ஒரு புதிய ஸ்டார்ட் அப் கம்பெனி ஆன்லைனில் விற்பனை செய்ய நினைத்தால் அவர்களின் இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த இணையதளம். அழகாக, நேர்த்தியாக இருக்கிறது.
இந்திய கலைப்பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது.
பழங்கால பொருட்கள், கைவினைப்பொருட்கள் (மார்பிள்,மெட்டல், ஹாண்ட்மேட் பேப்பர், சேண்ட் ஸ்டோன்), ஓவியங்கள், மரவேலைப்பாட்டு பொருட்கள், துணி வகைகள் என பலதரப்பட்ட பொருட்களும் கிடைக்கிறது.
பெட் லினன் (பெட் ஷீட்ஸ்), பிளாங்கெட்ஸ் (கம்பர்டர், ஜெயிப்பூரி குவில்ட்ஸ்), குவில்ட்ஸ் ஆகியவையும் விற்பனை செய்கிறார்கள்.
இந்திய நாட்டு கலைப்பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்ற ஒரு இணையதளமாகும். உள்நாட்டு விற்பனை மட்டுமல்ல, வெளிநாட்டு விற்பனையும் செய்கிறார்கள்.
பொருட்களை அனுப்ப ப்ளூடார்ட், ஆரமெக்ஸ், பெடெக்ஸ், டி.டி.டி.சி., கேட்டி போன்ற பல குரியர் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து வைத்துள்ளர்கள். இது தவிர கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த பேபால், ஈ.பி.எஸ்., ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். உலகம் முழுவதும் டெலிவரி செய்கிறார்கள். இது தான் இவர்களின் முக்கிய அம்சம்.
பொருட்களை பத்திரமாக அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பும் போது பொருட்களுக்கு ஏதும் சேதம் ஏற்பட்டு விட்டால் அதை மாற்றிக் கொடுக்கிறோம் என்ற கியாரண்டியும் தருகிறார்கள்.
கால் செண்டர் வைத்துள்ளர்கள். அதுவும் இந்தியாவிலும், அமெரிக்காவிலும். நீங்கள் அவர்களுடன் ரிஜிஸ்டர் செய்து கொண்டால் நியூஸ் லெட்டரும் அனுப்புவார்கள்.
இவர்கள் தங்கள் இணையதளம் மட்டுமல்லாமல் அமேசான், பெப்பர் பிரை, இந்தியா மார்ட், பேப் பர்னிஷ் மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள்.
உட்கார்ந்த இடத்திலேயே உலகம் முழுவதும் வியாபாரம்….. இது ஆன்லைன் ஸ்டோரின் மகத்துவம்.
நீங்கள் ஒரு ஆன்லைன் ஸ்டோர் வைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஒரு இணையதளம் இது. நீங்கள் பொருட்கள் வாங்கவும் ஏற்ற ஒரு இணையதளம் ஆகும்.சென்று பாருங்கள் – www.ecraftindia.com