இந்தியாவில் தற்போது ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகள் இருக்கின்றன. அதாவது எம்.எஸ்.எம்.இ., (MSME) என்று அழைக்கப்படும்  கம்பெனிகள். இது தவிர இந்தியாவில் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்கள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உள்ளது.  இவர்கள் வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை விற்பதுதான் கடினமான காரியம், இதுதான் இந்த கம்பெனிகளின் தலையாய பிரச்சினை.

இவர்கள் பெரிய கம்பெனிகள் மார்க்கெட்டிங்கிற்கு செலவு செய்வது போல  செய்ய இயலாது. இது போன்ற சிறிய கம்பெனிகளுக்கு, கலைஞர்களுக்கு உதவும் விதமாக இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள ஏற்றுமதி வளர்ச்சி கழகங்களில்  ஒன்றான பியோ  அதாவது ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட்டர்ஸ்  ஆர்கனைசேஷன், குளோபல் லிங்கர் என்ற இணையதளத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி எம்எஸ்எம்இ கம்பெனிகள், பெண்கள், கைவினைஞர்கள், ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பித்திருப்பவர்கள் தங்களுடைய கம்பெனிகளை இந்த இணையதளத்தில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.  இதனால் அவர்களுக்கு உலகெங்கும் விற்பனை வாய்ப்புகள் பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

இந்த குளோபல் லிங்கரில் தற்போது 2 லட்சத்து 70 ஆயிரம் கம்பெனிகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதில் கன்ஸ்ட்ரக்ஷன், ஹெல்த்கேர், ஆட்டோமேட்டிவ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கன்சல்டன்ஸி, எஜுகேஷன்,  ஃபேஷன், கிப்ட், ஹாண்டிகிராப்ட், ஹார்டுவேர், ஹெல்த்கேர், லாஜிஸ்டிக்ஸ், பப்ளிஷிங்  என பல பிரிவுகள் இருக்கின்றன. 

நீங்கள் இந்த இணைய தளத்தில் உங்களுடைய நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரையும் ஆரம்பித்து அதன் மூலமாக விற்பனையைத் தொடங்கலாம்.  உங்களுக்கென ஒரு இணைய பக்கத்தையும் இதில் தொடங்கலாம். இதில் இணைவது இலவசம் என்பது குறிப்பிடதக்கது. 

இந்த இணையதளத்தில் பெண் ஏற்றுமதியாளர்களுக்கு என்று ஒரு குழுவும் இருக்கிறது. அவர்கள் அவர்களுக்குள் தங்களுடைய அனுபவங்களையும், தங்களுடைய கேள்விகளையும், தங்களுடைய சந்தேகங்களையும் போக்கும் விதமாக இந்த குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது 

www.fieo.globallinker.com என்ற இணைய தளத்தில் சென்று மேலும் விபரங்களை பார்க்கவும்.

Spread the lovely business news