எங்கள் பணியாளர்களில் ஒருவரான பாட்ரிசியா சோடோ கேரியர் சாய்ஸ் திட்டத்தின் வெற்றிக்கதையில் ஒருவராவார். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமென்ற சிந்தனை கொண்ட இவருக்கு மருத்துவத் துறையில் பணி செய்ய விருப்பம், ஆனால் உயர்நிலைப்பள்ளி டிப்ளமாவும், அதிக செலவும் அவர் மேலே படிப்பதற்குத் தடையாக இருந்தது. எனவே அவருக்கு தன் கனவு நிறைவேறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கேரியர் சாய்ஸ் திட்டத்தின் மூலம் படித்து மருத்துவப் பட்டயம் வாங்கிய பின் அவர் அமேசானிலிருந்து விலகி Sutter Gould Medical Foundationல் மருத்துவ உதவியாளராகச் சேர்ந்து தனக்குப் பிடித்த பணியைப் புதிதாகத் தொடங்கினார். பாட்ரிசியா போல தான் விரும்பியதை அடைய முடியாது என நினைத்த பலரும் தங்களது இரண்டாவது பணியை கேரியர் சாய்ஸில் சேர்ந்ததன் மூலம் அடைய முடிந்தது.
கடந்த பத்தாண்டில் அமேசான் அமெரிக்காவில் மட்டும் சுமார் 270 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. எங்களிடம் நேரடியாக வேலை பார்க்கும் பணியாட்கள் தவிர கட்டிட நிர்மாணம், கட்டிட சேவைகள், விருந்தோம்பல் சேவைகள் என பல துறைகளில் 7,00,000 வேலைகளையும் (indirect jobs) உருவாக்கியிருக்கிறோம். ஃபால் ரிவர், மசாஸுசூசெட்ஸ், கலிஃபோர்னியாவின் இன்லாண்ட் எம்பயர், ரஸ்ட் பெல்ட் போன்ற பகுதிகளில் மிகவும் தேவையான வேலை வாய்ப்புகளையும், பொருளாதர நடவடிக்கைகளுக்கென பல்லாயிரக்கணக்கான டாலர்களையும் முதலீடு செய்திருக்கிறோம். கோவிட்-19 நெருக்கடி இருக்கும் இக்காலகட்டத்தில் நாங்கள் கூடுதலாக 1,75,000 பணியாட்களை வேலைக்கு நியமித்திருக்கிறோம். வேறு நிறுவனங்களில் வேலையிழந்தவர்களும் இதில் அடக்கம். எங்களுடைய பணியாளர்களின் பாதுகாப்புக்காகவும், அவசியமான பொருட்களைப் பெற்று வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும் சுமார் 4 பில்லியன் டாலரை இந்த இரண்டாவது காலாண்டில் செலவு செய்திருக்கிறோம். கோவிட்-19 சம்பந்தமாக எங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து பரிசோதிக்கும் பணியில் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் அர்ப்பணிப்புடன் வேலை செய்து வருகின்றனர்.
நாங்கள் போட்டியிடும் சில்லறை வணிகச் சந்தை உலகளவில் மிகப் பெரியது, அசாதாரணமான அளவில் போட்டித்தன்மை கொண்டது. 25 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலக சில்லறை வணிகச் சந்தையில் அமேசானின் பங்கு 1 சதவிகிதம், அமெரிக்காவில் இதன் பங்கு 4 சதவிகிதமாகும். மற்ற தொழில்துறைகள் போல வெற்றி என்பது ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், சில்லறை வணிகத்தில் பலரும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் மட்டும் 80க்கும் அதிகமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் ஒவ்வொன்றின் ஆண்டு வருமானம் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகும். மற்ற சில்லறை வணிகர்களைப் போலவே, எங்களுடைய கடையின் வெற்றியானது அவர்களின் திருப்தியையும், கடையில் வாங்கும் அனுபவத்தையும் சார்ந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் அமேசான் டார்கெட், காஸ்ட்கோ, க்ரோஜர் மற்றும் அமேசானை விட இரண்டு மடங்கு பெரிதான வால்மார்ட் ஆகிய பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறது. பிரதானமாக ஆன்லைனில் நடைபெறும் விற்பனையில் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்க வேண்டுமென்பதில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆன்லைன் விற்பனையில் வளர்ச்சி மற்ற கடைகளின் விற்பனையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முதல் காலாண்டில் வால்மார்ட்டின் ஆன்லைன் விற்பனை அதன் மொத்த விற்பனையில் சுமார் 74 சதவிகிதமாகும். மற்ற கடைகள் முன்னெடுத்திருக்கும் `curbside pickup’, ` in-store returns’ போன்ற சேவைகளோடு அமேசானால் போட்டியிட முடியாது. இந்த போக்குகள் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்தாலும் கோவிட்-19 தொற்றினால் இதன் மீது இப்போது அதிக கவனம் குவிய ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் ஆன்லைன் ஆர்டர்களின் curbside pickup சுமார் 200 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதோடு நாங்கள் ஷாப்பிஃபை, இன்ஸ்டாகார்ட் போன்ற புதியவர்களுடனும் போட்டியிட வேண்டும். நம்முடைய பொருளாதாரத்தில் இருக்கும் எந்தவொரு துறையைப் போலவே சில்லறை வணிகத்திலும் தொழில்நுட்பம் உபயோகப்படுத்தப்படுவதால் அது ஆன்லைனாக இருந்தாலும், ஆஃப்லைனாக இருந்தாலும் அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாக இருந்தாலும் போட்டியானது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. “ஆன்லைன்”, `ஆஃப்லைன்” கடைகளின் சிறந்த அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாங்கள் அனைவரும் ஒரே வாடிக்கையாளர்களுக்காக போட்டியிட்டு சேவை செய்கிறோம் என்பதை நாங்களும் மற்ற எல்லா கடைகளைச் சேர்ந்தவர்களும் அறிவார்கள். சில்லறை வணிகப் போட்டியும் அது தொடர்பான மற்ற சேவைகளும் தொடர்ந்து மாறிவருகிறது. ஆனால் (சில்லறை வணிகத்தில்) வாடிக்கையாளர்கள் விரும்பும் குறைவான விலை, சிறந்த தேர்வு, வசதி ஆகியவை மட்டும் நிலையான ஒன்றாக இருந்து வருகிறது.
(ஆதாரம்: அமேசான் இணையதளத்தின் `DAY ONE’ Blog)