# திருவண்ணாமலை  பல்லவன் எக்ஸ்போர்ட்ஸ் !

பல்லவ மன்னர்கள் தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே ஏற்றுமதி இறக்குமதி செய்தனர் என்பதற்காக அவர்களைப் போற்றும் வகையில் தனது ஏற்றுமதி நிறுவனத்திற்கு “பல்லவன் எக்ஸ்போர்ட்ஸ்”&nbsp; என பெயர் வைத்ததாக பல்லவர்களின் பெருமையைச் சொல்லி பேச்சைத் தொடங்கினார் திருவண்ணாமலை செய்யாறு சேர்ந்த&nbsp; இதன் நிறுவனர் திரு.&nbsp; சங்கர் சுப்பிரமணியன்.

கேட்டரிங் உபகரணங்களில் என்னவெல்லாம் உற்பத்தி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது,&nbsp; “என்ன வேணும்,&nbsp; எப்படி வேணும்,&nbsp; எப்போது வேணும், எதுவானாலும் நாங்கள் செய்து தருவோம்” என்று&nbsp; சொல்லி மலைக்க வைத்தார்.&nbsp; பின்னர் தனது உற்பத்தியின் லிஸ்ட் குறித்து&nbsp; பேச்சை தொடர்ந்தார்.&nbsp; சமையலறை சாதனங்கள், பேக்கரி, சமையலறை உபகரணங்கள், டிஸ்பிலே&nbsp; கேபிநெட்கள், &nbsp; சாக்லேட் மெல்ட்டர்கள்,&nbsp; டிஷ் வாஷர், மின்சார சாதம் வடிக்கும் பெரிய பாத்திரம், சிக்கன் கிரில் மிஷின், மின்சார தோசை தவா, இட்லி வேக வைக்கும் பிளான்ட்,&nbsp; பீசா ஓவன் போன்ற பலவித உபகரணங்களை தயார் செய்து உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விற்பனை செய்து வருவதாக கூறினார்.&nbsp;

கஸ்டமர் டூ கஸ்டமர்&nbsp; மூலமே அதிக அறிமுகமும் சிபாரிசும் கிடைத்து கஸ்டமர்கள் உருவானார்கள் என்றார்.&nbsp; ஆரம்ப காலத்தில் ஏற்றுமதி ஆர்டர் பிடிப்பதற்கு ஃபேஸ்புக்,&nbsp; வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியாக்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டாராம்.&nbsp; சோஷியல் மீடியாக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டதால் எனக்கு மிகப் பெரிய லாபமாக இருந்தது&nbsp; என்று கூறினார்.&nbsp;&nbsp;&nbsp;

இந்நிறுவனத்தின் சிறப்புகள் என்னவென்றால் கேட்டரிங் சம்பந்தப்பட்ட எந்த உபகரணமானாலும் நீங்கள் கேட்க்கும் மாடலிலேயே&nbsp; அதை அப்படியே செய்து கொடுப்பதுதான்.&nbsp; மாலத்தீவு,&nbsp; இலங்கை,&nbsp; சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல&nbsp; நாடுகளில்&nbsp; இவரது சமயலறை பாத்திரங்கள் வெகு பேமஸ்.&nbsp;

மலேசியாவிலிருந்து ஒரு கஸ்டமர் “நான் ரோட்டி” செய்ய பயன்படுத்தும் பர்னரில்&nbsp; செராமிக் கல் பதிய வைத்து வேண்டும் என ஆர்டர் செய்ய, அவர் கேட்டவாறே செய்து கொடுத்ததால், அந்த பர்னர் மலேசியாவில் வெகுவாக&nbsp; பிரபலமானதோடு மேலும் சில ஆர்டர்கள் கைக்கு வந்ததாம்.&nbsp;

பல்லவன் எக்ஸ்போர்ட்ஸ்‌ குறித்து மேலும் விபரம் அறிய சங்கர் சுப்ரமணியன் மொபைல் எண்: 70108 03627 / 80561 33498.&nbsp;வெப்சைட் [www.pallavanexports.com](http://www.pallavanexports.com)