# நேரடியாக விலகி இருங்கள், செயலி மூலம் தொடர்பில் இருங்கள் !

இப்பொழுது எல்லோருடைய தாரக மந்திரமும் ‘விலகி இரு&#8217; என்பதுதான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; ‘ஸ்டே டச்’ (Stay Touch) என்ற ஒரு செயலி&nbsp; தொடர்பில் இருப்பது சுலபமாக்குகிறது.&nbsp; &nbsp; சாதாரணமாக வியாபார நிமித்தமாகவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகுலுக்குவது, விசிட்டிங் கார்டுகளை கொடுப்பது போன்றவை சகஜமானவை. ஆனால் இப்போதும் கொரோனா காலம் முடிந்த பின்னரும் இந்த பழக்கம் தொடருமா என்பது சந்தேகம்தான்.&nbsp;

ஒருவரிடமிருந்து நீங்கள் விசிட்டிங் கார்டுகளை &nbsp; வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்?&nbsp; உடனடியாக அதை உங்கள் மொபைல் போனில்&nbsp; அவருடைய பெயர், தொடர்பு முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை பதிவு செய்ய நினைப்பீர்கள்.

அந்த கஷ்டம் எல்லாம் இப்போது இல்லை, உங்கள் மொபைலில் ஸ்டே&nbsp; டச் செயலி இருக்க&nbsp; நீங்கள் சந்திப்பவரின் மொபைலிலும் அதே செயலி இருக்குமானால், இருவரும் ஒருவருக்கொருவர் மொபைல்&nbsp; &nbsp; போன் வழியாகவே உங்களுடைய&nbsp; விசிட்டிங் கார்டு விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.&nbsp;

ஒரு வேளை நீங்கள் சந்திக்கும் நபரிடம் ஸ்டே டச் செயலி இல்லாவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அவருக்கு வாட்ஸ்அப், ஈமெயில், டெலிகிராம், ஸ்கைப், எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய விசிட்டிங் கார்டு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; விவரங்களை உங்கள் செயலியில் இருந்து அவருடைய மொபைலுக்கு அனுப்பலாம்.ஒருவருடைய விசிட்டிங் கார்ட் விபரங்களை பதியும்போது அவர் யார் என்பதை ஞாபகம் வைத்துக் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கொள்வதற்காக அவரைப் பற்றிய விவரங்களையும் எழுதுவதற்குஇடமும் இந்த செயலியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணையதளம் [www.staytouch.com](http://www.staytouch.com)