இந்தியாவின் நிதி ஆயோக், அட்டல் இந்நோவேஷன் மிஷன் இரண்டும் இணைந்து 15 புதிய சவால்களை ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கும், எம்எஸ்எம்இ கம்பெனிகளுக்கும் அறிவித்துள்ளன.  

இந்தப் பதினைந்து சவால்களும் மிகப்பெரிய பரிசு தொகையை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு சவால்களிலும் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த சவால்கள் ஐந்து மத்திய அமைச்சகங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஒவ்வொரு மத்திய அமைச்சகத்துக்கும் மூன்று சவால்கள் வீதம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொன்றிலும் இருந்து இரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தக் குறிப்பிட்ட 15 பிரிவுகளில் நீங்கள் முன்னதாகவே நல்ல முறையில் ஆராய்ச்சி மற்றும் டெவலப்மென்ட் செய்திருக்க வேண்டும், அல்லது அதற்கான புரோட்டோ டைப் செய்திருக்க வேண்டிய அளவிற்கு வந்திருக்க வேண்டும். உங்களுக்கு இந்தப் பரிசு கிடைக்குமானால் அது உங்களுக்கு மூன்று தவணையாக கொடுக்கப்படும்.

எந்த அமைச்சகம் எத்தகைய சவால்களை வைத்திருக்கிறது என்று பார்ப்போம். 

நீக்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organization 

•   உந்து விசை (Propulsion)

•   புவியியல் தகவல் முறைமை

•   ரோபாட்டிக்ஸ்

இதில் நீங்கள் புதுமைகள் புகுத்தியிருந்தால், ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால், அதில் வெற்றி கண்டிருந்தால் கலந்து கொள்ளலாம்.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Ministry of Defense) 

• ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் வைத்து முன்கணிப்பு (predictive maintenance) செய்வது.  

• ஆட்டோ ஸ்டெபிலைசர் சிஸ்டத்தில் புதுமைகளை கண்டறிந்து அவற்றை புகுத்துவது.

• தகவல் தொடர்புத் துறையில் புதுமைகள் புகுத்துவது (மோடம்)

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் (Ministry of Food Processing) 

• வீணாகும் பொருட்களை எப்படி சேமிப்பது.  

• உணவுப்பொருட்கள் பேக்கேஜிங் துறையில் மாற்று வழிகள் என்ன?  

• உணவு பதப்படுத்தும் துறையில் புதுமையான எந்திரங்கள் கண்டுபிடிப்பு

நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) 

• டேட்டா அனலிட்டிக்ஸ் உபயோகித்து தொற்று நோய் வரப்போவதை எப்படி முன் கூட்டியே அறிவது? 

• ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நுண்ணுயிர் எதிர்ப்புக்கான முறைகளை கண்டறிவது.  

• நோய் தடுப்பு மருந்துகளை பத்திரமாக கொண்டு செல்ல உதவும் குளிர் சாதன வசதிகளை நவீன படுத்துவது எப்படி? 

வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகம் (Ministry of Housing and Urban Welfare) 

• நீர் வினியோகம் செய்யும் வழிகளில் நீர் வீணாகுவதை தடுக்கும் வழிகள், நீர் திருட்டை தடுக்கும் வழிகளில் புதுமை புகுத்தல்.  

• மாசுக்கட்டுப்பாடு தடுக்க ஸ்மார்ட் டெக்னாலஜியை எப்படி உபயோகிப்பது ? 

• நகரங்களில் இருக்கும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஸ்மார்ட் டெக்னாலஜியை எப்படி உபயோகிப்பது?

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள கீழ்கண்ட அரசாங்க  இணையதளத்துக்குச் சென்று மேலும் விவரங்கள் அறியலாம், அப்ளை செய்யலாம். http://aimapp2.aim.gov.in/arise/   

Spread the lovely business news