# “தமிழ்நிலா ஆட்டுப் பண்ணை”

பேட்டி, கட்டுரையாளர்&nbsp; – அ. ஹூமாயூன், சிதம்பரம்

வித்தியாசமான பெயரில் விசித்திரமான முறையில்&nbsp; ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை&nbsp; குவைத்தில் இருந்தபடியே வழி நடத்துகிறார் திரு. குமரேசன்.&nbsp;

சிவகங்கை மாவட்டம், படமாத்துர்-சித்தாலங்குடி கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்து வருகிறார்கள்.&nbsp; வெள்ளாடு,&nbsp; செம்மறி ஆடு,&nbsp; முயல், வான்கோழி மற்றும்&nbsp; வாத்து வளர்ப்பு என பல உயிரினங்களை இங்கு பண்ணையில் வளர்த்து வருவதோடு,&nbsp; வாழை,&nbsp; தீவன பயிர்கள் என எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தத்தில்&nbsp; “கருவேலங்&nbsp; காட்டுக்குள்ளே ஒரு பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது”.

விஞ்ஞானம் வளர்ந்தது.. புதுநாகரிகம் பிறந்தது.. இப்படி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால் சில வழிமுறைகள் மட்டும் நம் பாரம்பரியத்தில் பின்னி பிணைந்து நம்மை தொடர்ந்து வருகின்றன. அதில் கால்நடை வளர்ப்பும் ஒன்று.&nbsp;

குவைத்தில் பணிபுரியும் குமரேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள ஆட்டுப் பண்ணையை குவைத்திலிருந்து இயக்குவது எப்படி சாத்தியம்” என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்&#8230;. பெருமை தனது மனைவி சரண்யாவையும்&nbsp; சாரும் என்றார்.&nbsp; குவைத்திலிருந்து கொண்டே கேமரா, ஆண்ட்ராய்டு போன் மூலமாக பண்ணையை கண்காணிக்கிறார். சரண்யா எம்.சி.ஏ., படித்து ஐடி கம்பெனியில் வேலை பார்த்த இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறார். வேலையை விட்டு விட்டு பின்னர் கணவருக்கு&nbsp; துணையாக பண்ணையை கவனிக்க ஆரம்பித்துள்ளார். குமரேசன் எம்.எஸ்சி.,&nbsp; படித்தவர். ஒரு தனியார் உர உற்பத்தி ஆலையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்த போதுதான் ரசாயன உரத்தின்&nbsp; பாதிப்பு முழுமையாக அவருக்கு தெரியவந்தது,&nbsp; இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் வந்தவராக வேலையை உதறிவிட்டு இந்த பசுமை பண்ணையை தொடங்கி இருக்கிறார்.&nbsp;

ஆடு வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள்.&nbsp; தலச்சேரி, போயர், ஜமுனாபாரி, நாட்டு வெள்ளாடு, செம்மறி, வெள்ளாடு போன்ற இனங்களை வளர்க்கிறார்கள். ஆடுகள் இறைச்சிக்காக விற்பதோடு, பண்ணை தொடங்குவதற்கு ஏற்றவாறும் எல்லா வயதிலும் ஆடுகள் விற்பனை செய்கின்றனர்.&nbsp;

ஆடுகள் தளதளவென வளர பசுந்தீவனம், அடர்தீவனம்,&nbsp; உலர் தீவனம், தாது உப்பு, தண்ணீர் இவை அனைத்தும்&nbsp; முக்கியம்.&nbsp; ஆட்டுக்கு தேவையான பச்சை பயிர்களை இவர்களே பண்ணையில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். குறிப்பாக&nbsp; நாட்டு அகத்தி,&nbsp; முருங்கை,&nbsp; சுபாபுல்,&nbsp; காய்ந்த கடலைக்கொடி,&nbsp; மல்பெரி, வேலி மசால்,&nbsp;&nbsp; அசோலா மற்றும் பச்சைபயிறு போன்றவை.&nbsp;

ஆடுகளுக்கு காய்ந்த கடலைக் கொடி மிக முக்கியமான தீவனம். அடிக்கடி வாயில் மென்றுக் கொண்டிருக்கும் ஸ்நாக்ஸ் இதுதான்.&nbsp;&nbsp; மல்பெரி இலையில் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அதை தாய் ஆடுகளுக்கு, சினை ஆடுகளுக்கு&nbsp; கொடுக்கக்கூடாது என்றார்.&nbsp;

பரண் அமைத்து ஆடு வளர்ப்பதில்&nbsp; இவருக்கு விருப்பம் இல்லை.&nbsp; காரணம் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் அப்படி எல்லாம் பரண் அமைக்காமல் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தார்கள். ஆடுகளும் அதை சாப்பிட்டவர்களும் திடகார்த்திரமாக இருந்தார்கள். ஒருவேளை&nbsp; கொட்டில் முறையில் ஆடுகள் வளர்க்கப்பட்டாலும் தினமும் வெளியே சென்று மேய்ந்து வரவேண்டும்.&nbsp; காலார நடப்பதால்தான் அவற்றை கால்நடை என அழைக்கிறோம். வெளியே மேய்ச்சலுக்கு சென்று&nbsp; மண்ணிலும் கல்லிலும் நடப்பதால்&nbsp; ஆடுகளுக்கு சில என்சைம்கள் சுரக்கின்றன. அதுமட்டுமல்ல ஆடுகளுக்கு தேவையான மூலிகை இலைகளும் அவைகளுக்கு கிடைத்து விடுகின்றன.&nbsp; உதாரணம் ஆடுகளுக்கு&nbsp; குடல் புழு இருந்தால் அவற்றிற்கு ஒருவித குறுகுறுப்பு தொடங்கி&nbsp; வேப்பந்தழை போய் சாப்பிடும்.&nbsp; அதனால் வெளியே மேயும் ஆடுகளுக்கு பெரிய நோய்கள் வருவதில்லை.&nbsp;

ஆடு வளர்ப்பு குறித்து பேசுகையில், வளர்க்க வாங்கும்போது ஆட்டுக்குட்டிகளாக வாங்காமல் தாய் ஆடும் அதை சார்ந்த குட்டிகளையும் வாங்கினால்தான் விரைவில் வருவாய்க்கு வழி பிறக்கும் என்றார்.&nbsp;

&nbsp;“நமக்கு விருந்து படைக்கும் ஆடுகளை எங்களிடம் வளரும் வரை தினமும் தடல்புடல் விருந்து கொடுத்துதான்&nbsp; வளர்க்கிறோம்” என்றார்.&nbsp;&nbsp;

“அடேங்கப்பா இந்த அளவுக்கு அக்கறையும், பாதுகாப்பும் கொடுத்து,&nbsp; ஆக மொத்தத்தில் ஆடுகளை ஆடுகளாக வளர்க்காமல் ஆட்களாக வளர்க்கிறீர்கள்” என நான் பாராட்டி விடை பெற்றேன்.&nbsp;

தொடர்புக்கு : 98651 95286

வாட்ஸ்அப்&nbsp;&nbsp; : 98944 33930