சமூக இடைவெளியை மதித்து அலைபேசி மூலம் பேட்டி எடுக்க சென்னை “ஸ்மார்ட் டைமண்ட்ஸ்” (SMAART DIAMONDS) நிறுவனர் திரு. அருணாச்சலம் அவர்களை தொடர்பு கொண்டபோது, கொரோனா சூழ்நிலை மன இறுக்கத்தை குறைக்கும் வண்ணம் “நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?” என்ற பாடல் ஹலோ டியூனாக கேட்டது. மனம் குளிர பேச்சைத் தொடங்கினோம்.
பேட்டியில் அருணாச்சலம் அவர்களின் மகன் திரு. ராம்நாத் அவர்களும் கலந்துகொண்டது வைரத்துக்கு பட்டை தீட்டியது போல் அமைந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை தி. நகரில் ஜொலிக்கும் ஸ்மார்ட் டைமண்ட்ஸ்.
ராம்நாத் அவர்கள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி. இ., எம்.பி.ஏ., முடித்து மும்பையில் ஜெம்மாலாஜிஸ்ட் (Specialized in Natural Diamonds) கற்று, கலிஃபோர்னியாவில் பணிபுரிந்த நேரத்தில், இவரது தந்தையார் இந்தியாவில் சாதிக்க நிறைய உள்ளது எனச் சொல்லி, தாய்நாட்டுக்கே வந்துவிடும்படி அழைத்தார் அதை ஏற்று, வியாபாரத்தில் தந்தைக்கு தோள் கொடுக்கும் தமையனாக 12 வருடங்களாக உடனிருந்து பணியாற்றி வருகிறார்
தங்களின் வியாபார வளர்ச்சியின் ரகசியம் குறித்து பேசுகையில், “எங்களை நாங்கள் மற்ற வியாபாரிகளை விட வித்தியாசப்படுத்தி காட்டுகிறோம். எப்படியென்றால் எங்களின் வாடிக்கையாளர்கள் முதன்முறையாக எங்களிடம் வரும்போது நாங்கள் அவர்களிடம் பொருட்கள் விற்க முயற்சிப்பதில்லை. மாறாக வைர நகைகளின் நன்மைகள், தன்மைகள், அதை கையாள வேண்டிய விதம் மற்றும் பாதுகாக்கப் படவேண்டிய விதம் என பலவாறு அவர்களுக்கு விளக்கியும் அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும் அவர்களை திருப்திபடுத்துகிறோம்.
வாடிக்கையாளர்கள் முதல் முறை வரும் போது எங்களிடம் அவர்கள் வியாபாரம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. வியாபாரம் குறித்து மனம் தெளிவு பெற்றுச் சென்றால் போதும், அடுத்த முறை பொருள் வாங்க அவர்களாகவே எங்கள் கடை தேடி வருவார்கள். வாடிக்கையாளர்களுடன் தொழில் அறிவு, நுணுக்கங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் (sharing of knowledge) என்பதற்கு முக்கியத்துவம் தருகிறோம். வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வை உண்டாக்குகிறோம். அதன் மூலம் வரும் நம்பிக்கை ஆர்டராக மாறும் அதிசயத்தை காணலாம். இதுவே எங்களின் வியாபார அணுகுமுறை.
எங்களின் நகைகளின் தரத்திலும் சரி, வாடிக்கையாளர்களை அணுகும் முறையிலும் சரி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாடிக்கையாளர்களால் நாங்களும் வளரவேண்டும் எங்களால் அவர்களும் வளர வேண்டும். செல்வம் மட்டுமல்ல; செல்வாக்கும் வளரவேண்டும். வியாபாரத்தில் செல்வமும் செல்வாக்கும் இரட்டை தண்டவாளங்கள் போன்றவை.
மற்ற நகை கடைக்குச் சென்றால் அங்கே சேல்ஸ்மேன் விற்பனைக்கான கண்ணோட்டத்தில் மட்டுமே பேசுவார். ஆனால் இங்கே முதலாளிகளே நேரடியாக அணுகுவதால் சாதக பாதகங்களையும் அதை கையாளும் வண்ணங்களையும் எடுத்துச்சொல்லி தங்களின் வாடிக்கையாளர்களை தங்களிடம் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.
வெளிநாடுகளில் நடக்கும் எக்ஸ்போர்ட் புரமோஷனில் அதிகம் நாங்கள் கலந்து கொள்வதால் அதன்மூலம் ஆர்டர்கள் கிடைக்கும். எங்கள் வாடிக்கையாளர்களின் வாய்மொழி பாராட்டுதல்கள் கேட்டும், எங்களின் தரமான நகைகள் எங்கள் தரத்தைப் பற்றி பேசுவதாலும் புது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடி வருகின்றது.
அதிநவீன நுணுக்கமான கருவிகளை பயன்படுத்தி டிசைன்களை செய்வதால் நீங்கள் எதிர்பார்க்கும் டிசைன்களை உங்கள் மனதில் உள்ளதை அப்படியே துல்லியமாக செய்து கொடுப்பதில் வல்லுநர்கள் இவர்கள்.
ராம்நாத் மற்றும் துணைவியார் இந்த ஊரடங்கை பயனுள்ளதாக பயன்படுத்த எண்ணி மேலும் சில டிசைன்கள், கட்டிங் குறித்த ட்ரெயினிங் வகுப்புகளில் கலந்து பயின்று வருகின்றனர். வாழ்த்துக்கள்.
வைரங்களை முழு கவனமும் முழு அக்கறையும் செலுத்தி, முதல் தரமானதை தேடி வாங்கிவருகிறோம். அதுபோலவே பட்டறையில் ஆசாரி அருகில் அமர்ந்து முழு வேலை முடியும்வரை அங்கு இங்கு நகராமல் முடித்து கையோடு நகையாக வாங்கி வருவோம். தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லாததால் யாரையும் இந்த வேலைக்கு அமர்த்தாமல் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த பொறுப்பான வேலையை கடமையாக கருதி செய்வது வழக்கம். எப்போதும் ஒரே தரத்தை தருகிறோம் அதுவே நிரந்தரம் என கருதுகிறோம்.
உலகத்தில் அதிக வைரம் கிடைக்கும் இடம் ரஷ்யா, ஆப்பிரிக்கா மற்றும் கனடா. அங்கிருந்து 90% வைரம் எங்கே போகிறது தெரியுமா? நமது இந்தியாவுக்குதான். இந்தியாவில் பட்டை தீட்டப்பட்டு மீண்டும் வேறு பல நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. உலகத்தில் 12 ரக வைரங்கள் கிடைக்கின்றன. அதில் இந்தியாவுக்கு 11 ரக வைரங்கள் வந்து பட்டை தீட்டப்பட்டு முழுமை அடைகிறது என்பது நமக்கு பெருமை.
“இந்தத் தொழில் என்றில்லை எந்தத் தொழிலானாலும் தொடங்கும் நேரத்தில் இருக்கும் ஆர்வம் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக வரவேண்டும். அப்போதுதான் வெற்றியும் உங்கள் தலைமுறையை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்” என தனது அனுபவத்தை அருணாச்சலம் கூற வாழ்த்து பரிமாறி விடை பெற்றோம்.
தொடர்புக்கு : 94440 11748 / 80560 41984
வெப்சைட் : www.smaartdiamonds.com