# <strong>பளிச்சிடும்  தூய்மையில் ஸ்டே  ஃப்ரெஷ் லாண்ட்ரோமேட்ஸ்! பேட்டி,  கட்டுரையாளர் :  அ. ஹுமாயூன்,  சிதம்பரம்.</strong>

கோயம்புத்தூரில், ஸ்டே&nbsp; ஃப்ரெஷ் லாண்டிரோமேட்ஸ்&nbsp; என்னும் பெயரில் அதி நவீன தொழில்நுட்பம் சார்ந்த சலவையகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதை திரு.&nbsp; ஸ்ரீராம் மாதவன் அவர்கள்&nbsp; தொடங்கி அருமையாக நடத்தி வருகிறார்..&nbsp;

அன்றாட வீட்டு வேலைகளுக்காக நாம் ஒதுக்கும் நேரத்தில்,&nbsp; அதிகமான நேரத்தை விழுங்குவது துணி துவைத்து அயர்ன் போடும் வேலைதான்.&nbsp; இயந்திர கதியாக ஓடிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களில், இது அதிக நேரத்தை விழுங்கும் வேலையாக கருதப்படுகிறது.&nbsp; இத்தகைய சூழ்நிலையில் போன் அடித்தால் போதும் உங்கள் வீட்டுக்கே வந்து அழுக்குத் துணிகளை எடுத்து சென்று துவைத்து, அயர்ன் செய்து, மெருகூட்டி குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வாசல் கதவுக்கே&nbsp; வந்துவிடும்&nbsp; என்றால் அதை நகரவாசிகள் விட்டு விடவா போகிறார்கள்.&nbsp;

துணிகள் சேதமாகாமலும்,&nbsp; கரைகள் நீக்கப்பட்டும், மெருகூட்டியும், வண்ணம் கலையாமலும் இப்படியாக அனைத்து வகையிலும் அதிக அக்கறை காட்டி துணிகளை தூய்மை செய்து தருவதில் இவர்கள் வல்லவர்கள். இவர்கள் துவைக்க பயன்படுத்தும் தண்ணீர், சோப்பு மற்றும் கிளீனிங் பொருட்களுக்கு ஐஎஸ்ஓ (ISO) சான்றிதழ் பெற்றுள்ளனர் என்பதிலேயே இவர்கள் நமது&nbsp; உடைகள் மேல் எவ்வளவு அக்கறை உடையவர்கள் என்பது தெரிகிறது.

இவர்களின் புதுமை கலந்த சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். துணியில் இருக்கும்&nbsp; கரையை போக்குவதிலும்,&nbsp; பட்டுப்புடவைகளை மெருகூட்டுவதிலும்&nbsp; சுகாதார முறைப்படி அழுக்கு நீக்குவதிலும் இவர்கள் வல்லுனர்கள்.&nbsp; ஒருவரின் ஆடைகளுடன் மற்றவர் ஆடைகளை எக்காரணத்தை முன்னிட்டும் கலந்து துவைக்க மாட்டார்கள்.&nbsp; ஒரு கிலோ துணி என்றாலும் தனியேதான் துவைப்பார்கள்.&nbsp;

நமது திருமண ஆடைகளை நினைவுப் பொருளாக பாதுகாத்து வைப்பதில் நமக்கு ஒரு அலாதி பிரியம்.&nbsp; அத்தகைய சிறப்பு ஆடைகளுக்கு சிறப்பான அக்கறை கொண்டு மெருகூட்டித்&nbsp; தருகிறார்கள்.&nbsp; இவர்களின்&nbsp; இந்த தூய்மை பணிக்கு &nbsp; குறைந்த கட்டணம்தான் வசூலிக்கின்றனர்.&nbsp; கிலோ கணக்கில் எடைபோட்டுதான் சலவைக்கு துணியை எடுக்கின்றனர்.

இப்போது பெங்களூரில் ஒரு பிரான்சைஸ் இயங்குகிறது.&nbsp; &nbsp; இவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 12 பிரான்சைஸ் கொடுக்க&nbsp; திட்டமிட்டுள்ளனர்.&nbsp; குறிப்பிட்ட காலத்திற்கு பிரான்சைஸ்க்கு&nbsp; சலவை குறித்து உடனிருந்து ட்ரெய்னிங் கொடுப்பார்கள். &nbsp; அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதிலும் ஏதும் தடை இல்லையாம்

இவர்களது தூய்மை சலவை தொழில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படைத் தன்மை உடையதாக இருப்பதற்கு ஒரு சான்று,&nbsp; யார் வேண்டுமானாலும் இவர்களது சலவையகத்துக்குப் போய் அதன் செயல்பாடுகளை பார்க்க அனுமதிக்கின்றனர். கோவையில் துணி சலவை செய்வதில் இவர்கள் ஒரு மைல் கல்லாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.&nbsp; உடைகளுக்கு மயக்கும் பிரகாசத்தை கொடுத்து&nbsp; சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம்&nbsp; குறித்து மேலும் அறிந்து கொள்ள நிறுவனர் ஸ்ரீராம் மாதவன் அவர்களை 94421 41916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.