# வாசனை எண்ணெய் வாங்கலியோ!

சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கிவரும் “பிலிஸ்&nbsp; ஆப் புத்தா” (Bliss of Buddha) நிறுவனம் திரு.&nbsp; நிருபமா அவர்களால் ஸ்டார்ட் அப் பிசினஸாக&nbsp; தொடங்கி கடந்த எட்டு ஆண்டுகளாக கம கமவென மணம் வீசிக் கொண்டிருக்கிறது.&nbsp;

&nbsp;இது ஸ்ரீ பைரவி விவசாய பண்ணையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.&nbsp; இவர்கள் மலர்களின் வாசனை திரவியங்களை எசென்ஸ் வடிவில்&nbsp; உற்பத்தி செய்து வருகின்றனர். கரணம்&nbsp; தப்பினால் மரணம் என்பது போல ஒரு சில துளிகள் எசென்ஸ் மாறிவிட்டாலும் முழு தயாரிப்பின்&nbsp; தன்மையே தலை கீழாக மாறிவிடும்.&nbsp;&nbsp;

இந்த செறிவூட்டப்பட்ட எசென்ஸ் ஆயிரம் கிலோ மூலிகை மலர்கள் மூலம் 2 முதல் 5 கிலோ&nbsp; மட்டுமே எண்ணெய் பிரித்து எடுக்க முடியும்.&nbsp; நலிந்து வரும் விவசாயம் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூலிகை மலர்கள் பயிரிடும் அனைத்து விவசாயிகளையும் ஸ்ரீ பைரவி விவசாய பண்ணை மூலம் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.&nbsp;

விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் மூலிகை மற்றும் மலர் கொள்முதல்&nbsp; செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது&nbsp; குறிப்பிடத்தக்கது.&nbsp; இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் நல்ல தரமுள்ள விளைப் பொருட்கள் கிடைக்கின்றன.&nbsp; மற்றும் நல்ல விலை இவர்கள் கொடுத்து வாங்குவதால் விவசாயிகளுக்கு திருப்தி அளிப்பதோடு,&nbsp; பாரம்பரியமாக தொடர்ந்து வரும் மூலிகைகளை பயிர் செய்து நல்ல வாழ்வாதாரத்தை உயர்த்தி&nbsp; வருகின்றனர்.&nbsp;

செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே சார்ந்து ஆர்கானிக் முறையில் அனைத்து திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றது.&nbsp; இதனால் அலர்ஜி போன்ற ஒவ்வாமை ஏதும் வர வாய்ப்புகள் குறைவு.&nbsp; இவர்கள் நீராவி வடிவில் மட்டுமே எண்ணெய்களை வடிக்கட்டுகிறார்கள்.&nbsp; அத்தியாவசிய எண்ணெய்கள் என்றால் செறிவூட்டப்பட்ட தாவர சாறுகள் ஆகும்.&nbsp; அவை இயற்கையான வாசனை மற்றும் சுவையை தக்க வைத்துக் கொள்கின்றன.&nbsp; இதை முறையாக சேமித்து வைத்தால் பல ஆண்டுகளானாலும் கெட்டுப் போவதில்லை.&nbsp;

வீட்டை சுத்தம் செய்ய ரசாயனங்களில் இருந்து நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் முழுமையாக இயற்கை விளை பொருள்களை கொண்டே&nbsp; திரவங்கள்&nbsp; தயாரிக்கப்படுகின்றன.&nbsp; இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் பாக்டீரியா,&nbsp; பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு ஆகிய மூன்று&nbsp; பண்புகளையும் உள்ளடக்கி வைத்துள்ளது.&nbsp; குளியலறை,&nbsp; சமையலறை மற்றும் வீடு முழுவதும் ஒரு சில நிமிடங்களில் சுத்தம் செய்யும் அளவுக்கு இலகுவான ஸ்ப்ரே தயாரிப்புகள் இவர்களிடம் நிறைய உள்ளன.&nbsp;&nbsp;

இவர்களின் தயாரிப்பில் சிறந்து விளங்குபவை இதோ:&nbsp;&nbsp;

ஜமரோசா&nbsp; ஆயில் (Jamarosa Oil)&nbsp; இது&nbsp; அற்புதமாக&nbsp; தோலை குணப்படுத்தும் எண்ணெய். தோலில் பிசுபிசுப்பை வெகு நேரம் நீடிக்க வைக்கும்.&nbsp;&nbsp;

பால்மரோசா எண்ணெய் (Palmarosa Oil)&nbsp; மயங்க வைக்கும் ஒரு வாசனை திரவியம்.&nbsp;&nbsp;

எலுமிச்சை புல் எண்ணெய் (Lemon Gross Oil) புத்துணர்ச்சியூட்டும் மற்றும் டாய்லெட்டில் பயன்படுத்த சிறந்தது.

சிட்ரோனெல்லா எண்ணெய் (Citronella Oil) இயற்கை பூச்சி மற்றும் கொசு விரட்டி.&nbsp;&nbsp;

ரோஸ்மேரி எண்ணெய் (Rosemary Oil) தலைமுடிக்கு சிறந்தது.

துளசி எண்ணெய் &#8211; சளி காய்ச்சலுக்கு உள்ளிழுக்க சிறந்த ஆன்மீக எண்ணை.&nbsp;&nbsp;

இவரது தயாரிப்புகளை அமேசானில் பதிவுசெய்து அதன் மூலம் விற்பனை செய்கின்றனர்.&nbsp; சிறந்த தயாரிப்புகளை மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் “பிலிஸ்&nbsp; ஆப் புத்தா” (புத்தாவின் ஆனந்தம்) நிறுவனர் திரு.நிருபமா அவர்களின்&nbsp; மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் :&nbsp;

91766 32037