# ஜி.எஸ்.டி (G.S.T.) கேள்வி பதில் அரு. சேது 

- தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி பதிவு செய்திட என்ன &nbsp; தகுதிகள் தேவை?

தீபா – சேலம்&nbsp;

உங்கள் நிறுவனம் தனியாக ஒரு நிதியாண்டில் 40 லட்சம்&nbsp; ரூபாய்க்கு&nbsp; அதிகமாக விற்பனை செய்தால் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும்.&nbsp;

தனியாக சர்வீஸ் மட்டும் செய்வதாக இருந்தால் ஒரு நிதியாண்டில்&nbsp;இருபது லட்சத்திற்கு அதிகமாக சேவை அளித்திருந்தால்&nbsp; கண்டிப்பாக பதிவு செய்ய &nbsp;வேண்டும்.

சரக்கு விற்பனையும் மற்றும் சேவையும் கலந்து தொழில் புரிபவர்களாக &nbsp; &nbsp; இருந்தால்&nbsp; நிதியாண்டில் ரூபாய் இருபது லட்சத்திற்கு அதிகமாக செய்தால் பதிவு செய்வது&nbsp; அவசியமாகுகிறது.

- தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திற்காவது விற்பனை செய்வதாக இருந்தால் குறைந்தபட்ச விற்பனை தொகை பொருந்துமா?

- கார்திக், கன்னியாகுமரி&nbsp;

இல்லை.&nbsp; வணிகர் தொழில்புரியும் மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு விற்பனை செய்வதாக இருந்தால் கண்டிப்பாக பதிவு செய்ய&nbsp; வேண்டும்.

- வணிகர் ஒருவர் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கான மூலபொருட்கள், சேவைகள் மற்றும் மூலதன பொருட்களின் மீதான உள்ளீட்டு வரியினை எடுக்க இயலுமா?

- பூர்ணிமா, புதுச்சேரி

ஏற்றுமதி செய்பவர்களுக்கு மூலதன பொருட்களுக்கான உள்ளீட்டு வரி மட்டுமே எடுக்க இயலும்.&nbsp; அதே வேளை சர்வீஸ்‌ மற்றும் மூலதன பொருட்கள் மீதான உள்ளீட்டு வரி திரும்ப பெற இயலாது.

- வணிகர் ஒருவர் தமிழ்நாட்டிற்குள்ளே விற்பனை செய்வதற்கும், &nbsp; வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்வதற்கும் எத்தகைய&nbsp; வரியெல்லாம் விதிக்கப்பட வேண்டும்?&nbsp;

- தேவராஜ், கோவை&nbsp;&nbsp;

தமிழ்நாட்டிற்குள்ளே விற்பனை செய்தால் மாநில வரியும் மற்றும் மத்திய வரியும் விதிக்கப்படும்.&nbsp; அதாவது சி.ஜி.எஸ்.டி, &nbsp; எஸ்ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட வேண்டும்.&nbsp; அதே வேளை, வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தால் ஐ.ஜி.எஸ்.டி விதிக்கப்பட வேண்டும்.

- ஒரு நிதியாண்டில் உள்மாநிலத்திற்குள் அல்லது வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்தால்&nbsp; ஈ வே பில் தயாரிப்பதன் மதிப்பீடு அளவு என்ன?&nbsp;

- கஸ்தூரி, சென்னை&nbsp;

தமிழகத்திற்குள் என்றால் கண்டிப்பாக ரூபாய் 1 லட்சத்திற்கு அதிகமான சரக்கு மதிப்பு இருக்கும் இன்வாய்ஸ் தொகைக்கும்,&nbsp; வெளி மாநிலத்திற்கு செல்வதாக இருந்தால் ரூபாய் 50,000 த்திற்கு அதிகமான சரக்கு மதிப்பு இருக்கும் இன்வாய்ஸ்களுக்கு மட்டும் ஈ வே பில் தயாரிக்க வேண்டும்.&nbsp;&nbsp;

**************

உங்களின் GST தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:&nbsp; &nbsp; &nbsp; &nbsp; [sethu_dhavarajan@yahoo.com](mailto:sethu_dhavarajan@yahoo.com)

மொபைல் : 94437 09102