# “ஹாப்பி ப்ராடக்ட்” டின் நவீன கொசுவலை

வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை&nbsp; நாம் தூக்கத்தில் கழிக்கிறோம்.&nbsp; அதாவது நாளொன்றுக்கு சராசரி எட்டு மணி நேரம் நாம் தூங்க வேண்டும். அதற்கு தேவையான நவீன கொசு வலையும், கோரை குஷனிங் பாயும் தனது சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகிறார்கள் சென்னை&nbsp; விருகம்பாக்கத்தில் ஹாப்பி ப்ராடக்ட் &nbsp; (HAPPY PRODUCT) நிறுவனத்தார். இதன் நிறுவனர் திரு. கிருஷ்ணன் அவர்கள்.&nbsp;&nbsp;

மகிழ்ச்சி&nbsp; தரும் தயாரிப்புகளை தயாரிப்பதால் “ஹேப்பி ப்ராடக்ட்”&nbsp; என&nbsp; பெயர் வைத்தார்களோ என எண்ணத் தோன்றுகிறது.&nbsp;&nbsp;

இன்று இந்தியாவை பயமுறுத்தும்&nbsp; டெங்கு போன்ற பல நோய்கள் கொசு மூலமே பரவுகின்றன. அதிலிருந்து தப்பிக்கவும், இலகுவாக நம்முடன் கொண்டு செல்வதற்காகவும் ஏற்றவாறு இந்த நவீன கொசு வலையை தயாரித்துள்ளனர். கொசுவத்தி தேவையில்லை, மின்சாரம் தேவையில்லை.&nbsp; வெளியூர் செல்லும்போது கூட காரில் மடித்து வைத்து எடுத்துச் செல்லலாம்.

கட்டிலிலும் தரையிலும் மிக சுலபமாக இதை கூண்டு போல அமைத்துக் கொள்ளலாம். இந்த நவீன கொசுவலைக்கு ஆணி, கயிறு எதுவும் தேவையில்லை., பாலி காட்டன் துணியால் தயாரித்துள்ளதால் இது&nbsp; எளிதில் கிழியாது.

“கொசு வலையா உள்ளே காற்றே வராதே” என அஞ்சுபவர்களுக்காக ஹனி கோம் ஹோல்ஸ் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி உள்ளே நல்ல காற்று வரும் அளவுக்கு செய்துள்ளார்கள். சிங்கிள், டபுள் மற்றும் டீலக்ஸ் என பல சைஸ்களில் கிடைக்கிறது.&nbsp;

இவர்களது தயாரிப்புகளை அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்கிறார்கள்.&nbsp; குறிப்பாக ஃப்ளிப்கார்ட்டில் விற்பனையாகும் டாப் 100 பொருட்களில் இவர்களின் நவீன கொசுவலையும்&nbsp; ஒன்று என்பது பாராட்டத்தக்கது.&nbsp;

கோரையால் செய்யப்பட்ட கோரைப் பாயில் இடையில் குஷனிங் கொடுத்து பக்கவாட்டில் கிழியாமல்&nbsp; இருக்க நல்ல கடினமான டிசைன் காட்டன் துணி கொடுத்து அழகாக வடிவமைத்துள்ளார்கள். மொத்தத்தில் நல்ல குஷன் பாயில்&nbsp; தூங்கிய திருப்தி ஏற்படும் வகையில் உருவாக்கியுள்ளனர்.&nbsp; &nbsp; இந்த பாயில் கச்சிதமாக&nbsp; சதுரமாக மடித்துக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல&nbsp; அழகான கைப்பிடியும் இணைக்கப்பட்டுள்ளது.&nbsp;

இவர்களது தயாரிப்புகளுக்கு தமிழகம் முழுதும் டீலர்ஷிப் தர தயாராக உள்ளனர். &nbsp; தொடர்பு கொள்ள : 97900 41555&nbsp;&nbsp;இவர்களின் வெப்சைட் : [www.happyproduct.in](http://www.happyproduct.in)