# சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ்- க்கு சரியான போட்டி

சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ்&nbsp; இருக்கும் உலகத்தில் வேறு ஒரு சிறிய கம்பெனி போட்டி போட முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான்.&nbsp; திருவிளையாடல் &nbsp; படத்தில் வரும் வசனமான &#8220;சபாஷ் சரியான போட்டி&#8221; என்பது போல கோழிக்கோட்டில் ஒரு சரியான போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு சிறிய டெலிவரி கம்பெனிக்கும், பெரிய ஜாம்பவான்களுக்கும் இடையே.

ஆமாம் இது உண்மை தான்.&nbsp; 2017 ஆம் வருடம் நான்கு இளைஞர்களால்&nbsp; ஆரம்பிக்கப்பட்ட &#8220;போட்டோபூ” (POTAFU)&nbsp; என்ற டெலிவரி கம்பெனி&nbsp; அங்குள்ள பல பெரிய, சிறிய ஓட்டல்களில்&nbsp; ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு டெலிவரி வசதிகளை செய்து தருகிறது.

இந்த டெலிவரி கம்பெனி தற்போது கோழிக்கோட்டில் இருக்கும் 150 ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதுபோல கோழிக்கோடு நகரத்தில் 50,000 உறுப்பினர்களை கொண்டிருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான&nbsp; விஷயம். இதைத் தான் நாம் முன்பு &#8220;சபாஷ் சரியான போட்டி&#8221; என்றோம். இந்த கம்பெனி இது போன்ற பல நகரங்களுக்கும் தங்களின் சேவையை&nbsp; விரிவுபடுத்த&nbsp; நினைக்கிறது. ஒரு லட்ச ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனி ஜாம்பவான்களுடன் போட்டி போட்டு ஆர்டர்கள் எடுப்பது&nbsp; ஒரு சிறப்பான விஷயம் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது மனதில் துணிவு இருந்தால்&nbsp; எந்த ஒரு ஜாம்பவானிடமும் போட்டி போடலாம்.