உலக அளவில், இறால் வளர்ப்பில் இந்தியா முக்கிய நாடாக திகழ்கிறது. தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவை இறால் வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கென செயற்கையாக உருவாக்கப்பட்ட குளங்களில் இறால்கள் வளர்க்கப்படுவதால், அந்த குளத்தில் இருக்கும் நீரின் சுத்தம், இறால்களுக்கு போடப்படும் உணவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
இவற்றைக் கருவிகள் மூலம் கண்காணிக்க, அதுவும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் (இண்டர்நெட் ஆப் திங்க்ஸ்) செய்ய ஆந்திராவைச் சேர்ந்த இருவாகா (Eruvaka) என்ற கம்பெனி, ஷிரிம்ப் டாக் (Shrimp Talk) என்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. இதை அந்த செயற்கை குளங்களில் நிறுவுவதன் மூலம் அந்தக் குளத்து நீரின் சுத்தம், இறால்களின் உணவுத் தேவை ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன. இதனால் பணமும், நேரமும் மிகவும் மிச்சப்படுத்தப்படுகின்றன. இவர்களின் இணையதளம் www.eruvaka.com.