# திருச்சியில்  “ஆரண்யா ஹெல்த்கேர்” ஒரு மூலிகைக் கடல்!

உலக சுகாதார மையம் (WHO),&nbsp; ஆயுஷ் (AYUSH),&nbsp; மற்றும் ஐஎஸ்ஓ (ISO) போன்ற அங்கீகாரங்களைப் பெற்ற, திருச்சியில் உள்ள&nbsp; ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனர் திருமதி.&nbsp; வீரஜோதி அவர்களை அலைபேசியில் பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.&nbsp; இயக்குனராக இருந்து நிறுவனத்தை திறம்பட இயக்கும் இவரது கணவர் திரு.&nbsp; மாரிமுத்து அவர்களும் பேட்டியில் இணைந்து கொண்டார்.&nbsp;

‘மூலிகைக் கடல்’ என சொல்லும் அளவிற்கு மூலிகை மருந்துகள், அழகு சாதனங்கள், பழரச வகைகள், ரெடிமிக்ஸ் பாக்கெட் உணவு என அனைத்து மூலிகை தயாரிப்புகளும் ஒரே இடத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளன.&nbsp;&nbsp;

2013 இல் தொடங்கப்பட்டது&nbsp; இந்நிறுவனம்.&nbsp; தனது அனைத்து உணவுப் பொருட்களையும், மூலிகைகளையும்&nbsp; ஆர்கானிக் முறையில் தயாரிக்கிறது.&nbsp; இவர்கள் இயற்கை மூலிகைகளின் தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடம் அளிக்காததால் மூலிகைகள் அனைத்தும் மிகவும் கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வாடிக்கையாளர்களை வந்தடைகிறது.&nbsp; உலகில் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவே&nbsp; எங்கள்&nbsp; தயாரிப்புகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி வருகிறோம் என்றார்.&nbsp;&nbsp;

கொரோனாவுக்கு எதிராக மக்கள் தூய்மை நடைமுறையை பின்பற்றி அடிக்கடி கை கழுவும் பழக்கம் வழக்கமாகி வருகிறது.&nbsp; அதற்கு பயன்படுத்த இவர்கள் நிறுவனம்&nbsp; நீம் சோப் தயாரித்துள்ளார்கள்.&nbsp;&nbsp;

ஆயுர்வேதத்தில் வேம்பு ஒரு அதிசய மரமாக கருதப்படுகிறது.&nbsp; வேப்ப மரத்தின் வேர், பழம், இலை, பட்டை என ஒவ்வொரு பகுதியும் மருந்தாக&nbsp; பயன்படுத்தப்படுகிறது.பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது, எனவேதான் வேம்பு ‘சர்வ ரோஹ நிவாரணி’ என்பார்கள்.&nbsp;&nbsp;

எவ்வித இயந்திர உதவியும் இல்லாமல் முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படும் ஹேண்ட் மேட் சோப் இது.&nbsp; வேப்ப இலை பறித்து அதனை கையால் அரைத்து சோப் கையால் தயாரிக்கப்படுகிறது.&nbsp; சோப்பை பார்க்கும் போது அதில் உள்ள வேப்ப இலை&nbsp; துகள்கள் நன்றாக தெரியும்.&nbsp; மற்றவர்களின் நீம் சோப்பு மூன்று மாதங்களில் பூஞ்சனம் பூத்துவிடும்,&nbsp; ஆனால் இவர்களின் தயாரிப்பு மூன்று ஆண்டுகள்வரை வீணாகாது.&nbsp; இதுபோலவே அனைத்து தயாரிப்புகளிலும் இவர்கள் மற்றவர்களை விட தனித்துவம் பெற்று விளங்குகிறார்கள்.&nbsp;

பப்பாளி சோப்பில் பப்பாளிப் பழத்திற்கு உரிய அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கும்.&nbsp; பேபி சோப் தயாரிப்பில் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு தேங்காய் எண்ணெய்,&nbsp; தேங்காய் பால் போன்ற கலவையில் குழந்தைகளுக்கு மிருதுவான பேபி சோப் தயாரிக்கிறார்கள்.&nbsp; இவர்களின் பேபி சோப் பெருமையை கேட்டதும் மீண்டும்&nbsp; குழந்தையாக மாற ஆசை வந்தது.&nbsp;

ஹெர்பல் மிக்ஸ் சோப் சோரியாசிஸ் என்கிற தோல் நோய்க்கு&nbsp; நிரந்தர தீர்வு மருந்தாகும் என்றார் மாரிமுத்து. மனிதன் தலை முதல் கால் வரை ரசாயனம் கலக்காத&nbsp; முழுமையான இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தி வாழக்கூடிய அளவுக்கு அனைத்து மூலிகை தயாரிப்புகளையும்&nbsp; தயாரிக்க வேண்டும் என்பது இந்த தம்பதியினரின் குறிக்கோள்.&nbsp;

வரகு பொங்கல் மிக்ஸ்,&nbsp; வல்லாரை, முடக்கத்தான் தோசை மிக்ஸ் போன்ற பல ரெடிமிக்ஸ் தயாரிக்கிறார்கள்.&nbsp; வாகை மர நாட்டு செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள்.&nbsp; பல மூலிகை பொடிகள். ரெடி டு யூஸ் மிக்ஸ் உணவு வகைகள் பல உள்ளன.&nbsp; இவை அவசரகதியில் அலுவலகங்கள் போவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.&nbsp;

நம்மில் பலர் அறியாத பலவித அரிசிகள், ஹெல்த் மிக்ஸ், மருத்துவ குணம் கொண்ட ஜூஸ்கள்.&nbsp; இட்லிக்கு தொட்டுக்கொள்ள, இத்தனை வகை பொடிகளா என மலைக்கவைக்கும் இட்லி பொடி வகைகள். ஏறத்தாழ 400 க்கும் மேலான&nbsp; பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.

ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனத்தார்&nbsp; படித்த வேலையில்லா இளைஞர்களுக்காக ஒரு திட்டம் செயல்படுத்தி உள்ளனர்.&nbsp; ஒரு கிராமத்தில் &nbsp; ஒரு விநியோகஸ்தர் என&nbsp; நியமித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் இவர்களிடம் பொருட்களை வாங்க வழி வகுத்துள்ளார்கள்.&nbsp; இத்தகைய விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே,&nbsp; அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகம் மூலம்&nbsp; இவர்கள் வியாபாரம் செய்வதில்லை என்பது&nbsp; பாராட்டுக்குரியது.&nbsp;

இந்த தொழிலில் ஒரு பிரச்சனை, எந்த ஒரு பொருளும் ஆறு மாதத்திற்குள் காலாவதியாகி பூச்சி வந்துவிடும்.&nbsp; காரணம் எவ்வித கெமிக்கலும் கலக்காமல், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் ஆர்கானிக் முறையில் தயார் செய்வதால் பூச்சிகள் வரத்தான் செய்யும் என்றார்.&nbsp; எனவே 6 மாதத்தில் விற்றுத் தீர்க்க கூடிய அளவுக்குதான் தயாரிப்பார்களாம்.&nbsp;

வாழ்வாதாரங்களை தேடி சிரமப்படும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருவதோடு, &nbsp; அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி வருகிறார்கள்.&nbsp;

“அடேங்கப்பா!” என ஆச்சரியத்துடன்&nbsp; விடைபெற்றேன்.&nbsp;

தொடர்பு கொள்ள : 82203 07404 / 0431 4972871