# <strong>சரோஜா சாமான் நிகாலோ..!</strong>

**சாமான்களை பத்திரமாக கொண்டு செல்ல ஸ்டார்ட் அப்-கள்**

நாம் வீடு மாறும் போது&nbsp; ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு சாமான்களை&nbsp; கொண்டு செல்லும்போது முக்கியமாக கவலைப்படுவது,&nbsp; லாரிக்காரர் சாமான்களை ஒழுங்காக கொண்டு செல்வாரா? சாமான்கள் பத்திரமாக பேக் செய்யப்பட்டு, உடையாமல் புதிய இடத்திற்கு சென்று அடையுமா என்பது தான்.&nbsp; இது போன்ற கவலைகளால் கணவன்-மனைவி இருவருக்கும் சண்டைகள் வருவது சகஜம்தான். நாம் பயந்தது போலவே&nbsp; சாமான்கள் சரிவர கொண்டு செல்லபடவில்லை என்றால்&nbsp; அவை &nbsp; உடைந்து நமக்கு பெரிய நஷ்டத்தை தருவது தொடர்ந்து நடக்கும் ஒரு செயல் தான்.&nbsp;

இந்தத் துறை இன்று வரை அன்-ஆர்கனைஸ்ட் துறையாக இருந்து வருகிறது. இதனால் சிறிய லாரி ஆபரேட்டர்கள் இந்த துறையை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்தத் துறையில் ஆர்கனைஸ்ட் பிளேயர், அதாவது இந்த வேலைகளை தொழில் ரீதியாக&nbsp; செய்யும் கம்பெனிகள் மிகவும் குறைவு. அப்படி செய்யப்படும் போது அதற்கான கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கும், ஆதலால் மக்களும் அதை விரும்புவதில்லை.&nbsp;

இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் துறையில் 1987ஆம் ஆண்டு கையில்&nbsp; எவ்வித பணமும்&nbsp; இல்லாமல், மனதில் ஒரு உறுதியுடன் ஒரு மனிதர் நுழைகிறார். அதாவது சாமான்களை கையாளும் போது அதை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும், கம்பெனி மீது நம்பிக்கை&nbsp; வரும் அளவுக்கு&nbsp; நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள்.&nbsp;

ஆர்மியில் வேலை பார்க்கும் போது கிடைத்த 40 ஆயிரம் ரூபாயும் ஆர்மி வெல்பேர் ஃபண்ட்க்கு டொனேஷன் செய்து விட்டு, கையில்&nbsp; எவ்வித&nbsp; பணமும் இல்லாமல் தனது நண்பரின் தாயாரிடம் 4000 ரூபாய் கடன் வாங்கி ஆரம்பிக்கப்பட்டது தான் அகர்வால் ஹவுஸ்ஹோல்டு கொரியர் என்ற கம்பெனி. அதன் பிறகு இவர்களது சிறப்பான சேவையால் கம்பெனி பல உச்சங்களை எட்டியது.&nbsp;

அன்று “சக்கரங்கள்” மூலமாக சுழலத்&nbsp; தொடங்கிய அவரது கம்பெனியின் வாழ்க்கைச் சக்கரம் இன்று ஒரு மிகப் பிரமாண்டபமான கம்பெனியாக உருவாகியிருக்கிறது.&nbsp; அதுதான் இன்று அகர்வால் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.&nbsp;

கடந்த ஆண்டு இந்த கம்பெனியின் டேர்ன் ஓவர் 650 கோடி ரூபாய். 72 நாடுகளில் இயங்குகிறது. இதுவரை கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்களுக்கு சாமான்களை இடம் மாற்றுவதற்கு உதவியிருக்கிறது.&nbsp;

இன்றைய தினத்தில் சாமான்களை பத்திரமாக இந்தியாவிற்குள்ளும் அல்லது வெளிநாட்டுக்கும்அனுப்புவதற்கு&nbsp; கூப்பிடு “அகர்வால் பேக்கர்ஸை” என்ற அளவிற்கு மிகவும் பிரபலமான கம்பெனி. அவர்களுக்கு வாடிக்கையாளர்கள்தான் கடவுள் என்ற குறிக்கோளை வைத்திருக்கிறார்கள்.&nbsp;

இன்று இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் கூட தங்களுடைய பொருட்களை ஒரு இடத்திலிருந்து&nbsp; இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த கம்பெனியை தான் நம்பியிருக்கிறது.&nbsp;

இதிலிருந்து என்ன தெரிகிறது ஒரு கம்பெனி ஆரம்பித்து சிறப்பாக நடத்துவதற்கு “மூளைதனம்” தான் அதிகம் தேவை, “மூலதனம்” குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த “மூளைதனத்தை”&nbsp; சிறப்பாக பயன்படுத்தி இந்த கம்பெனியை இவ்வளவு பெரிய கம்பெனியாக கொண்டு வந்து இருக்கிறார் ரமேஷ் அகர்வால்.&nbsp;

இது போன்று இன்றைய தினத்தில் பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இத்துறையில் வந்திருக்கின்றன. அவைகளில் குறிப்பிட்டு சொல்லும் விதமான கம்பெனிகள்.

LetsTransport

The Porter

BlackBuck

Blowhorn