# மதுரையில் ஏற்றுமதி, ஸ்டார்ட் – அப் கருத்தரங்கம்: சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்

**மதுரை:** தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட் – அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை மதுரையில் ஜூன்(சூன்) 7ம் தேதி ஞாயிறன்று ‘தினமலர் நாளிதழில் ஸ்டார்ட்-அப், ஏற்றுமதி தொடர் எழுதி வரும்’ மும்பையைச் சேர்ந்த வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்.

![](https://startupandbusinessnews.com/wp-content/uploads/2026/05/srs26-834x1024.jpg)

இதுகுறித்து&nbsp;அவர்&nbsp;கூறியதாவது:

ஏற்றுமதி&nbsp;தொழிலின்&nbsp;புதிய&nbsp;நடைமுறைகள்&nbsp;தெளிவாக&nbsp;தெரிந்து&nbsp;கொண்டால்,&nbsp;தவறில்லாமல்&nbsp;ஏற்றுமதி&nbsp;செய்யலாம்.&nbsp;கல்லுாரி&nbsp;மாணவர்கள்&nbsp;பலருக்கும்&nbsp;ஸ்டார்ட்-அப்&nbsp;தொடங்குவதில்&nbsp;ஆர்வம்&nbsp;உள்ளது. ‘ஸ்டார்ட்&nbsp;அப்’&nbsp;தொடங்க&nbsp;நிறைய&nbsp;விதிமுறைகள்&nbsp;உள்ளன.&nbsp;அவற்றை&nbsp;எளிமையாக&nbsp;கற்றுக்கொள்ளவும்,&nbsp;ஏற்றுமதி&nbsp;குறித்து&nbsp;தெளிவாக&nbsp;தெரிந்து&nbsp;கொள்ளவும்&nbsp;தமிழில்&nbsp;நடக்கும்&nbsp;இந்த&nbsp;நிகழ்ச்சி&nbsp;உதவும்.

ஸ்டார்ட்-அப்&nbsp;நிதி&nbsp;திரட்டுவது&nbsp;பற்றியும்,&nbsp;ஏற்றுமதிக்கு&nbsp;மார்க்கெட்டிங்&nbsp;செய்வது&nbsp;குறித்தும்&nbsp;இந்த&nbsp;கருத்தரங்கில்&nbsp;விடை&nbsp;கிடைக்கும்.&nbsp;நிகழ்ச்சியின்&nbsp;இடையே,&nbsp;பங்கேற்பவர்களின்&nbsp;தனிப்பட்ட&nbsp;சந்தேகங்களுக்கும்&nbsp;விடை&nbsp;அளிக்கப்படும்.&nbsp;தொழில்முனைவோர்,&nbsp;கல்லுாரி&nbsp;மாணவர்களுக்கு&nbsp;பயனுள்ள&nbsp;நிகழ்ச்சி&nbsp;இது.

400 ஸ்டார்ட் அப் தொழில்கள் அடங்கிய ரூபாய் 1200 மதிப்புள்ள 4 புத்தகங்கள், ‘வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி, ஏற்றுமதிக்கு டாக்குமெண்டேஷன் செய்வது எப்படி? உட்பட ரூபாய் 1500 மதிப்புள்ள ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 4 புத்தகங்கள் வழங்கப்படும். இது தவிர ரூபாய் 500 மதிப்புள்ள ஈ-புத்தகங்கள் வழங்கப்படும். மதிய உணவு வழங்கப்படும்.

இந்த&nbsp;நிகழ்ச்சிக்கு Venue Sponsor ஆக&nbsp;தியாகராஜர்&nbsp;கலைக்கல்லுாரி&nbsp;இருக்கிறது.&nbsp;தினமலர்&nbsp;ஊடக&nbsp;உதவி&nbsp;அளிக்கிறது.&nbsp;தமிழ்&nbsp;பிசினஸ்&nbsp;நியூஸ்&nbsp;மீடியா&nbsp;இந்த&nbsp;நிகழ்ச்சியை&nbsp;நடத்துகிறது.

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் இந்த நிகழ்ச்சி மதுரை தியாகராஜர் கலைக் கல்லுாரியில் இந்த கருத்தரங்கம் நடக்கிறது. முன்பதிவு விபரங்களுக்கு 98197 50966, 99940 29969 என்ற எண்களில் பேசலாம்.இவ்வாறு அவர் கூறினார்.