# கொசுவை விரட்ட … ஒரு ஸ்டார்ட் அப்

ஐஐடி சென்னை ரிசர்ச் பார்க் (Research Park) வளாகத்திலிருந்து&nbsp; பல நல்ல ஸ்டார்ட்&nbsp; அப் கம்பெனிகள்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; உருவாகி வருகின்றன. அதில் குறிப்பிடத் தக்க&nbsp; கம்பெனி எம்.ஜி.ஹெச்.லாப்ஸ் (MGH Labs). அவர்கள் செய்த சாதனை என்னவென்றால் உடலுக்குத் தீங்கு தராத, கெமிக்கல் ஏதும் கலக்காத&nbsp; வகையில்&nbsp; கொசுக்களைக் கொல்லும் ஒரு&nbsp; சிறிய கருவியையும், அதில் உபயோகப்படுத்துவதற்கான கொசுவிரட்டி திரவத்தையும் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்&nbsp; சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள்.&nbsp; இது விலை சிறிது அதிகமாக இருந்தாலும் இந்த சிறிய கருவியில் பொருத்தப்படும் திரவம்&nbsp; கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இரவு முழுவதும் நம்மை வைத்திருக்கிறது. தற்போது சந்தையில் பலவித கொசுக் கொல்லிகள் இருந்தாலும் இது எவ்வித கெமிக்கலும் சேர்க்காமல் செய்வது&nbsp; பாராட்டத்தக்கது.&nbsp;&nbsp;

கொசு இல்லாத ஒரு ஊரை கண்டுபிடித்து அந்த ஊரில் தான்&nbsp; &nbsp; &nbsp; நீங்கள் தங்க வேண்டும் என்றால் இந்தியாவில் அப்படி ஒரு ஊரைக் காண்பது மிகவும் அரிது.&nbsp; அந்த அளவு இந்தியாவில் கொசு உற்பத்தி பெருகிவிட்டது.&nbsp; மாலை&nbsp; 6 மணியானால் எல்லா கதவுகளையும் மூடி விட்டு பின்னர் சில மணி நேரம் கழித்து கதவை திறப்பது பலரின்&nbsp; வாடிக்கை. கொசு வீட்டிற்குள் வரும் நேரம் மாலை 6 மணி&nbsp; அளவில்தான் என அவர்கள் எண்ணுவது வேடிக்கை.

கொசுவை ஒழிக்க என்ற போர்வையில் பல விதமான &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கம்பெனிகள் கொசு மருந்துகளையும், கொசுவத்திகளையும் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; தயாரித்து சந்தையில் விற்பனை செய்து&nbsp; பெரிய பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.&nbsp; ஆனால் கொசுக்கள் என்னவோ கொழுத்துக் கொண்டுதான் போகிறது.&nbsp;

அந்தக் காலத்தில் கொசுவத்திகள் எங்கு இருந்தன? நம் தாத்தாக்கள் தினசரி இரவில் கொசுவலை கட்டுவதும், காலை அதை&nbsp; அவிழ்ப்பதுமாக நேரத்தைச் செலவழித்து, கொசு வத்திக்குப்&nbsp; பணம் செலவழிக்காமல்&nbsp; சுகமாகத் தூங்கினார்கள் . ஆனால் நாம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கொசுவலை கட்டுவதற்கும், அவிழ்ப்பதற்கும் எங்கு நேரம் என்று கொசுவத்திகளையும், மருந்துகளையும் வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். அந்த மருந்துகளில் பலவிதமான ரசாயனப்பொருட்கள் கலந்திருப்பதால் அது பலவிதத்தில் தீங்குகள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; விளைவித்தாலும்,&nbsp; அதுதான் இரவில் நம்முடைய சுகமான &nbsp; &nbsp; &nbsp; &nbsp; தூக்கத்திற்கு தற்போதைய வழிகாட்டி என நம்முடைய வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்துவிட்டது.

தற்போது சந்தையில் இருக்கும் கொசுவர்த்தி மருந்துகளை உபயோகிப்பவர்களுக்குப் பலவிதமான அலர்ஜிகள்வருகிறது. அதுபோன்ற அலர்ஜிகள் நமக்கு வராமல், இரவு முழுவதும் &nbsp; &nbsp; கொசுக்களை பிடிப்பதிலையிலேயே&nbsp; கவனமாக இருக்கிறது &nbsp; &nbsp; இந்த சின்ன கருவி.

சென்னை ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்குக்கு ஒரு சல்யூட்….இதைக்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு சல்யூட்.