ஸ்டார்ட் அப் கம்பெனிகள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொள்ளும் விதமாக பேஸ் புக் கம்பெனியின் வாட்ஸ் அப் நிறுவனம்,  இன்வஸ்ட் இந்தியா என்ற கம்பெனியுடன் இணைந்து  “ஸ்டார்ட் அப் இந்தியா சேலஞ்ச்” நடத்தியது.  இதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க டாலர் 250,000 (ரூபாய் 1 கோடியே 75 லட்சம்) வெல்பவர்களுக்கு பரிசாக கொடுத்தது.   

பெரிய அளவிலான சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்க உதவுகிற தனிப்பட்ட யோசனைகள் மற்றும் பிசினஸ் ஐடியாஸ் இருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற விதிகளுடன்  சுகாதாரப் பாதுகாப்பு, நிதி மற்றும் டிஜிட்டல் சேர்க்கை, கல்வி, கிராமப்புற பொருளாதாரம், குடிமகன் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் முதல் ஐந்து வெற்றியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறிய யோசனைகள், நல்ல பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வருங்காலத்தில் ஒரு பெரிய பங்காற்றக் கூடும். மேலும்      இவைதான் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க காரணமாக்க இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் நடந்த இந்த போட்டியின் முடிவுகள் வெளிவந்துள்ளன. ஐந்து கம்பெனிகள் தலா 50000 டாலர்கள் (ரூபாய் 35,00,000) பரிசை வென்றிருக்கிறது. 

மொத்தம் 1700 கம்பெனிகள் பங்கு பெற்றன. இதில் 70க்கும் மேலான  கம்பெனிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவை.  அதாவது ஆரம்பித்து 3 மாதம் கூட ஆகவில்லை.

வெற்றி பெற்ற கம்பெனிகள் என்ன செய்கிறார்கள் ? எப்படி தாக்கத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்று பார்ப்போம்.

www.medcords.com 

ஒரு அவசரம், ஆத்திரம் என்று டாக்டரிடம் சென்றால் பழைய மெடிக்கல் ரெகார்ட் எங்கே என்று தான் கேட்பார். அப்போது பலரும் முழிப்பதை கண்டிருக்கிறோம். இதை தவிர்ப்பதற்காக, அவர்களுக்கு உதவுவதற்காக

மெட்கார்ட்ஸ் என்ற கம்பெனி 2000 கிராமங்களில் வாழும் 700,000 நோயாளிகளின் மருத்துவம் சம்பந்தபட்ட  தகவல்களை ஆன்லைனில் சேகரித்து வைத்துள்ளது.

www.melzo.com 

மெல்சோ என்ற கம்பெனி விர்ச்சுவல் ரியாலிட்டி கம்பெனி ஆகும்.  இந்த இணையதளம் நீங்கள் பார்த்ததும் பார்க்க   நினைக்கும்  இடங்களும், ஆகியவற்றை விர்ச்சுவல் ரியாலிட்டியில் காண்பிக்கும். இதுவரை இந்த இணையதளத்தை 30,00,000 பேர் பார்த்துள்ளனர். குஜராத்தில் நடைபெற்ற வைபரண்ட் இந்தியா போட்டியில் முதல் பரிசை வென்ற இந்த கம்பெனி, தற்போது வாட்ஸ் அப் சேலஞ்சிலும் 50,000 டாலர் பரிசை வென்றிருக்கிறது.  

www.javis.in 

ஜாவிஸ் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி “ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்” டெக்னாலஜியை உபயோகித்து உங்கள் கம்பெனியின் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. குறிப்பாக விற்பனை துறையில் சாதனைகள் படைக்க உதவுகிறது.

www.gramophone.in 

கிராமபோன் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி விவசாயத்தில் , இவர்களின் டெக்னாலஜியையும் பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய விவசாய செலவுகளைக் குறைப்பதும், விளைச்சளைக் கூட்டுவதும் தான் இவர்களது வேலை. 15 சதவீதம் வரை விவசாயிகளின் செலவுகளை கட்டுப்படுத்த உதவுகிறார்கள்.

www.minionlabs.tech 

கம்பெனிகள் தங்களது மின்சார செலவுகளை கட்டுப்படுத்த இவர்கள் அனலிடிக்கல் டூல்களை வைத்து ஒரு சிறிய கருவியை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை தங்கள் நிறுவனங்களில்  பொருத்துவதன் மூலம் மாதம் 10% தங்களது மின்சார செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.  

Spread the lovely business news