ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார்
சமையலில் கமகமக்கும் நம் தென்னகத்து மசாலாக்களை ‘சதர்ன் ஸ்பைசஸ்’ என்ற பெயரில் தயாரித்து, சந்தைப்படுத்தி வருபவர்கள் சென்னையைச் சேர்ந்த ஜெயமீனாட்சி மற்றும் வள்ளியம்மை. இன்ஸ்டன்ட் தோசை மாவு, இன்ஸ்டன்ட் இட்லி, சாம்பார் பொடி, இன்ஸ்டன்ட் ரசப்பொடி, இன்ஸ்டன்ட் குழம்பு பொடி, பருப்பு மிளகு பொடி, இட்லிப் பொடி, மிளகாய்பொடி, சுக்குப்பொடி, மஞ்சள்பொடி என்று ‘பிரிசர்வேடிவ் மற்றும் செயற்கை நிறம்’ சேர்க்காத இவர்களின் தயாரிப்புகள், இப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
ரீ-செல்லிங் முறையில் பணம் சம்பாதிப்பது என்பது காலம் காலமாக இருப்பது தான். ஆனால் அவற்றை செயலி மூலமாக செயல்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருப்பது
காவிரி ஆற்றை ஒட்டி இருக்கும் தஞ்சாவூர், நாகை பட்டுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் விவசாயம், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானமே முதன்மையானது. விவசாயத்தில் உள்ள கழிவு பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலோர்
பலருக்கு பல சமயங்களில் ஒரு முறை அணிந்த உடைகளை மீண்டும் அணிவது பிடிக்காது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும்
ஒரு முறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கும் புவிக்கும் மனிதனுக்கும் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட்டு, அவ்வகை பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க வேண்டாம் என்று அரசாங்கம் கூறியதும், பெரும்பாலான வணிக நிறுவனங்களும் கடைகளும் துணிப்பைகள் மற்றும் காகிதப் பைகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டன. இதிலிருந்துதான் தனது ‘ஸ்டார்ட் அப்’ தொழில் ஐடியாவைப் பிடித்துள்ளார்
இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கிற உலகத்தில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது என்பது ஒரு பெரிய வேலை. அதற்கு யாரிடமும் நேரம் இருப்பதில்லை. இதை மனதில் வைத்து பல இடங்களில் சிறிய அளவில் மாவு அரைத்து, பாக்கெட்டில் போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு பெரிய வியாபாரம் இருப்பதை மனதில் கொண்டு ஐ.ஐ.எம். படித்த முஸ்தபா அதிகமாக மக்கள் வேலைக்குப் போகும் பெங்களூர் நகரில் ஐ.டி. (I.D.) என்ற பெயரில் (I.D. என்றால் இட்லி, தோசை என்று பொருள்) இட்லி, தோசை மாவுகளை வியாபாரத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அது ஊர் ஊராக விரிவடைந்து வியாபாரம் பல ஊர்களுக்கு இன்று பரவியுள்ளது. வியாபாரமும் சக்கைப் போடு போடுகிறது. இட்லி, தோசை மாவு தவிர பல வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பதிலும் இறங்கியுள்ள இவர்கள், தற்போது புதிதாக கொண்டு வந்திருப்பது, ஐ.டி. டிகாஷன் ஆகும்.
நீங்கள் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். வாய்மொழி (word of mouth) மிகவும் சக்தி வாய்ந்தது” என்கிறார்
முன்பு பாக்குமட்டை என்பது அழுகி அழியக்கூடியது என்பதாகக் கருதி அதை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் இவர் இதற்குப் பலவித உருவங்கள் கொடுத்து உண்ணும்போது பரிமாறப் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கப், காபி கப், கிளாஸ் இப்படியாகப் பல பொருட்களாக மாறி, இவை விருந்தோம்பலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது என்றால் மிகையாகாது.
அமேசான் மூலமாக இந்தியாவில் இருந்துகொண்டே வெளிநாடுகளில் பொருட்களை விற்கலாம் என்று முன்பே பார்த்திருக்கிறோம். இந்த வகையில் இந்தியாவில் இருந்து கொண்டே பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனைச் செய்வது 2015ம் ஆண்டு அமேசான் கம்பெனியால் தொடங்கப்பட்டது. இதுவரையில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை (சுமார் 7000 கோடி ரூபாய்) இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் ஆன்லைன் மூலமாக விற்றுள்ளன.