# கழுதைப் பால் பொருட்கள் அசத்தும் ஸ்டார்ட் அப்-கள்

**&nbsp;**கட்டுரையாளர் : சேதுராமன் சாத்தப்பன்&nbsp;

மருத்துவத்தின் தந்தை, ஹிப்போகிரட்டீஸ், கழுதைப்&nbsp;பாலின் நன்மைகளைப் பற்றி முதலில் எழுதியவர். புராதன எகிப்தின் ராணியான கிளியோபாட்ரா தனது தோலின் அழகையும், இளமையையும் பாதுகாக்க 700 கழுதைகளின்&nbsp;பாலில்&nbsp;குளித்ததாக வரலாறு உண்டு. நெப்போலியனின் சகோதரி, பவுலின் போனபார்ட்டும்&nbsp;கழுதைப்&nbsp;பாலை தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.&nbsp;கழுதைப்&nbsp;பால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு ஆஸ்துமா, எக்சிமா, சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

கழுதைப்பால்&nbsp;நோய்&nbsp;எதிர்ப்பு&nbsp;ஆற்றல்&nbsp;கொண்டது,&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; மருத்துவ&nbsp;குணம்&nbsp;நிறைந்தது&nbsp;என்ற&nbsp;நம்பிக்கை&nbsp;&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; நிலவுகிறது.அதாவது&nbsp;குழந்தைகளை&nbsp;அதிகம்&nbsp;பாதிக்கும்&nbsp; வயிறு&nbsp;மந்தம்,&nbsp;சூடு,&nbsp;காய்ச்சல்,&nbsp;சளி,இருமல்,&nbsp;ஆஸ்துமா&nbsp;போன்ற&nbsp;நோய்கள்&nbsp;கழுதைப்&nbsp;பாலால்&nbsp;குணமாகும்&nbsp;என&nbsp;&nbsp; &nbsp; நம்பப்படுகிறது.&nbsp;இதனால்&nbsp;சிலர்&nbsp;கழுதைப்பாலை&nbsp;வாங்கி&nbsp;குழந்தைகளுக்கு&nbsp;கொடுக்கின்றனர். ஒரு சங்கு&nbsp;கழுதைப்பால்&nbsp;ரூ.50&nbsp;வரை&nbsp;விற்கப்படுகிறது.&nbsp;ஒரு&nbsp;&nbsp; &nbsp; கழுதையிடமிருந்து&nbsp;ஒரு&nbsp;வேளைக்கு&nbsp;250&nbsp;மில்லி&nbsp;பால்&nbsp;&nbsp; &nbsp; &nbsp; கறக்க&nbsp;இயலும்.

இதில் லாக்டோஸ், வைட்டமின் ஏ, பி -1, பி -2, பி-6, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன.&nbsp;கழுதைப்&nbsp;பாலில்&nbsp;இருந்து தயாரிக்கப்படும் சோப், கிரீம், மற்றும் மாய்ஸ்சரைசர்க்கு இன்று இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. பல பெண்கள்&nbsp;கழுதைப்&nbsp;பாலில்&nbsp;இருந்து தயாரிக்கப்படும் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்

**ஆர்கானிக்கோ…**

டாடா&nbsp;இன்ஸ்டிடியூட்&nbsp;ஆப்&nbsp;சோஷியல்&nbsp;சயின்ஸில்&nbsp;எம்.ஏ&nbsp; படித்த&nbsp;பின்,&nbsp;டெல்லியைச்&nbsp;சேர்ந்த&nbsp;பூஜா&nbsp;கெளல்&nbsp;கழுதைப்&nbsp;பாலில்&nbsp;&nbsp; &nbsp; &nbsp; இருந்து&nbsp;தோல்&nbsp;பராமரிப்புப்&nbsp;பொருட்களை&nbsp; &nbsp; தயாரித்து&nbsp;விற்கும்&nbsp;“ஆர்கானிக்கோ”&nbsp;([https://organiko.in](https://organiko.in/))&nbsp;என்ற&nbsp;பெயரில்&nbsp;ஒரு ஸ்டார்ட்&nbsp;அப்&nbsp;கம்பெனி தொடங்கியிருக்கிறார்.

முறையாக வளர்க்கும் கழுதைகள்&nbsp;மூலம் கிடைக்கும் பால் தற்போது&nbsp;லிட்டருக்கு&nbsp;ரூ. 2,000&nbsp;மும் அதற்கு அதிகமும் இருக்கிறது. கழுதை&nbsp;பாலால்&nbsp;செய்யப்பட்ட&nbsp;சோப்,&nbsp;மாய்ஸ்ச்சரைசர்,&nbsp; கிரீம்&nbsp; ஆகியவை&nbsp;அமேசான்&nbsp;மற்றும்&nbsp;ஃபிளிப்கார்ட்&nbsp; &nbsp; &nbsp; போன்ற ஏராளமான&nbsp;ஆன்லைன்&nbsp;ஸ்டோர்களில் காணப்படுகின்றன,&nbsp;&nbsp; &nbsp; ஆனால்&nbsp;நீங்கள்&nbsp;அதன்&nbsp;விலையை&nbsp;பாரத்தால்&nbsp;ஆச்சரியப்படுவீர்கள்.100&nbsp;கிராம்&nbsp;சோப்புக்கு&nbsp;&nbsp; 500&nbsp;ரூபாய்&nbsp;வரை விற்கப்படுகிறது.

கழுதை&nbsp;பாலின்&nbsp;விலை,&nbsp;லிட்டருக்கு&nbsp;2000 &nbsp;ரூபாய்க்கு&nbsp;&nbsp; மேல்&nbsp; &nbsp; &nbsp; இருக்கும்போது,&nbsp;கழுதைகளின்&nbsp;எண்ணிக்கை கிட்டதட்ட&nbsp;&nbsp;வெறும்&nbsp;ஒரு&nbsp;லட்சமாக&nbsp;குறைந்துள்ளது. 2012&nbsp;ஆண்டுடன்&nbsp;ஒப்பிடும்போது&nbsp;கழுதைகளின்&nbsp;

எண்ணிக்கை&nbsp;61%&nbsp;குறைந்துள்ளது. 2012&nbsp;ஆம்&nbsp;ஆண்டில்&nbsp;விலங்குகளின்&nbsp;தொகை&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கணக்கெடுப்பில் &nbsp;கழுதைகளின்&nbsp;எண்ணிக்கை&nbsp;3.2&nbsp;&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; லட்சமாக&nbsp;இருந்தது,&nbsp;இது&nbsp;2019ஆம்&nbsp;ஆண்டின்&nbsp;&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கணக்கீட்டில்&nbsp;1.2&nbsp;லட்சமாக&nbsp;குறைந்து&nbsp;விட்டது.&nbsp;தற்போது வளர்ப்பு கழுதை விலை சுமார் ரூபாய் 80,000 முதல் 100,000 வரை இருக்கிறது.

**கேரளாவிலும்….**

இது போல பிரபலமான ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அபி தன்னுடைய வேலையை உதறி விட்டு கழுதை பண்ணை வைக்க கிளம்பினார். பின்னர் பல வருடங்கள்&nbsp;ஆராய்ச்சி செய்து கேரளாவில் 2 ஏக்கரில் 36 கழுதைகளுடன் பண்ணையை துவங்கினார். தற்போது இவர்&nbsp;கழுதைப்&nbsp;பாலில்&nbsp;இருந்து தயாரிக்கும் சோப், கிரீம்கள்&nbsp;ஆன்லைனில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. 44 கிராம் எடையுள்ள கிரீம் சுமார் 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இவரின்&nbsp;ஸ்டார்ட்&nbsp;அப்&nbsp;கம்பெனியின் இணையதள முகவரி&nbsp;[www.dolphiniba.com](http://www.dolphiniba.com/)

இதிலிருந்து என்ன தெரிகிறது….நீ கழுதை மேய்க்க தான் லாயக்கு என்று யாரும் இனி கூற முடியாது.