலமாகி வருவதால் பின்பக்கம் திறப்பாக இருக்கும். இதனால் தங்கம் குறைவாகவே தேவைப்படும். சுத்தம் செய்யவும் இலகுவாக இருக்கும்.
பழைய வைரங்களில் 30 அல்லது 32 கட்டிங் தான் இருக்கும். இப்போது வைரங்களில் 58 கட்டிங் வரை செய்யப்படுகிறது. கால் காரட் எடை கொண்ட வைரத்திலும் 58 கட்டிங் இருக்கும்.
தங்கம், வெள்ளி எங்கே வேண்டுமானாலும் விற்று காசாக்க முடியும் வைரம் அப்படி அல்ல. அதன் மதிப்பீடு அறிவதே ஒரு கேள்விக்குறி. எனவே வைரம் வாங்கும்போதே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஜெம்மாலஜிஸ்ட் நிறுவனங்களின் சான்றிதழுடன் வாங்க வேண்டும். இதற்கு கூடுதல் நம்பகத்தன்மை உண்டு. இதைத்தான் மீனா ஜூவல்லரி செய்கின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் தமிழர்களிடையே இவரது வைர நகைகள் பிரபலம். வாடிக்கையாளர்களின் பாராட்டுகள் இவர்களுக்கு விளம்பரமாக மாறுகிறது.
தனது ஊழியர்கள் குறித்து பேசுகையில், எங்கள் ஊழியர்கள் எங்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றார். 20 வருடத்துக்கு மேலாக மீனா குடும்பத்தில் பலர் தொடர்ந்து வேலையில் இருக்கின்றனர். இவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற சலுகைகளும் செய்து தருகின்றனர்.
“மீனா ஜூவல்லரி” என்ற பெயர் குறித்த கேள்விக்கு, மும்தாஜ்காக தாஜ்மஹால்… மனைவி மீனாவுக்காக மீனா ஜுவல்லரி என கூறி மகிழ்ந்தார்.
“கடை தொடங்கும்போது உறவினர்களும், நண்பர்களும் பொருளாதார உதவி செய்ததால் நான் இந்த அளவுக்கு வர முடிந்தது” என அவர்களுக்கு நன்றி பாராட்ட மறக்கவில்லை. தன் குடும்ப உறுப்பினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊழியர்கள் என இவர்கள்தான் மீனா ஜூவல்லரியின் அஸ்திவாரம் என்றார்.
சந்திரசேகரன் அவர்கள் இந்தியன் வங்கியில் தங்க மதிப்பீட்டாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று வைரங்களை மதிப்பிடும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர். எல்லோருக்கும் வைரம் என்ற இவரது கனவு நனவாகட்டும்… எனக் கூறி வாழ்த்துக்களுடன் விடைபெற்றோம்
தொடர்புக்கு : 93447 88803 / 99431 29992