# தேனி வளர்ப்பு

இந்தியாவில் தேன் சந்தை வருடந்தோறும்&nbsp;10%&nbsp;வளர்ந்து வருகிறது,&nbsp;மேலும்&nbsp;2024&nbsp;க்குள்&nbsp;2800&nbsp;கோடி ரூபாய் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக தற்போது இருக்கிறது.

சென்னையை&nbsp;சேர்ந்த&nbsp;அக்ரிடெக்&nbsp;ஸ்டார்டஅப்&nbsp;கம்பெனி&nbsp;“கோபஸ்ஸர்” (gobuzzr)&nbsp;என்ற&nbsp;கம்பெனி&nbsp;கண்டுபிடித்த ஒரு கருவி தேன் கூடுகளின் கீழ் பொருத்தப்படுகிறது. இவை தேன் கூட்டின் உட்புற ஈரப்பதம்,&nbsp;வெப்பநிலை,&nbsp;எடை மற்றும் தேனீக்களின் ஒலிகள்&nbsp;ஆகியவற்றை&nbsp;இண்டர்நெட்&nbsp;ஆப்&nbsp;திங்க்ஸ்&nbsp;(IoT)&nbsp; என்ற தொழில்நுட்பத்தை&nbsp; வைத்து&nbsp;கண்காணிக்கிறது. இதை தேனீ வளர்ப்பவர்கள் தங்களது&nbsp;கம்ப்யூட்டர்&nbsp;அல்லது&nbsp;மொபைல்&nbsp;வழியாக இந்த&nbsp;கம்பெனியின்&nbsp;செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இதனால் தேனீ வளர்ப்பவர்கள் தேவையை அறிந்து நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தேன்&nbsp;உற்பத்தியை&nbsp;கூட்ட முடிகிறது,&nbsp;அதிக&nbsp;வருமானத்தை&nbsp;பெற முடிகிறது.

இந்த&nbsp;ஸ்டார்ட்&nbsp;அப்&nbsp;கம்பெனியை&nbsp;ஆரம்பித்த கபில்தேவ் தென் ஆப்பிரிக்கா&nbsp;நாட்டிற்கு&nbsp;சென்றிருந்த போது&nbsp;30,000&nbsp;தேன் கூடுகளை வைத்திருந்த ஒரு பண்ணைக்கு விஜயம் செய்தபோது,&nbsp;விவசாயிகள்&nbsp;தேனை&nbsp;பிரித்தெடுக்க&nbsp;எப்படி&nbsp;சிரமப்பட்டார்கள் என்பதையும்,&nbsp;தேன் கூடுகளில் தேனீக்களின் ஆரோக்கியத்தை&nbsp; யூகம் மற்றும் உள்ளுணர்வு ஆகியவை கண்காணிக்கப்படுவதையும் கவனித்தார். மேலும் அவர்கள் தேன் எடுக்க பயன்படுத்திய சில நடைமுறைகள்&nbsp;தேனீக்களுக்கு&nbsp;கொடூரமானவையாக இருந்ததையும் குறிப்பாக மாற்ற விரும்பினார். இதன் விளைவு தான் இந்த&nbsp;“கோபஸ்ஸர்”&nbsp;ஸ்டார்ட்&nbsp;அப்&nbsp;கம்பெனி&nbsp;கண்டுபிடித்த கருவியாகும்.

இந்த&nbsp;நிறுவனம்&nbsp;கண்டுபிடித்த வழிமுறைகள் ஆயிரக்கணக்கான அப்பாவி தேனீக்களை&nbsp;மூச்சுத்திணறச்&nbsp;செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாமல்,&nbsp;போக்குவரத்து செலவைக் குறைத்து,&nbsp;தொழிலாளர்&nbsp;செலவையும்&nbsp;குறைத்து அதிக&nbsp;லாபத்தைக்&nbsp;கொடுக்க ஆரம்பித்தது.

இந்த&nbsp;கம்பெனியின்&nbsp;கருவிகள் விலைக்கு விற்கப்பட்டாலும்,&nbsp;இந்தியாவில் சுமார்&nbsp;5000&nbsp;கருவிகளை இலவசமாக தேனீ&nbsp;வளர்ப்பவர்களுக்கு&nbsp;கொடுக்க முடிவு செய்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

தேனீக்களும்,&nbsp;மகரந்த சேர்க்கையும்

தேனீக்கள் தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட மிகவும் உதவியாக இருக்கின்றன. தேனீக்கள்&nbsp;உட்பட&nbsp;பூச்சிகளின் மூலம் ஏற்படக் கூடிய மகரந்த சேர்க்கையின் உலக மதிப்பு&nbsp;17,50,000&nbsp;கோடி ரூபாய்களுக்கு மேல் இருப்பது&nbsp;குறிப்பிடதக்கது.&nbsp;

தேனீ வளர்ப்பதால் தென்னை,&nbsp;பாக்கு தோப்புகளில்&nbsp;30&nbsp;சதவிகிதம் விளைச்சலும்,&nbsp;பிற விவசாயங்களில்&nbsp;20&nbsp;சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.

இந்த&nbsp;அக்ரிடெக்&nbsp;தொடக்க நிலை&nbsp;கம்பெனி&nbsp;தற்போது&nbsp;ஜிம்பாப்வே&nbsp;மற்றும் இங்கிலாந்தில்

தேனீ வளர்ப்பவர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இவர்களின் இணையதளம்&nbsp;www.gobuzzr.com

இந்த&nbsp;கம்பெனி&nbsp;இந்தியாவின் சிறந்த&nbsp;30&nbsp;ஸ்டார்ட்&nbsp;அப்-களில்&nbsp;ஒன்றாக&nbsp;“நாஸ்காம்”&nbsp;அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

இந்த&nbsp;கம்பெனி&nbsp;தவிர&nbsp;தேனீ வளர்ப்பிற்கு&nbsp;உதவ&nbsp;பல&nbsp;ஸ்டார்ட்&nbsp;அப்&nbsp;கம்பெனிகள்&nbsp;உலகளவில் இருக்கின்றன. அவற்றில்&nbsp;குறிப்பிடதக்கன&nbsp;ApisProtect, BuzzBox, Bee Smart Technologies, BeeHero, The Bee Corp&nbsp;ஆகும்.&nbsp;