- ஜி.எஸ்.டி ல் யாரெல்லாம் பதிவு பெற தேவையில்லை?
நீலகண்டன்-திருச்சிராப்பள்ளி
எந்த ஒரு விலக்களிக்கப்பட்ட அல்லது வரிக்குட்படாத சரக்கு விற்பனை அல்லது சேவை புரிபவராக இருந்தால் அவர் கண்டிப்பாக ஜி.எஸ்.டி பதிவு பெற அவசியமில்லை. இதில் விற்பைன தொகையை பற்றி கவலைப்பட தேவையில்லை.
- ஜி.எஸ்.டி பதிவு எண் பெற்ற பிறகு வருடந்தோறும் பதிவினை புதுப்பிக்க வேண்டுமா?
ராஜ்குமார்-மதுரை
இல்லை. ஒரு முறை பதிவு பெற்றபின் அதனை சரண்டர் அல்லது கேன்சல் செய்யும் வரை பதிவு புதுப்பிக்க தேவையில்லை.
- புதிய ஜி.எஸ்.டி பதிவு சான்றிதழ் பெறுவதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா? அவ்வாறாயின் எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்?
முருகன்- சிவகங்கை
ஜி.எஸ்.டி புதிய பதிவு சான்றிதழ் பெற்றிட எவ்விதமான கட்டண தொகையையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
- பதிவு சான்றிதழினை கட்டாயம் அனைவர் பார்வையிலும் படும்படி காட்சிப்படுத்தப்பட வேண்டுமா?
முத்துராமன்- திருப்பூர்
நிச்சயமாக. பதிவு சான்றிதழ் கண்டிப்பாக அனைவர் பார்வையிலும் படும்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும். இது கண்டிப்பாக கிளைகள் குடோன்கள் மற்றும் பதிவில் சொல்லப்பட்ட அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும்.
- பதிவு பெற்றிட அதிகபட்சமாக எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
ரவிச்சந்திரன்- தஞ்சாவூர்
பதிவு சான்றிதழ் பெற்றிட சேவையாக இருந்தால் ரூபாய் இருபது லட்சத்திற்கு அதிகமாவும் அதே நேரத்தில் சரக்காக இருந்தால் நாற்பது லட்சத்திற்கு அதிகமாவும் விற்பனை தொகை இருப்பின் கண்டிப்பாக பதிவு பெற வேண்டும். மேலும் இந்த விற்பனை தொகை குறைவாக ஏன் ஒரு ரூபாயாக இருந்தாலும் பதிவு பெற விரும்பினால் பதிவு பெற்றிடலாம். அதோடு மட்டுமல்ல பெரிய நிறுவனங்கள் பதிவு பெற்றிருந்தால் தான் தங்களின் வெண்டராக பதிவு செய்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
உங்களின் GST தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள: sethu_dhavarajan@yahoo.com
மொபைல் : 94437 09102