# புஜியா பேரன்ஸ்  – BHUJIA  BARONS பவித்ரா குமார் எழுதிய ரூபாய் 5000 கோடியில்  கட்டப்பட்ட ஹல்திராம்  பேரரசு கதை.

ராஜஸ்தான் &#8211; பிகானீர் என்ற ஊரில்&nbsp;சிறிய அளவில் தொடங்கப்பட்ட “ஹல்திராம்” இன்று இந்தியாவில் தலைசிறந்த நொறுக்குத்தீனி பிராண்டுகளில் ஒன்றாகும்.

நம் ஊர் ஓமப்பொடி &nbsp;போன்ற ஒரு நொறுக்குத் தீனி வகைதான்&nbsp; புஜியா என்று அழைக்கப்படுவது. இதை மிகவும் ருசியாக தயாரிப்பதில்&nbsp; கங்கா பீஷன் அகர்வால் ஹல்திராம் என்ற இளைஞர் பெயர் பெற்றிருந்தார் . இப்போது&nbsp; ஹல்திராமின் சாம்ராஜ்யம் மெக்டொனால்டு மற்றும் டோமினோவின் ஒருங்கிணைந்த வருமானத்தை விட மிகப் பெரிய வருவாயைக் கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் டின் தகரத்தில் சல்லடை &nbsp;ஓட்டை இட்டு அதன் மூலம் உருவான காராச்சேவை,&nbsp;காகிதத்தை&nbsp;மடித்து கூம்பு போன்ற வடிவத்தில்&nbsp;பொட்டலாமாக கட்டி ஆரம்பிக்கப்பட்ட வியாபாரம்தான் இன்று ஆலமரமாக விரிந்திருக்கும் “ஹல்திராம்&nbsp;“.&nbsp;

நொறுக்குத்தீனியில் ஆரம்பித்து&nbsp; பின்னர் ஸ்வீட் ஸ்டால், சைவ உணவகங்கள், பாஸ்புட் என இந்தியாவின் பல நகரங்களுக்கும்&nbsp; பரந்து விரிந்தது. பின்னர் 1982 இல் சகோதரர் சிவ் கிஷென் (நாக்பூர்), பேரன் மனோகர்லால் (பிகானேர்) டெல்லியில் கிளைகளை தொடங்க எண்ணிய சமயத்தில், காந்தேவாலா, கன்வர்லால்ஜி, சினாராம் சிந்தி, அன்னபூர்ணா மற்றும் பிகானேர்வாலா போன்ற நொறுக்குத்தீனி விற்பனையாளர்கள் மிகப்பிரபலம். இது&nbsp; ஹல்திராம் சகோதரர்களுக்கு ஆச்சரியம். இருப்பினும் டெல்லி என்பது தேவைகள் மிகுந்த மாநகரம். தனது&nbsp; தயாரிப்புக்கு போதுமான இடவசதி தன்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டதும்&nbsp; ராஜபாட்டை தொடங்கியது&nbsp;.

புதுடெல்லியில் கடை உதயம். 1984 இல் நடந்த கலவரத்தில் கடைக்கு தீ வைக்கப்பட்டது. மனோகர் &nbsp;தன் வாழ்நாளில் சேர்த்த அனைத்து சொத்தும், எதிர்காலமும் கண்ணுக்கு முன்னே கனலாகிப் போனதை உணர்ந்தார்.&nbsp; பின்னர் தொடர்ந்து வந்த சோதனைகளை எதிர்கொண்டு சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்&nbsp; ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்தார்.&nbsp;

ஹல்திராம் அகர்வால் ஒரு வணிக குடும்பம். தங்கள் வணிக சாம்ராஜ்யத்தை&nbsp; நற்பண்பு, பணிவு மற்றும் உண்மைத் தன்மை கொண்டு&nbsp; நிர்வாகம் செய்கிறார்கள்.&nbsp; அதே நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டையும் தங்களின் கைகளில் இறுக்கமாக வைத்திருக்கிறார்கள். &nbsp; சமீபத்தில் அங்கிள் சிப்ஸ் நிறுவனத்தின் யூம்கீன் என்கிற பிராண்டை நிறுவனம் கையகப்படுத்தியது.&nbsp; அசாதாரண வெற்றிகளை அடைந்த சாதாரண மனிதர்கள் இவர்கள்.&nbsp;

ஹல்திராம் குடும்பத்தினர் தொழிலுக்கு ஆதரவாக இருந்த தங்கள் ஊரைச் சேர்ந்த தொழிலாளர்களை மற்ற பெரிய நகரங்களுக்குச்&nbsp; சென்றபோது உடன் வைத்துக்கொண்டனர். ஆஷிஷ் அகர்வால் நினைவு கூறும்போது,&nbsp; இந்த வணிகம் வலுவான உறவுகளின் அடித்தளத்தில் கட்டப்பட்டது என்கிறார்.&nbsp;

அங்கிள் சிப்ஸ் நிறுவனத்தில் இருந்த டாக்டர் தியாகி என்பவரை நிர்வாக இயக்குனராக ஹல்திராம்&nbsp; குடும்பம்&nbsp;நியமனம் செய்தது. குடும்பத்தைச் சாராத ஒருவர் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் நுழைந்தது இதுவே முதல் முறை. இவர் நிறுவனத்தை ஒரு ப்ரொபஷனல் நிறுவனமாக மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.&nbsp;

&nbsp;“70%&nbsp;குடும்ப நிறுவனங்கள் &nbsp;மூன்றாவது தலைமுறையை தாண்டி நிறுவனத்தை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை” என்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வை மேற்கோள் காட்டும் பங்கஜ் அகர்வால், தானும் குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து&nbsp; குடும்பத்தின் மரபு உரிமையை பாதுகாக்க அடுத்தடுத்த திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்.

‘உங்களைத் தூண்டுவது எது?’ என பங்கஜ் அகர்வாலிடம்&nbsp;கேட்டதற்கு, ‘Passion-பேஷன்.&nbsp;

நான் ஒவ்வொரு நாளும் ‘எங்களின் நிறுவனத்தின் மீது ஆர்வமாக இருக்கிறேனா’ என்று&nbsp;என்னை நானே தினமும் கேட்டுக் கொள்வேன். எனது பதில் எப்போதும் ஆம் என்றுதான் இருக்கும்&nbsp;என்கிறார்&nbsp;. இந்த உத்வேகம் ஒவ்வொரு தொழில் முனைவருக்கும் இருந்தால் வெற்றி நமதே.

இந்த ஹல்திராம்&nbsp; பேரரசு மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:&nbsp;

- பழமையோடு இணைந்த புதுமை.&nbsp;
- தோல்வி கண்டு துவளாமை.&nbsp;
- நற்பண்பு, பணிவு மற்றும் உண்மைத் தன்மை.&nbsp;
- நிரந்தரமான தரமும் சுவையும்.&nbsp;&nbsp;
- தீவிர சந்தை கண்காணிப்பு.&nbsp;
- காலத்துக்கேற்ற தொழில்நுட்ப&nbsp; வளர்ச்சியை பயன்படுத்திக்&nbsp;கொள்ளுதல்.
- திறமையானவர்களை இனம் கண்டு தங்களுடன்&nbsp; இணைத்து&nbsp;கொள்ளுதல்.
- குடும்ப உறவுகளை பேணி காத்தல்.&nbsp;
- அடுத்த தலைமுறையை தொழிலில்&nbsp; ஈடுபடுத்தல்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்தால்&nbsp; ஹல்திராம்&nbsp; நிறுவனம் கடந்து வந்த பாதையும் வெற்றிக்கான ரகசியமும் புரியும்.&nbsp;