# ஜி.எஸ்.டி (G.S.T.) கேள்வி பதில் அரு. சேது 

- **ஜி.எஸ்.டி&nbsp; ல்&nbsp; யாரெல்லாம் பதிவு பெற தேவையில்லை?&nbsp;**

நீலகண்டன்-திருச்சிராப்பள்ளி

எந்த ஒரு விலக்களிக்கப்பட்ட அல்லது வரிக்குட்படாத சரக்கு விற்பனை அல்லது சேவை புரிபவராக இருந்தால் அவர் கண்டிப்பாக ஜி.எஸ்.டி பதிவு பெற அவசியமில்லை.&nbsp; இதில் விற்பைன தொகையை பற்றி கவலைப்பட தேவையில்லை.

- **ஜி.எஸ்.டி பதிவு எண் பெற்ற பிறகு வருடந்தோறும் பதிவினை புதுப்பிக்க வேண்டுமா?&nbsp;**

&nbsp; &nbsp; ராஜ்குமார்-மதுரை&nbsp;

இல்லை.&nbsp; ஒரு முறை பதிவு பெற்றபின் அதனை சரண்டர் அல்லது கேன்சல் செய்யும் வரை பதிவு புதுப்பிக்க தேவையில்லை.

- **புதிய ஜி.எஸ்.டி பதிவு சான்றிதழ் பெறுவதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா?&nbsp; அவ்வாறாயின் எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்?**

முருகன்- சிவகங்கை&nbsp;

ஜி.எஸ்.டி புதிய பதிவு சான்றிதழ் பெற்றிட எவ்விதமான கட்டண தொகையையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

- **பதிவு சான்றிதழினை கட்டாயம் அனைவர் பார்வையிலும் படும்படி காட்சிப்படுத்தப்பட வேண்டுமா?**

முத்துராமன்- திருப்பூர்

நிச்சயமாக.&nbsp; பதிவு சான்றிதழ் கண்டிப்பாக அனைவர் பார்வையிலும் படும்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும்.&nbsp; இது கண்டிப்பாக கிளைகள் குடோன்கள் மற்றும் பதிவில் சொல்லப்பட்ட அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும்.

- **பதிவு பெற்றிட அதிகபட்சமாக எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது?**

ரவிச்சந்திரன்- தஞ்சாவூர்

பதிவு சான்றிதழ் பெற்றிட சேவையாக இருந்தால் ரூபாய் இருபது லட்சத்திற்கு அதிகமாவும் அதே நேரத்தில் சரக்காக இருந்தால் நாற்பது லட்சத்திற்கு அதிகமாவும் விற்பனை தொகை இருப்பின் கண்டிப்பாக பதிவு பெற வேண்டும்.&nbsp; மேலும் இந்த விற்பனை தொகை குறைவாக ஏன் ஒரு ரூபாயாக இருந்தாலும் பதிவு பெற விரும்பினால் பதிவு பெற்றிடலாம்.&nbsp; அதோடு மட்டுமல்ல பெரிய நிறுவனங்கள் பதிவு பெற்றிருந்தால் தான் தங்களின் வெண்டராக பதிவு செய்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

உங்களின் GST தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:&nbsp; &nbsp; &nbsp; &nbsp; [sethu_dhavarajan@yahoo.com](mailto:sethu_dhavarajan@yahoo.com)

மொபைல் : 94437 09102