பல்லவ மன்னர்கள் தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே ஏற்றுமதி இறக்குமதி செய்தனர் என்பதற்காக அவர்களைப் போற்றும் வகையில் தனது ஏற்றுமதி நிறுவனத்திற்கு “பல்லவன் எக்ஸ்போர்ட்ஸ்” என பெயர் வைத்ததாக பல்லவர்களின் பெருமையைச் சொல்லி பேச்சைத் தொடங்கினார் திருவண்ணாமலை செய்யாறு சேர்ந்த இதன் நிறுவனர் திரு. சங்கர் சுப்பிரமணியன்.
கேட்டரிங் உபகரணங்களில் என்னவெல்லாம் உற்பத்தி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “என்ன வேணும், எப்படி வேணும், எப்போது வேணும், எதுவானாலும் நாங்கள் செய்து தருவோம்” என்று சொல்லி மலைக்க வைத்தார். பின்னர் தனது உற்பத்தியின் லிஸ்ட் குறித்து பேச்சை தொடர்ந்தார். சமையலறை சாதனங்கள், பேக்கரி, சமையலறை உபகரணங்கள், டிஸ்பிலே கேபிநெட்கள், சாக்லேட் மெல்ட்டர்கள், டிஷ் வாஷர், மின்சார சாதம் வடிக்கும் பெரிய பாத்திரம், சிக்கன் கிரில் மிஷின், மின்சார தோசை தவா, இட்லி வேக வைக்கும் பிளான்ட், பீசா ஓவன் போன்ற பலவித உபகரணங்களை தயார் செய்து உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விற்பனை செய்து வருவதாக கூறினார்.
கஸ்டமர் டூ கஸ்டமர் மூலமே அதிக அறிமுகமும் சிபாரிசும் கிடைத்து கஸ்டமர்கள் உருவானார்கள் என்றார். ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி ஆர்டர் பிடிப்பதற்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியாக்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டாராம். சோஷியல் மீடியாக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டதால் எனக்கு மிகப் பெரிய லாபமாக இருந்தது என்று கூறினார்.
இந்நிறுவனத்தின் சிறப்புகள் என்னவென்றால் கேட்டரிங் சம்பந்தப்பட்ட எந்த உபகரணமானாலும் நீங்கள் கேட்க்கும் மாடலிலேயே அதை அப்படியே செய்து கொடுப்பதுதான். மாலத்தீவு, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இவரது சமயலறை பாத்திரங்கள் வெகு பேமஸ்.
மலேசியாவிலிருந்து ஒரு கஸ்டமர் “நான் ரோட்டி” செய்ய பயன்படுத்தும் பர்னரில் செராமிக் கல் பதிய வைத்து வேண்டும் என ஆர்டர் செய்ய, அவர் கேட்டவாறே செய்து கொடுத்ததால், அந்த பர்னர் மலேசியாவில் வெகுவாக பிரபலமானதோடு மேலும் சில ஆர்டர்கள் கைக்கு வந்ததாம்.
பல்லவன் எக்ஸ்போர்ட்ஸ் குறித்து மேலும் விபரம் அறிய சங்கர் சுப்ரமணியன் மொபைல் எண்: 70108 03627 / 80561 33498. வெப்சைட் www.pallavanexports.com