வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். அதாவது நாளொன்றுக்கு சராசரி எட்டு மணி நேரம் நாம் தூங்க வேண்டும். அதற்கு தேவையான நவீன கொசு வலையும், கோரை குஷனிங் பாயும் தனது சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகிறார்கள் சென்னை விருகம்பாக்கத்தில் ஹாப்பி ப்ராடக்ட் (HAPPY PRODUCT) நிறுவனத்தார். இதன் நிறுவனர் திரு. கிருஷ்ணன் அவர்கள்.
மகிழ்ச்சி தரும் தயாரிப்புகளை தயாரிப்பதால் “ஹேப்பி ப்ராடக்ட்” என பெயர் வைத்தார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இன்று இந்தியாவை பயமுறுத்தும் டெங்கு போன்ற பல நோய்கள் கொசு மூலமே பரவுகின்றன. அதிலிருந்து தப்பிக்கவும், இலகுவாக நம்முடன் கொண்டு செல்வதற்காகவும் ஏற்றவாறு இந்த நவீன கொசு வலையை தயாரித்துள்ளனர். கொசுவத்தி தேவையில்லை, மின்சாரம் தேவையில்லை. வெளியூர் செல்லும்போது கூட காரில் மடித்து வைத்து எடுத்துச் செல்லலாம்.
கட்டிலிலும் தரையிலும் மிக சுலபமாக இதை கூண்டு போல அமைத்துக் கொள்ளலாம். இந்த நவீன கொசுவலைக்கு ஆணி, கயிறு எதுவும் தேவையில்லை., பாலி காட்டன் துணியால் தயாரித்துள்ளதால் இது எளிதில் கிழியாது.
“கொசு வலையா உள்ளே காற்றே வராதே” என அஞ்சுபவர்களுக்காக ஹனி கோம் ஹோல்ஸ் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி உள்ளே நல்ல காற்று வரும் அளவுக்கு செய்துள்ளார்கள். சிங்கிள், டபுள் மற்றும் டீலக்ஸ் என பல சைஸ்களில் கிடைக்கிறது.
இவர்களது தயாரிப்புகளை அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக ஃப்ளிப்கார்ட்டில் விற்பனையாகும் டாப் 100 பொருட்களில் இவர்களின் நவீன கொசுவலையும் ஒன்று என்பது பாராட்டத்தக்கது.
கோரையால் செய்யப்பட்ட கோரைப் பாயில் இடையில் குஷனிங் கொடுத்து பக்கவாட்டில் கிழியாமல் இருக்க நல்ல கடினமான டிசைன் காட்டன் துணி கொடுத்து அழகாக வடிவமைத்துள்ளார்கள். மொத்தத்தில் நல்ல குஷன் பாயில் தூங்கிய திருப்தி ஏற்படும் வகையில் உருவாக்கியுள்ளனர். இந்த பாயில் கச்சிதமாக சதுரமாக மடித்துக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல அழகான கைப்பிடியும் இணைக்கப்பட்டுள்ளது.
இவர்களது தயாரிப்புகளுக்கு தமிழகம் முழுதும் டீலர்ஷிப் தர தயாராக உள்ளனர். தொடர்பு கொள்ள : 97900 41555 இவர்களின் வெப்சைட் : www.happyproduct.in