இதை மனதில் வைத்து தான் ஆரம்பிக்கப்பட்டது  “பேசிஸ்”  (Basis) என்ற இணையதளம். இவர்களது எண்ணம் என்னவென்றால் இந்தியாவில் அதிக அளவு பெண்களை  சேமிப்பு   பழக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும் அதுவும் குறிப்பாக  மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் அதிகளவு பெண்கள் நுழைய வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள்.   முதலில் முதலீடுகளை     ஊக்கப்படுத்தி பின்னர் மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம்  பெண்களைஇந்த    வகையான முதலீடுகளில் ஆர்வம் ஏற்படுத்தவேண்டும் என்பது தான் இவர்களது குறிக்கோள். இன்னும் 3  மாதங்களில் முழுவதுமாக  செயல்படுத்த நினைத்துள்ளார்கள்.

24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 400 பெண்களை         இன்டர்வியூ செய்து அவருடைய சேமிப்பு பழக்கத்தை  முழுமையாக ஆராய்ந்த போது தெரிய வந்தது  என்னவென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கியில் வைப்பு   நிதி அல்லது சேமிப்பு திட்டத்தில் அல்லது தங்கத்தில் மட்டுமே முதலீடுசெய்து வந்திருக்கிறார்க்ள் என்பது தெரியவந்தது.  ஆனால் பெண்கள் தங்களுடைய  வருமானத்தில் 20 சதவீதம் வரை சேமிக்கும் பழக்கத்தை      வைத்திருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்த சேமிப்பு பங்குச் சந்தையிலோ மியூச்சுவல் ஃபண்டிலோ செல்லவில்லை  என்பது தான் ஒரு ஆச்சரியமான விஷயம்.  எல்லாம் தங்கம், வங்கியில் வைப்பு நிதி அல்லது சேமிப்புக் கணக்கு என்பதிலேயே  சென்று கொண்டிருக்கிறது.

 உங்கள் முதலீடுகளை  ஆன்லைனிலேயே செய்ய பல            கம்பெனிகள்      இப்பொழுது வசதிகளை ஏற்படுத்திக்           கொடுத்துள்ளன. அவற்றில்    முக்கியமான கம்பெனிகளாக கருதப்படுபவை, Paytm Money, ET MONEY, Wealthy, Scripbox, Fisdom, WealthTrust, MyUniverse, MoneyLover, MoneyView, MTrakr, and IOU (I Owe You).  இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பல         கம்பெனிகள்ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஆகும். “பேசிஸ்” கம்பெனிக்கு மேலே கண்ட கம்பெனிகளிடமிருந்து பெரிய        அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.     ஆனால் அவர்கள்  இந்தப் போட்டியைப் பற்றி அதிகம்  கவலைப்படவில்லை.   காரணம்        பெண்களை மட்டும் குறி வைத்து அவர்களை மியூச்சுவல் பண்டுகள் மற்றும்  ஷேர்  மார்க்கெட்டில் முதலீடுகள் செய்ய வழிகள் சொல்லித் தர         அதிகம்  ஆட்கள் இல்லாததால் இதை ஒரு சாதகமான                  விஷயமாக இந்த கம்பெனி பார்க்கிறது.  www.getbasis.co  என்ற இணையதளத்தில் சென்று முழு விவரங்களை பார்க்கலாம்.

Read More