ப்ளிப்கார்ட் இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் கம்பெனிகளில் ஒன்று. நாம் எல்லாருக்குமே ஒரு ஆதங்கம் எப்போதும் இருக்கும் நாம் பொருட்களின் விற்பனையை எவ்வாறு கூட்டுவது என்று. உங்களின் இந்த ஆதங்கத்தை போக்குவதற்கு ஆபத்பாந்தவனாக வருகிறது ப்ளிப்கார்ட்.
பிளிப்கார்ட் மூலமாக உங்களது பொருட்களை எப்படி விற்பது?
பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்களுடைய பொருட்களை விற்பதற்கு உங்களுக்கு தேவையானது நான்கு தான். ஒன்று உங்களது ஜிஎஸ்டி நம்பர், இரண்டாவது உங்களுக்கான பேங்க் அக்கவுண்ட், மூன்றாவது நீங்கள் விற்க நினைத்து இருக்கும் பொருட்கள், உங்களது பான் கார்டு. சில வகை விற்பனைகளுக்கு ஜி.எஸ்.டி. எண் விலக்கும் இருக்கிறது.
ஏன் பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் நீங்கள் விற்க வேண்டும்?
ஆன்லைன் சந்தையில் பிளிப்கார்ட் லீடராக இருக்கிறது. இன்றைய தினம் அந்த கம்பெனியில பத்து கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 80 லட்சம் ஷிப்மெண்ட் அனுப்புகிறார்கள். அதுவும் இந்தியாவில் ஆயிரம் ஊர்களுக்கு மேலாக. அங்கெல்லாம் பொருட்களை அனுப்பும் வசதி அவர்களிடம் இருக்கிறது. நீங்கள் அவர்களிடம் பதிவு செய்து கொண்ட பிறகு, உங்கள் பொருட்களை விற்றவுடன் உங்களுக்கு பணம் 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் கிடைத்துவிடுகிறது. உங்களுடைய பொருட்களுக்கான விலையை யார் நிர்ணயிப்பார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆன்லைனில் விற்கும்போது உங்கள் பொருட்களின் விலையை நீங்களே நிர்ணயத்து கொள்ளாலம். ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களைப் போலவே, உங்கள் பொருட்களை போலவே விற்பனை செய்யும் பலர் இந்த ஆன்லைன் சந்தையில் இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் உங்களுடைய பொருட்களின் விலை நியாயமாக இருக்கும் பட்சத்தில் தான் உங்களுக்கு வியாபார வாய்ப்புகள் அதிகம் இருக்கும். பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம் பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்களது பொருட்களை சந்தைப்படுத்த பணம் கட்ட வேண்டுமா என்பதுதான். ஆன்லைன் சந்தையில் உங்களது பொருட்களை காட்சிப்படுத்த பணம் எதுவும் கட்ட வேண்டாம். ஆனால் நீங்கள் சரக்குகளை ப்ளிப்கார்ட் ஆன்லைன் சந்தையின் மூலமாக விற்ற பின் அவர்களுக்கு ஒரு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த கமிஷனை, கூரியர் செலவைக் கழித்துக்கொண்டு மீதி பணத்தை உங்களுக்கு அனுப்புவார்கள்.
பொருளாதாரநிலை மந்தமா?
பொருளாதார நிலை மந்தமாக இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இந்த வருடம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆன்லைன் விற்பனைகளில் முதல் நாள் விற்பனைகளை வைத்து பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை. அந்த அளவிற்கு அமோக விற்பனை நடந்திருக்கிறது. இதனால் கூற விரும்புவது என்னவென்றால் ஆன்லைன் விற்பனையில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது உங்களுடைய பொருட்களின் விற்பனை கூடுவதற்கு, நீங்கள் அகில இந்திய அளவில் உங்கள் பொருட்களை விற்பதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்றுதான்.
பிளிப்கார்ட் செல்லரின் வெற்றி கதை
ப்ளிப் கார்ட்டின் ஒரு வெற்றி கதையை பார்ப்போம். ஹரியானா மாநிலத்தில் சோனிபட் என்ற ஊருக்கு அருகில் வசிக்கும் ரித்து கவுசிக் ப்ளிப்கார்ட்டில் முதலில் தான் தயாரித்த பெண்களுக்கான கைப்பைகளை விற்க ஆரம்பித்தார். பின்னர் இவற்றை “ரித்து பால்” என்ற பிராண்டில் வைக்க ஆரம்பித்தார். இன்றைய தினம் மாதம் ரூபாய் எட்டு லட்சம் வரை ஆன்லைன் மூலமாக விற்பதன் மூலம் லாபமாக சம்பாதிக்கிறார்.
உங்களுக்கு ப்ளிப்கார்ட் மூலமாக விற்க விருப்பமா அப்படியெனில் seller.flipkart.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள்.
கட்டுரையாளர் – சேதுராமன் சாத்தப்பன்