சிக்கன், மட்டன், மீன் விற்கும் இடம் சுத்தமாக இருக்கிறதா, ஈ மொய்க்காமல் இருக்கிறதா என்று பலரும் பார்ப்பதுண்டு. இருந்தாலும், மார்க்கெட் போன்ற இடங்களில் அவ்வளவு சுகாதாரத்தை எதிர்பார்ப்பது கடினம்.

தற்போது ப்ரஷ் சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதாரமான முறையில் பேக் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள் பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள். இது மக்களால் விரும்பப்படுகிறது.

Click of a button,

Licious,

Meatigo,

Freshtoeat,

Zappfresh

போன்றவை இந்த வகை ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு உதாரணங்கள்.

இந்தியாவில் இந்த வகை பிசினஸ் 90 சதவீதம் அன் ஆர்கனைஸ்ட் தான். மேலும் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தியாவில் சுமார் 70 சதவீதம் மக்கள் அசைவ உணவை சாப்பிடுகின்றனர். இந்தியாவின் மாமிச உணவு மார்க்கெட்டின் மதிப்பு வருடத்திற்கு 210,000 கோடி ரூபாய்களாகும். இந்த துறை வருடத்திற்கு 18 முதல் 20 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது.

நீங்களும், உங்கள் ஊரில் இது போன்ற ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம். ஒரு செயலி (App), ஒரு இணையதளம், சுகாதாரமான முறையில் பேக்கிங் என்ற முறையில் செய்தால் அது உங்களுக்கு நிறைய வருமானத்தை பெற்று தரும். ஒரு நாள் முன்னரே ஆர்டர்கள் வந்து விடுவதால், அவற்றை வெளியிலிருந்தும் வாங்கி கொடுக்கலாம்.

Spread the lovely business news