# கோவையில் கேமியோ (CAMEIO) பம்ப்ஸ்

தமிழகத்தின் மான்செஸ்டர் நகரம் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூரில்,&nbsp; சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கேமியோ பம்புகள் மற்றும் மோட்டார்ஸ் (CAMEIO Pumps and Motors) ஒரு பிரபலமான உலகத் தரம் வாய்ந்த பிராண்ட்.&nbsp; இது &#8220;ஆர்கோ ஆட்டோமேஷன்&#8221; என்ற பதிவு செய்யப்பட்ட பெயரில் தயாரிக்கப்படுகிறது.

27 வயதுள்ள இளம் முதன்மை செயல் அதிகாரி (CEO)&nbsp; திரு. விக்னேஷ் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்பா, அம்மா, மகன் என மும்மூர்த்திகளாக&nbsp; இருந்து நிர்வகிக்கும் இந்நிறுவனம் 2015 ல் தொடங்கியது.&nbsp;

படித்து முடித்த பின்னர் எதை தொடங்குவது என்ன செய்வது என குழம்பும் இளைஞர்களுக்கு மத்தியில், விக்னேஷ் படிக்கத் தொடங்கும் முன்பே, தான் என்ன தொழிலை தொடங்க வேண்டும் என அப்பா&nbsp; திரு. வேலுமணி (நிர்வாக இயக்குனர்) அவர்களிடம்&nbsp; கலந்து ஆலோசனை செய்து, அதற்கு ஏற்றபடி,&nbsp; பி. டெக்., எலக்டிரிக்கல் &amp; எலக்டிரானிக்ஸ் படித்து பட்டம் பெற்று, தொடங்கியதுதான் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்.&nbsp;

0.5 HP யில் தொடங்கி 2 HP வரை திறன் கொண்ட பம்புகள், மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக செல்ப் பிரைமிங், ஷாலோ வெல், ஜெட் ஓபன் வெல், சென்ட்ரிபுகல் மற்றும் மேஜிக் சக்‌ஷன் போன்றவை.&nbsp;

அதிநவீன உற்பத்தி வசதியுடன், அனுபவமுள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படும் இவர்களின்&nbsp; பம்புகள், மோட்டார்களுக்கு மகாராஷ்ட்ராவில் அதிக வரவேற்பு இருப்பதால் புனேயிலும் ஒரு&nbsp; கிளை தொடங்கி&nbsp; இருக்கிறார்கள்.&nbsp;&nbsp;

இவர்களின்&nbsp; பம்புகள் மற்றும் மோட்டார்கள் அனைத்தும்,&nbsp; விற்பனைக்கு வெளியே அனுப்பும் முன், ஹைட்ரோ-நியூமேடிக் அசெம்பிளி லைன் முறையிலும் கணினிமயமாக்கப்பட்ட சோதனை முறையிலும் தரக்கட்டுப்படு பிரிவினர் சோதனை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, எல்லா உபகரணங்களும் துல்லியமாகவும் நல்ல செயல்திறனுக்காகவும்&nbsp; CAD மூலம் வடிவமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;

“எங்களின் நிலையான விடாமுயற்சியும், உறுதியும், எங்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவும் சேர்ந்து இன்று எங்கள் நிறுவனம் உலகளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது. எங்கள் உற்பத்திகளை விரைவில் வளைகுடா நாடுகளுக்கும் நேபாளத்துக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்’’ என மகிழ்வுடன் தெரிவித்தார் திரு.&nbsp; விக்னேஷ்.&nbsp; அவருக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.&nbsp;&nbsp;

தொடர்புக்கு :&nbsp; 99448 45467 / [www.aarcogroup.com](http://www.aarcogroup.com)