# மதுரையில் ஏற்றுமதி, ஸ்டார்ட் &#8211; அப் கருத்தரங்கம்: சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்

**மதுரை:**&nbsp;தவறில்லாமல்&nbsp;ஏற்றுமதி&nbsp;செய்வது,&nbsp;ஸ்டார்ட்&nbsp;&#8211;&nbsp;அப்&nbsp;தொடங்குவது,&nbsp;அதற்கு&nbsp;நிதி&nbsp;பெறுவதற்கு&nbsp;வழிகாட்டும்&nbsp;கருத்தரங்கை&nbsp;மதுரையில்&nbsp;ஏப்ரல் 27ம் தேதி ஞாயிறன்று&nbsp;&#8216;தினமலர்&nbsp;நாளிதழில்&nbsp;ஸ்டார்ட்-அப், ஏற்றுமதி&nbsp;தொடர்&nbsp;எழுதி&nbsp;வரும்&#8217;&nbsp;மும்பையைச்&nbsp;சேர்ந்த&nbsp;வங்கியாளர்&nbsp;சேதுராமன்&nbsp;சாத்தப்பன்&nbsp;நடத்துகிறார்.

![](https://startupandbusinessnews.com/wp-content/uploads/2025/02/srs-1024x909.jpg)

இதுகுறித்து&nbsp;அவர்&nbsp;கூறியதாவது:

ஏற்றுமதி&nbsp;தொழிலின்&nbsp;புதிய&nbsp;நடைமுறைகள்&nbsp;தெளிவாக&nbsp;தெரிந்து&nbsp;கொண்டால்,&nbsp;தவறில்லாமல்&nbsp;ஏற்றுமதி&nbsp;செய்யலாம்.&nbsp;கல்லுாரி&nbsp;மாணவர்கள்&nbsp;பலருக்கும்&nbsp;ஸ்டார்ட்-அப்&nbsp;தொடங்குவதில்&nbsp;ஆர்வம்&nbsp;உள்ளது. &#8216;ஸ்டார்ட்&nbsp;அப்&#8217;&nbsp;தொடங்க&nbsp;நிறைய&nbsp;விதிமுறைகள்&nbsp;உள்ளன.&nbsp;அவற்றை&nbsp;எளிமையாக&nbsp;கற்றுக்கொள்ளவும்,&nbsp;ஏற்றுமதி&nbsp;குறித்து&nbsp;தெளிவாக&nbsp;தெரிந்து&nbsp;கொள்ளவும்&nbsp;தமிழில்&nbsp;நடக்கும்&nbsp;இந்த&nbsp;நிகழ்ச்சி&nbsp;உதவும்.

ஸ்டார்ட்-அப்&nbsp;நிதி&nbsp;திரட்டுவது&nbsp;பற்றியும்,&nbsp;ஏற்றுமதிக்கு&nbsp;மார்க்கெட்டிங்&nbsp;செய்வது&nbsp;குறித்தும்&nbsp;இந்த&nbsp;கருத்தரங்கில்&nbsp;விடை&nbsp;கிடைக்கும்.&nbsp;நிகழ்ச்சியின்&nbsp;இடையே,&nbsp;பங்கேற்பவர்களின்&nbsp;தனிப்பட்ட&nbsp;சந்தேகங்களுக்கும்&nbsp;விடை&nbsp;அளிக்கப்படும்.&nbsp;தொழில்முனைவோர்,&nbsp;கல்லுாரி&nbsp;மாணவர்களுக்கு&nbsp;பயனுள்ள&nbsp;நிகழ்ச்சி&nbsp;இது.

400&nbsp;ஸ்டார்ட் அப் தொழில்கள் அடங்கிய ரூபாய் 1200 மதிப்புள்ள 4 புத்தகங்கள்,&nbsp;&#8216;வெற்றிகரமாக&nbsp;ஏற்றுமதி&nbsp;செய்வது&nbsp;எப்படி,&nbsp;ஏற்றுமதிக்கு&nbsp;டாக்குமெண்டேஷன்&nbsp;செய்வது&nbsp;எப்படி?&nbsp;உட்பட ரூபாய் 1500 மதிப்புள்ள ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 4 புத்தகங்கள்&nbsp;வழங்கப்படும்.&nbsp;இது தவிர ரூபாய் 500 மதிப்புள்ள ஈ-புத்தகங்கள் வழங்கப்படும். மதிய&nbsp;உணவு&nbsp;வழங்கப்படும்.

இந்த&nbsp;நிகழ்ச்சிக்கு Venue Sponsor ஆக&nbsp;தியாகராஜர்&nbsp;கலைக்கல்லுாரி&nbsp;இருக்கிறது.&nbsp;தினமலர்&nbsp;ஊடக&nbsp;உதவி&nbsp;அளிக்கிறது.&nbsp;தமிழ்&nbsp;பிசினஸ்&nbsp;நியூஸ்&nbsp;மீடியா&nbsp;இந்த&nbsp;நிகழ்ச்சியை&nbsp;நடத்துகிறது.

காலை&nbsp;9:30&nbsp;மணி&nbsp;முதல்&nbsp;மாலை&nbsp;5:00&nbsp;மணி&nbsp;வரை&nbsp;சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் இந்த நிகழ்ச்சி மதுரை&nbsp;தியாகராஜர்&nbsp;கலைக் கல்லுாரியில்&nbsp;இந்த&nbsp;கருத்தரங்கம்&nbsp;நடக்கிறது.&nbsp;முன்பதிவு&nbsp;விபரங்களுக்கு&nbsp;98197 50966, 99940 29969&nbsp;என்ற&nbsp;எண்களில்&nbsp;பேசலாம்.இவ்வாறு&nbsp;அவர்&nbsp;கூறினார்.