# சுவாசிக்க கூடிய முகக் கவசம்

இறைவன் தந்த இயற்கையானகாற்றை நாம் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.&nbsp; முகக் கவசம் அணிந்து&nbsp; வேறு&nbsp; நபருடன் பேசும்போது நாம் சிரிக்கிறோமா &nbsp;அல்லது கோபப்படுகிறோமா என்பதை வெளிப்படுத்த முடிவதில்லை, எளிதாக மூச்சு விட முடிவதில்லை.&nbsp; தொடர்ந்து முகக்கவசம் அணிய முடியாமல் தவிக்கிறோம். &nbsp;ஒட்டுமொத்த மனித குலமும் கொரோனா வைரசுக்கு பயந்து நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது. &nbsp;

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஒரு முக கவசத்தை அதுவும் ட்ரான்ஸ்பரன்ட் ஆகவும், உங்கள் முகத்தின் உணர்ச்சிகளை காட்டும் விதமாகவும் அதேசமயம் உங்களால் வெளிக்காற்றை சுவாசிக்க வசதியாகவும் ஒரு முககவசத்தை கண்டுபிடித்திருக்கிறது.&nbsp;

அதை சந்தைக்கு&nbsp; கொண்டுவரும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளனர். அடுத்த வருட ஆரம்பத்தில் கடைகளுக்கு வர இருக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் ஐடியா எப்படி வந்தது என்று பார்த்தால் 2015 ஆம் வருடம் எபோலா என்ற வைரஸ் பல நாடுகளை தாக்கியது.&nbsp; அப்போது முகக்கவசத்தை&nbsp; தொடர்ந்து அணிய மிகவும் சிரமப்பட்டனர். &nbsp;முகக்கவசம் அணிந்திருப்போர்,&nbsp; குறிப்பாக டாக்டர்கள் தங்கள் உணர்வுகளை&nbsp; முகபாவம் மூலம் எதிரில் இருப்பவர்களுக்கு&nbsp; காட்ட முடியாமல் தவித்தனர். &nbsp;நோயாளியாக இருக்கும் ஒரு குழந்தையிடமோ வயதானவரிடமோ மருத்துவர் பேசும்போது, அவர்&nbsp; ஒரு புன்னகையை&nbsp; உதிர்த்தாலே போதும்.&nbsp; அதுவே&nbsp; அந்த நோயாளியை பாதி குணமாக்கிவிடும் என்பது உண்மை.&nbsp; முகக்கவசம் அணிந்திருக்கும்போது புன்னகையைக் காட்ட இயலாமல் போய்விடுகிறது. முகக்கவசம் அணிந்திருக்கும்போதும், நம் முகம் முழுவதும் எதிரில் இருப்பவருக்குத் தெளிவாகதெரியும் வகையிலும், டிரான்ஸ்பரன்டாகவும்,வெளிக்காற்றை எளிதில் சுவாசிக்க வசதியாகவும், &nbsp; அதேசமயம் நோய்க்கிருமிகளை உள்ளே விடாத&nbsp; வகையிலும் ஒரு முகக்கவசம் இருந்தால் எப்படி இருக்கும்? இதையெல்லாம் மனதில் வைத்துதான் சுவிஸ் நாட்டில்&nbsp; **École polytechnique fédérale de Lausanne**&nbsp;(**EPFL**)&nbsp;– ([www.epfl.ch](https://www.epfl.ch/)) என்ற ஆராய்ச்சி நிறுவனம், அதே&nbsp; நாட்டில் இருக்கும் **Swiss Federal Laboratories for Materials Science and Technology**&nbsp;– **EMPA (**[**www.empa.ch**](http://www.empa.ch)**) **&nbsp;மெட்டீரியல் சயின்ஸ் ரிசர்ச் சென்டருடன் இணைந்து ஆராய்ச்சி செய்து, இது போன்ற ஒரு துணியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதை HMCARE என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்கள்.&nbsp;

பயோமாஸ் மூலம் பெறப்பட்ட&nbsp; டிரான்ஸ்பரன்டான இழைகளைப் பயன்படுத்தி &nbsp;மூன்று அடுக்கு கொண்ட,&nbsp; நெகிழ்வான, எளிதில் சுவாசிக்க வசதியான&nbsp; ஒரு துணியை உருவாக்கினர் , அது&nbsp; கிட்டத்தட்ட&nbsp; டிரான்ஸ்பரன்டான &#8211; லேசாக உறைந்த கண்ணாடி போன்றது. இந்தத் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசத்தை ஹலோ மாஸ்க் (Hello Mask) என்று அழைக்கிறார்கள்.&nbsp;

கடந்த பல வருடங்களாக இணைந்து நடத்திய ஆராய்ச்சி முடிவில் முன்பு சொன்னது போன்ற முகக்கவசத்தை தயாரிக்க முடியும் என்ற&nbsp; நிலைக்கு வந்துள்ளனர்.&nbsp; இது இந்த வருட கடைசியில் அல்லது 2021 ஆரம்பத்தில் கடைகளில் விற்பனைக்கு வரும்.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களை பாருங்கள். பல நல்ல விவரங்கள் கிடைக்கும்.