# ஜி.எஸ்.டி (G.S.T.) கேள்வி பதில் அரு.சேது 

**கண்ணன், சேலம்:&nbsp; ஒரு வணிக நிறுவனத்தின் முகப்பில் அல்லது வாசலில் கண்டிப்பாக பெயர் பலகை (Display of Name Board) வைக்க வேண்டுமா?**

ஜி.எஸ்.டி சட்டப்படி, வணிக நிறுவனத்தின் முன்பு கட்டாயம் பெயர்பலகை வைக்க வேண்டும். கலவை வணிகராக இருந்தால் (Composition Dealer) கண்டிப்பாக ஜி.எஸ்.டி நம்பரையும் அதில் குறிப்பிட வேண்டும்.

**முருகன், திருச்சி : எல்லா செலவுகளிலும் உள்ள ஜி.எஸ்.டி வரிகளை உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக் கொள்ள முடியுமா (Input tax credit)?**

கண்டிப்பாக வரி வரவினமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வியாபார நோக்கத்திற்காக கொள்முதல் செய்யப்படும் மூல பொருட்கள், சர்வீஸ்கள் மற்றும் மூலதன பொருட்கள் (Raw materials, Services, &amp; Capital goods) மட்டும் தான் வரி வரவினமாக&nbsp; எடுத்துக் கொள்ளலாம்.

**ராமு, சென்னை : &nbsp; ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் எத்தனை வருடங்கள் கணக்கு புத்தகங்களை பராமரிக்கப்பட வேண்டும்?**

ஜி.எஸ்.டி.யில் வருடாந்திர நமுனா படிவம் (Filing of Annual Return) தாக்கல் செய்ததிலிருந்து 72 மாதங்கள் வரை கணக்குகளை பராமரிக்க வேண்டும்

**குரு, காரைக்குடி&nbsp; : ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் அனைத்து வகை கொள்முதல்களையும், விற்பனைகளையும் (Purchases &amp; sales) எவ்வாறு அழைக்கப்படுகிறது?**

ஜி.எஸ்.டி சட்டத்தில் கொள்முதல்களை Inward Supply என்றும் விற்பைனகளை&nbsp; Outward Supply என்றும் அழைக்கப்படுகிறது.

**சிவப்பிரகாசம் கோவை : ஒரு வணிகர் தனது மாதாந்திரம் தாக்கல் செய்யக் கூடிய ரிட்டர்ன்களை தாக்கல் செய்யவில்லை,&nbsp; இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறவும்?**

பதிவு சான்றிதழ் பெற்ற அனைவரும் வரி இருந்தால், உரிய தேதிக்குள் வரியை செலுத்தி மாதாந்திர படிவத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் தாமத்துக்கான வட்டியும் அபராதத் தொகையும் செலுத்த வேண்டும்.&nbsp; இப்பொழுது அனைத்தும் இணைய தளம் மூலம் தாக்கல் செய்வதால் வெளிப்படையாக உள்ளது.